ஜேம்ஸ் பிராங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் பிராங்க்
James Frank
James Franck.jpg
பிறப்பு ஆகஸ்ட் 26, 1882(1882-08-26)
பிறப்பிடம் ஆம்பர்க், செருமனி
இறப்பு மே 21, 1964 (அகவை 81)
இறப்பிடம் கோட்டின்கன், மேற்கு செருமனி
தேசியம் செருமன்
துறை இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள் ஐடெல்பெர்கு பல்கலைக்கழகம்
பெர்லின் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   எமில் நார்புர்க்
அறியப்படுவது பிராங்க்-கொண்டோன் தத்துவம்
பிராங்க்-எர்ட்சு பரிசோதனை
விருதுகள் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1925)
சமயம் யூதம்

ஜேம்ஸ் பிராங்க் (James Franck, 26 ஆகத்து 1882 – 21 மே 1964) செருமானிய இயற்பியலாளர். பல்வேறு வளிமங்களில் இலத்திரன்களின் பண்புகள் குறிப்பாக "போர் எடுகோள்களின் அடிப்படைக் கூறுகளை ஆய்வு செய்து அக்கொள்கையை மெய்ப்பித்தமைக்காக 'குஸ்டாவ் லுட்விக் ஹெர்ட்ஸ் என்பவருடன் சேர்ந்து 1925 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்.

ஒரு பொருளிலுள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது மூலக்கூறுகள் உருவாவதும், சிதைவதும் ஏற்படுகிறது. அப்போது அவை அதிர்வுறுகின்றன; சுழல்கின்றன. அதனால் ஏற்படும் மாற்றத்திற்கான வரைபட வளைவுகளை இரு அணுத் தொகுதிகளுக்கு உருவாக்கிய உடனே, ஈரணு மூலக்கூறுகள் அவற்றின் கற்றை நிறமாலைத் தொகுதி அமைப்பிலிருந்து மாறுபடுகின்றன. இவ்வாறு மாறுபடுவதைத் தீர்மானிக்கத் தேவையான முறைகளை வகுத்தவர் 'ஜேம்ஸ் பிராங்க்'.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பிராங்க்&oldid=1998658" இருந்து மீள்விக்கப்பட்டது