என்ரிக்கோ பெர்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என்ரிக்கோ பெர்மி
Enrico Fermi
Enrico Fermi 1943-49.jpg
பிறப்பு செப்டம்பர் 29, 1901(1901-09-29)
ரோம், இத்தாலி
இறப்பு நவம்பர் 28, 1954(1954-11-28) (அகவை 53)
சிக்காகோ, இலினோய்,  அமெரிக்கா
குடியுரிமை இத்தாலி (1901-1938)
ஐக்கிய அமெரிக்கா (1944-1954)
துறை இயற்பியல்
பணியிடங்கள் Scuola Normale Superiore
University of Göttingen
University of Leiden
University of Rome La Sapienza
கொலம்பியா பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள் Scuola Normale Superiore
ஆய்வு நெறியாளர் லியூஜி புச்சியாண்டி
அறியப்படுவது புதிய கதிரியக்கத் தனிமங்கள்
கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு தொடர்வினை,
பெர்மி-டிராக் புள்ளியியல்
பீட்டா சிதைவுக் கொள்கை
விருதுகள் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1938)

என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi; செப்டம்பர் 29, 1901நவம்பர் 28, 1954) என்பவர் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞராவார். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியமைக்காகவும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். ஃபெர்மி தூண்டல் கதிரியக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1938-ம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1]. 1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.

இளமைப் பருவம்[தொகு]

என்ரிகோ பெர்மி 1901 செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில், தன் தந்தைக்கு மூன்றாம் மகனாக பிறந்தார். இவரின் தந்தை அல்பெட்ரோ ஃபெர்மி, இரயில்வே துறையில் பணியாற்றியவர். இவர்கள் கிறித்தவக் கத்தோலிக்கப் பிரிவை சார்ந்தவர்கள். இவருக்கு ஒரு சகோதரனும் (கியோலியோ) ஒரு சகோதரியும் (மரியா) இருந்தனர். சிறு வயதிலேயே இயற்பியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்துப் இயற்பியலில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது கதிரியக்க ஆய்வுக்காக 21 ஆம் அகவையில் முனைவர் பட்டம் பெற்றார். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக் கொள்கையைத் தோற்றுவித்தார்.

ஆரம்ப அறிவியல் ஈடுபாடு[தொகு]

இளமைப் பருவத்தில் தனது அண்ணனுடன் சேரந்து கையில் கிடைக்கும் இயந்திரங்களை எல்லாம் உடைத்து பிரித்து பார்ப்பார் என்ரிக்கோ. அவரின் அண்ணன் 1915 இல் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது அதிர்ச்சி தாங்க முடியாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆனார். தன் அண்ணன் இறந்த மருத்துவமனையின் முன்பே சுற்றி திரிந்தார். அப்போது தான் இயற்பியல் புத்தகங்களை அவர் படித்தார். பின் தன் பதினேழாம் அகவையில் என்ரிக்கோ எழுதிய பல்கலைகழக நுழைவுத் தேர்வின் கட்டுரையை படித்த ஆசிரியர் 'அந்தக் கட்டுரைக்கு முனைவர் பட்டமே தரலாம்' என்று வியந்து பாராட்டினாராம்.

ஆய்வுகள்[தொகு]

இலத்திரன் அணுக்களின் ஓட்டம் குறித்த ஆய்வுகள் மற்றும் அவை நிறமாலையாய்ப் பிரிவது பற்றியும் ஃபெர்மி ஆரம்ப ஆய்வினை மேற்கொண்டார். ஓர் அணுவின் வெளி வட்டப் பாதையில் சுழலும் இலத்திரனில் ஆரம்பித்த ஃபெர்மி தனது ஆய்வினை முன்னேற்றி மையக் கருவான அணுக்கருவுக்கே சென்றார். அதுவே அவரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் அணுக்கருவைப் பிளக்க முடியும் என்பதை அந்தச் சமயத்தில் வாழ்ந்த இயற்பியலார் ச்ட்ரஷ்மேன் கூறினார். இதைப் படித்த ஃபெர்மி தூண்டல் கதிரியக்கம் (Chain Reaction) நடைபெறுவதைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினார். இதுவே அவர் நோபல் பரிசு பெறக் காரணமான துறை ஆகும். தனது 22 ஆவது வயதில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டில் அணுசக்தியின் ரகசியம் இருப்பதைச் சொன்னர் ஃபெர்மி. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேகமற்ற நியூத்திரன் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார் ஃபெர்மி.

