எடுத்துக்காட்டாக, சிதைவுறும் போது துகளை உமிழ்ந்து தோரியமாக(thorium) மாறுகிறது.
இது பொதுவாக இவ்வாறு எழுதப்படும்:
ஆல்ஃபா சிதைவு பொதுவாக கனமான அணுக்கருக்களில் நிகழ்கிறது. கோட்பாட்டளவில், ஒவ்வொரு அணுக்கருனிக்குமான ஒட்டுமொத்த பிணைப்பாற்றல் அதிகமாக இல்லாமலும், அதனால் அணுக்கருக்கள் தன்னிச்சையான பிளவு-வகை செயல்முறைகள் நோக்கில் நிலையற்றதாகவும் உள்ள நிக்கலை (தனிமம் 28) விட கனமான கருக்களில் மட்டுமே நிகழும். நடைமுறையில், இந்தச் சிதைவுமுறை நிக்கலை( nickel) விட வெகுகனமான அணுக்கருக்களில் மட்டுமே அறியப்படுகிறது. அறியப்பட்ட பாரம் குறைந்த ஆல்ஃபா உமிழ்ப்பான்கள் டெல்லூரியத்தின் (தனிமம் 52) மென்மையான ஓரிடத்தான்கள் (நிறைவு எண்கள் 104-109) ஆகும். விதிவிலக்காக, பெரிலியம்-8 இரண்டு ஆல்ஃபா துகள்களாகச் சிதைகிறது.