ஐதரசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐதரசீன்
Hydrazin.svg
Hydrazine-3D-vdW.png
ImageFile
Hydrazine-2D-A1.png
Hydrazine-3D-balls.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 302-01-2
பப்கெம் 9321
ஐசி இலக்கம் 206-114-9
KEGG C05361
ம.பா.த Hydrazine
ChEBI CHEBI:15571
வே.ந.வி.ப எண் MU7175000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
Beilstein Reference 878137
Gmelin Reference 190
3DMet B00770
பண்புகள்
வேதியியல் வாய்பாடு N2H4
மோலார் நிறை 32.0452 g mol−1
தோற்றம் Colourless liquid
அடர்த்தி 1.021 g cm−3
உருகுநிலை

2 °C, 275 K, 35 °F

கொதிநிலை

114 °C, 387 K, 237 °F

மட. P 0.67
ஆவியமுக்கம் 1 kP (at 30.7 °C)
காடித்தன்மை எண் (pKa) 8.10[3]
காரத்தன்மை எண் (pKb) 5.90
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.46044 (at 22 °C)
பிசுக்குமை 0.876 cP
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.85 D[4]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
50.63 kJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
121.52 J K−1 mol−1
தீநிகழ்தகவு
MSDS ICSC 0281
ஈயூ வகைப்பாடு விஷம் T சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N [5]
EU சுட்டெண் 007-008-00-3
NFPA 704

NFPA 704.svg

4
4
3
 
R-phrases R45, R10, R23/24/25, R34, வார்ப்புரு:R43, R50/53
S-phrases S53, S45, S60, S61
தானே தீபற்றும்
வெப்பநிலை
24 to 270 °C (75 to 518 °F; 297 to 543 K)
வெடிபொருள் வரம்புகள் 1.8–99.99%
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் நவச்சாரியம்

Diphosphane
Tetrafluorohydrazine

வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.


N2H4 எனும் மூலக்கூற்று வாய்ப்பாடுடைய அசேதனச் சேர்மமே ஐதரசீன் ('Hydrazine') ஆகும். இது நிறமற்ற, தீப்பற்றக்கூடிய, அமோனியா போன்ற வாடையுடைய திரவமாகும். இது மிகவும் நச்சுத்தன்மையானது. நிலைப்புத்தன்மை அற்றது. இது பல்வேறு பயன்களைக் கொண்டிருப்பதால் 2002ஆம் ஆண்டளவில் 260000 தொன் ஐதரசீன் உற்பத்தி செய்யப்பட்டது. பல்பகுதிய நுரைத் தயாரிப்பிலும், பல்பகுதியத்தைத் தயாரிக்கப் பயன்படும் வினைவேகமாற்றிகளை உருவக்கவும், மருந்து உற்பத்தியிலும், ரொக்கட்டுகளில் எரிபொருளாகவும் ஹைட்ரஸைன் பயன்படுகின்றது. மின்னுற்பத்தி நிலையங்களில் நீரில் கரைந்துள்ள ஒக்சிசன் அரிப்பை ஏற்படுத்துமென்பதால் ஒக்சிசனை அகற்ற இது பயன்படுகின்றது.

மூலக்கூற்று அமைப்பும் இயல்புகளும்[தொகு]

ஐதரசீனின் அடர்த்தி 1.021 g cm−3 ஆகும். எனினும் இதன் நீரேற்றப்பட்ட வடிவம் இதனை விட சிறிது அடர்த்தி கூடியது (1.032 g cm−3). ஐதரசன் அணு ஒன்றின் வெளியேற்றத்துடன் இரு அமோனிய மூலக்கூறுகள் இணைக்கப்பட்டமையை ஐதரசீனின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு காட்டுகின்றது. இரண்டு நைதரசன் அணுக்களுக்கு இடையே 1.45 Å (145 pm) இடைவேளி உள்ளது.

நீரில் கரைக்கப்படும் போது அமோனியா போன்ற காரத்தன்மையை ஐதரசீன் காட்டுகின்றது.

N2H4 + H2O → [N2H5]+ + OH

ஐதரசீன் தீப்பற்றக்கூடிய திரவமாகும். எரியும் ஒவ்வொரு கிலோகிராம் ஐதரசீனும் 194.1 x 105 J வெப்பத்தை வழங்கும் திறனுடையது.