எக்சலென்சா[தொகு]

என்ரிக்கோவின் அறிவியல் திறமையைப் பாராட்டி பெனிட்டோ முசோலினி, உலக அளவில் இயங்கும் மிக உயரிய விருதான 'அறிவியல் வித்தகர்' என பொருள்படும் "எக்சலென்சா" என்னும் விருதினை அளித்து பாராட்டினார். ஒருமுறை அறிவியல் கழகங்கள் நடத்திய ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார் ஃபெர்மி. அந்த கூட்டத்திற்கு சிறப்புரை ஆற்ற வந்தவர் முசோலினி. அனைத்து அறிவியளாளர்களும் மகிழுந்தில் வந்து இறங்க, ஃபெர்மி மட்டும் மிகவும் எளிமையாக நடந்து, மிகவும் சாதாரண உடை அணிந்து வந்தார். சாதாரண மக்கள் போல் காட்சி அளித்த ஃபெர்மியை காவலாளி உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். மறுத்த காவலாளியிடம் மல்லுக்கு நிற்கவில்லை ஃபெர்மி. தான் இன்னார் என்றும், முசோலினிக்கு என்னை நன்றாக தெரியும் என்றோ ஃபெர்மி கூறவில்லை. ஏனெனில், சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை என்று ஃபெர்மிக்கு நன்றாக தெரியும். அதனால், அவர் 'நான் ஃபெர்மியின் கார் ஓட்டி, காலை வேலைக்கு தாமதமாக வந்துவிட்டேன், திரும்பும் போதாவது அய்யாவை அழைத்து செல்ல வேண்டும்' என்று கூறவே காவலாளி அனுமதித்தான், என்று தன் சுயசரிதையில் ஃபெர்மி குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் ஃபெர்மியின் எளிமையான குணத்தை கூறுகிறது.

முதல் அணுக்கரு உலை[தொகு]

மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய ஃபெர்மி, ஹான்ஃபோர்ட் அணுக்கரு உலை நிறுவுவதிலும் பெரும் பங்கு ஆற்றினார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942 இல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார். அனைத்து கணக்கீடுகளையும் சரியாக வடிவமைத்து அன்றைய இயற்பியலின் உச்சியில் ஏறி நின்றார் பெர்மி.

நோபல் பரிசு[தொகு]

தனது தூண்டல் கதிரியக்கத்திற்காக எக்சலென்சா என்ரிக்கோ ஃபெர்மி சுவீடனில் மிக உயரிய விருதான நோபல் பரிசை பெற்றார்.

அமெரிக்கா குடிபெயர்வு[தொகு]

ஹிட்லர் போல முசோலினியும் இனவெறிக் கொள்கையைப் பின்பற்ற, தனது மனைவியான யூதப் பெண்மணிக்கு ஆபத்து நேருமோ என்று எண்ணி சுவீடனில் நோபல் பரிசு பெற்ற கையோடு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் ஃபெர்மி. பின் தனது தாய் நாடான இத்தாலிக்கு அவர் செல்லவே இல்லை. மேலும் தனது இறுதிக் காலத்தை ஃபெர்மி தனிமையிலேயே கழித்தார்.

இறப்பு[தொகு]

1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில் பெர்மி எதிர்பாராத விதமாகப் வயிற்று புற்று நோயினால் காலமானார். அவருடன் பணி புரிந்த இரு மாணவர்களும் அவருடனேயே புற்றுநோயின் காரணமாக இறந்தார்கள்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் (பாகம் 1), விகடன் பிரசுரம், அணுஆட்டம் , விகடன் பிரசுரம்.

  1. Snow, Charles (1981). The Physicists: A Generation that Changed the World. Little Brown. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ரிக்கோ_பெர்மி&oldid=2228374" இருந்து மீள்விக்கப்பட்டது