உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லெம் வீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லெம் வீன்
பிறப்புவில்லெம் காரல் வெர்னர் ஓட்டோ ஃபிரிட்ஸ் பிரான்ஸ் வீன்
(1864-01-13)13 சனவரி 1864
பிரசியா
இறப்பு30 ஆகத்து 1928(1928-08-30) (அகவை 64)
முனிச், ஜெர்மனி
தேசியம்ஜெர்மானியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்University of Giessen
University of Würzburg
மியூனிக் பல்கலைக்கழகம்
RWTH Aachen
கல்வி கற்ற இடங்கள்கோட்டிஞென் பல்கலைக் கழகம்
பெர்லின் பல்கலைக் கழகம்
ஆய்வு நெறியாளர்ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்ஜ்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Karl Hartmann
Gabriel Holtsmark
அறியப்படுவதுகரும்பொருள் கதிர்வீச்சு
வியன் இடப்பெயர்ச்சி விதி
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1911)
துணைவர்லூயிஸ் மெஹ்லர்(1898)

வில்லெம் வீன் என்றழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன் (Wilhelm Carl Werner Otto Fritz Franz Wien , ஜனவரி 13, 1864ஆகஸ்ட் 30 1928) வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியவர். ஜெர்மன் நாட்டைச் சார்ந்த அறிவியல் அறிஞர். அனைத்துவகைக் கதிர்களையும் உள்ளிழுக்கும் தன்மை வாய்ந்த கரும்பொருள் ஒன்றை வரையறைப் படுத்தியவர். வெப்பக்கதிர்வீச்சு குறித்த பங்கீட்டு விதிகளை உருவாக்கியவர். 1911 ஆம் வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பரிசு பெற்றவர்.

வாழ்க்கை வரலாறு‍

[தொகு]

பிரஷ்ஷயாவில் 1864 ஜனவரி 13 இல் பிறந்தார். 1879 இல் ராஷ்டன் பர்க்கில் உள்ள பள்ளியிலும் 1880-82 இல் கெய்டல் பர்க் நகரில் உள்ள பள்ளியிலும் படித்துள்ளார். 1882 இல் கோட்டிஞ்சென் பல்கலைக் கழகத்திலும் பின்னல் பெர்லின் பல்கலைக் கழகத்திலும் உயர் கல்வி பெற்றார். 1883-85 இல் கார்மன் வான் கெல்மோல்ட்ஜ் என்ற அறிவியல் அறிஞரின் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றினார்.
[1]

1883 இல் வெப்பவியல், மின்காந்தவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வீன் இடப்பெயர்ச்சி விதியை (Wien's displacement law) உருவாக்கினார். உலோகங்களில் ஏற்படும் ஔியின் விளிம்பு விளைவு (Diffraction of light) ஔி விலகலின் போது‍ பல்வேறு‍ பொருட்களினால் வண்ணங்களில் ஏற்படும் தாக்கம் குறித்து‍ ஆய்வுகள் செய்து‍ 1886 ஆம் ஆண்டு‍ முனைவர் பட்டம் பெற்றார்.[1]

ஆய்வுகள்

[தொகு]
  • 1896 இல் வெப்ப இயக்கவியல் வெப்பக் கதிர்வீச்சிற்கான விதிகள் பற்றிய கோட்பாடுகளிலும் வெற்றிடத்தில் மின்னிறக்கம் (electric discharge) நடைபெறுவதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
  • கால்வாய்க் கதிர்கள் (canal rays)
  • 1899 இல் நீர்ம இயக்கவியல் (Hydrodynamics)
  • 1900 இல் மின்காந்த அடிப்படையில் எந்திரவியல் என்ற கோட்பாட்டு‍ ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்.
  • 1912 மற்றும் 1918 ஆகிய ஆண்டுகளில் நேர்மின் கதிர்களைப் பற்றி மேலும் பல ஆய்வுகளில் ஈடுபட்டார். நியூட்டனின் இயற்பியல் கோட்பாடு‍களிலிருந்து‍ துகற் கற்றை இயற்பியலுக்கு‍ (Mass spectroscopy) மாறும் வகையில் வீனின் ஆய்வுகள்.[1]

இறப்பு

[தொகு]

1928 ஆம் ஆண்டில் தனது‍ 64 ஆவது‍ வயதில் இறந்தார்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ஏசிஎஸ், மணி (ஜனவரி 2014). "தடம்பதித்த விஞ்ஞானிகள் 40". புதிய ஆசிரியன். Archived from the original on 2016-01-09. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 7, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்_வீன்&oldid=3531491" இலிருந்து மீள்விக்கப்பட்டது