சமாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
62 புரோமித்தியம்சமாரியம்யூரோப்பியம்
-

Sm

Pu
Sm-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
சமாரியம், Sm, 62
வேதியியல்
பொருள் வரிசை
லாந்த்தனைடுகள்
நெடுங்குழு, கிடை வரிசை,
வலயம்
இல்லை, 6, f
தோற்றம் வெள்ளி போன்ற வெண்மை
Sm,62.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
150.36(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f6 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 24, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்d
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
7.52 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
7.16 g/cm³
உருகு
வெப்பநிலை
1345 K
(1072 °C, 1962 °F)
கொதி நிலை 2067 K
(1794 °C, 3261 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
8.62 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
165 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
29.54 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1001 1106 1240 (1421) (1675) (2061)
அணுப் பண்புகள்
படிக அமைப்பு rhombohedral
ஆக்சைடு
நிலைகள்
3
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.17 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 544.5 kJ/(mol
2nd: 1070 kJ/mol
3rd: 2260 kJ/mol
அணு ஆரம் 185 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
238 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை antiferromagnetic
மின்தடைமை (அறை வெ.நி.) (α, பல்படிக) 0.940 µΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 13.3
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சிமை (r.t.) (α, பல்படிக)
12.7 மைக்ரோ மீ/(மீ·K)
µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 2130 மீ/நொடி
யங்கின் மட்டு (α வடிவம்) 49.7 GPa
Shear modulus (α வடிவம்) 19.5 GPa
அமுங்குமை (α வடிவம்) 37.8 GPa
பாய்சான் விகிதம் (α வடிவம்) 0.274
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
412 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
441 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-19-9
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: சமாரியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
144Sm 3.07% Sm ஆனது 82 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
146Sm syn 1.03×108ஆண்டு α 2.529 142Nd
147Sm 14.99% 1.06×1011ஆண்டு α 2.310 143Nd
148Sm 11.24% 7×1015y α 1.986 144Nd
149Sm 13.82% >2×1015 y α 1.870 145Nd
150Sm 7.38% Sm ஆனது 88 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
152Sm 26.75% Sm ஆனது 90 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
154Sm 22.75% Sm ஆனது 92 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

சமாரியம் (ஆங்கிலம்: Samarium) என்பது ஒரு வேதியியல் தனிமம். இது தனிம அட்டவணையில் Sm என்னும் தனிமக் குறியீடு கொண்டுள்ளது. இதன் அணுவெண் 62, மற்றும் இத் தனிமத்தின் அணுக்கருவில் 88 நொதுமிகள் உள்ளன.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

சமாரியம் ஒரு அரிதில் கிடைக்கும் காரக் கனிமம். பார்ப்பதற்கு வெள்ளியைப் போல பளபளப்பாக வெண்ணிறத்தில் இருக்கும் லாந்த்தனைடு வகை மாழை. காற்று பட்டால் ஓரளவுக்கு சிதைவுறாமலும் மங்காமலும் நிலையாக இருக்கும். காற்றில் 150 °C வெப்பநிலையில் தீபற்றும். எண்ணெய்க்கடியில் வைத்திருந்தாலும் சிறுகச் சிறுக காலப்போக்கில் ஆக்ஸிஜன் ஏற்றம் பெற்று சாம்பல்-மஞ்சள் நிறம் பெற்ற ஆக்ஸைடு-ஹைட்ராக்ஸைடு பொடியாகின்றது. இம்மாழை மூன்று வகையான படிக மாற்றங்கள் அடைகின்றன. அறை வெப்பநிலையில் இருந்து அடையும் உரு மாற்றங்கள் 734 °C மற்றும் 922 °C வெப்பநிலைகளில் அடைகின்றன.

பயன்பாடுகள்[தொகு]

வரலாறு[தொகு]

1853 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் ழ்சான் சார்லெ கலிசார்ட் டெ மரின்யாக் என்பவர் டிடிமியம் என்னும் பொருளைக் கொண்டு ஒளிமாலை ஆய்வுகள்செய்த மொழுது ஒளி உள்வாங்கும் அலைநீளங்களைத் துல்லியமாக அளந்த பொழுது சமாரியத்தைக் கண்டு பிடித்தார். பிரான்சில் உள்ள [[பாரிசு}|பாரிசில்]] 1879ல் பால் எமில் பௌத்ரன் என்பவர் சமார்ஸ்கைட் (Y,Ce,U,Fe)3(Nb,Ta,Ti)5O16) என்னும் கனிமத்தில் இருந்து சமாரியத்தைப் பிரித்தெடுத்தார். ஊரல் மலைப்பகுதிகளில் சமார்ஸ்கைட் கிடைத்திருந்தாலும், 1870களில் ஐக்கிய அமெரிக்கா\அமெரிக்காவில் உள்ள வட கரோலைனா மாநிலத்தில் கண்டுபிடித்த புதிய படிவுகளில் இருந்தே சமாரியம் உள்ள டிடிமியம் என்னும் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

சமார்ஸ்கைட் என்னும் பெயர் 1854 ல் உருசிய சுரங்க பொறியாளர்களில் தலைவராக இருந்த வாசில் சமார்ஸ்கி-பிக்கோவெட்ஸ் என்பாரைப் பெருமைப்படுத்துவதாக அவர் உயிருடன் இருந்த பொழுதே வழங்கப்பட்டது.

கிடைக்கும் மலிவு[தொகு]

சமாரியம் தனியாக கிடப்பதில்லை. மற்ற அரிதாகக் கிடைக்கும் தனிமங்களைப்போலவே இதுவும் பிற கனிமங்களில் உள்ள கலவைகளில் இருந்து எடுக்கப்படுகின்றது. மோனசைட், பாஸ்ட்னாசைட், சமார்ஸ்கைட் ஆகிய கனிமங்களில் இருந்து சமாரியம் கிடடக்கின்றது. மோனசைட் என்னும் கனிமத்தில் 2.8% ம், சமார்ஸ்கைட்டில் 1% அளவும் சமாரியம் கிடக்கின்றது. மின்மவணு-மாற்றிகளில்ன் வழியும், மின்வேதியல் படிவுகளின் வழியும், சமாரியம் (III) குளோரைடு சோடியம் குளோரைடு ஆகியவை சேர்ந்துருகிய கலவைகளில் மின் பகுப்பாய்வு வழியும் சமாரியம் பிரித்தெடுக்கப்படுகின்றது. சமாரியம் ஆக்ஸைடில் இருந்து லாந்த்தனம் வழி ஆக்ஸிஜன் இறக்க வினைகளின் வழியும் சமாரியம் பிரித்தெடுக்கப்படுகின்றது.

கூட்டுப் பொருட்கள்[தொகு]

அயோடைடுகள் • ** SmI2

ஓரிடத்தான்கள்[தொகு]

முன்காப்புச் செய்திகள்[தொகு]

மற்ற லாந்த்தனைடுகள் போலவே சமாரியமும் குறைந்த அல்லது இடைப்பட்ட நச்சுத்தனமை கொண்டது. என்றாலும் இதன் நச்சுத்தன்மைகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் விரிவாக செய்யப்படவில்லை.

மேற்கோள்கள் குறிப்புகள்[தொகு]

  1. N. N. Greenwood, A. Earnshaw, Chemistry of the Elements, Pergamon Press, Oxford, UK, 1984.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்&oldid=2437500" இருந்து மீள்விக்கப்பட்டது