உற்பத்தி[தொகு]

குளோரமைனையும் (அமோனியம் குளோரைட்டு) அமோனியாவையும் தாக்கத்துக்கு உட்படுத்துவதால் ஐதரசீனை உற்பத்தி செய்ய முடியும்.

NH2Cl + NH3 → H2N-NH2 + HCl

யூரியாவோடு அல்லது அமோனியாவோடு சோடியம் ஹைபோகுளோரைற்றைத் தாக்கத்துக்கு உட்படுத்துவதாலும் ஐதரசீனை உற்பத்தி செய்ய முடியும்.

(H2N)2C=O + NaOCl + 2 NaOH → N2H4 + H2O + NaCl + Na2CO3
2NH3 + NaClO → N2H4 + NaCl + H2O

அமோனியாவையும் ஐத்ரசன் பர ஒக்சைட்டையும் கொண்டும் இதனை உற்பத்தி செய்யலாம்.

2NH3 + H2O2 → H2N-NH2 + 2H2O

ரொக்கெட்டுகளில் ஐதரசீனின் பயன்பாடு[தொகு]

MESSENGER விண்வெளி ஓடத்துக்காக ஏற்றப்படும் ஐதரசீன். இப்படத்திலுள்ளவர் அணிந்துள்ள பாதுகாப்பு உடையைக் கவனிக்க


இரண்டாம் உலகப் போரிலேயே ஐதரசீன் முதன் முதலாக ரொக்கெட் எரிபொருளாகப் பயன்பட்டது. முதல் ரொக்கெட் பூட்டப்பட்ட விமானமான 'Messerschmitt Me 163B' இல் இது B-Stoff (நீரேற்றப்பட்ட ஐதரசீன்) என்ற பெயருடன் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது.

எரிபொருளாக மட்டுமன்றி தள்ளுகைப் பொருளாகவும் ஐதரசீன் பயன்படுகின்றது. இது இவ்வாறு தள்ளுகை ஆற்றலை வெளிப்படுத்த ஆக்சிசன் தேவைப்படாமையால் விண்வெளி ஓடங்களில் சிறிய தள்ளுகை ரொக்கெட்டுகளாகப் பயன்படுகின்றது. வைகிங், ஃபீனிக்ஸ் மற்றும் கியூரியோசிட்டி ஓடங்களில் இவ்வாறான சிறிய ரொக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

எல்லா ஐதரசீனைப் பயன்படுத்தும் தனித்தள்ளுகை இயந்திரங்களிலும் ஊக்க வினைவேகமாற்றிகள் தாக்கத்தைத் தூண்டவும் தொடரவும் பயன்படுத்தப்படுகின்றன. இரீடியம் உலோகத்தோடிணைந்த அலுமினா அல்லது நனோ கார்பன் நார்கள் அல்லது மொசிப்டினம் நைட்ரைட்டோடிணைந்த அலுமினா ஊக்கிகளாகப் பயன்படுகின்றன. இவை ஐதரசீனை ஐதரசன் மற்றும் நைதரசனாகப் பிரிகையுற உதவுகின்றன.

  1. 3 N2H4 → 4 NH3 + N2
  2. N2H4 → N2 + 2 H2
  3. 4 NH3 + N2H4 → 3 N2 + 8 H2

முதலாவது மற்றும் இரண்டாவது தாக்கங்கள் புறவெப்பத்தாக்கங்களாகும். வெப்பநிலையை சடுதியாக 800 °Cக்கு உயர்த்தும் ஆற்றல் இத்தாக்கங்களுக்கு உண்டு. மூன்றாவது தாக்கம் அகவெப்பத் தாக்கமாகும். இது வெப்பநிலையைக் குறைத்தாலும், இத்தாக்கம் அதிகளவு வாயுவை வெளியேற்றும் ஆற்றலுள்ளது. இவ்வனைத்துத் தாக்கங்களும் ஊக்கிகளில் தங்கியுள்ளதால் இத்தாக்கங்களை விரும்பியவாறு கட்டுப்படுத்தி ரொக்கெட்டுகளை இயக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "hydrazine - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. "NIOSH Guide - Hydrazine". Centers for Disease Control. பார்த்த நாள் 16 August 2012.
  3. Hall, H.K., J. Am. Chem. Soc., 1957, 79, 5441.
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419. 
  5. "Hydrazine safety data sheet".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசீன்&oldid=1590633" இருந்து மீள்விக்கப்பட்டது