உள்ளடக்கத்துக்குச் செல்

சார்லஸ். எச். டவ்ன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார்லஸ் ஹார்ட் டவுன்ஸ் (Charles Hard Townes ஜூலை 28, 1915   - ஜனவரி 27, 2015) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார் . [1] [2] 1964 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை நிகோலே பாசோவ் மற்றும் அலெக்சாண்டர் புரோகோரோவ் ஆகியோருடன் இணைந்து பெற்றுக் கொண்டார். [3] டவுன்ஸ் அமெரிக்க அரசாங்கத்தின் ஆலோசகராக இருந்தார்.1945 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக இருந்த ஹாரி ட்ரூமன் முதல் 1999 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வரை இவர் அமெரிக்க அரசாங்கத்தின் ஆலோசகராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் ஜேர்மனிய இனத்தவர் மற்றும் ஸ்காட்டிஷ், ஆங்கிலம், வெல்ஷ், ஹுஜினோட் பிரஞ்சு மற்றும் ஸ்காட்ச் ஐரிஷ் ஆகிய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். [4]டவுன்ஸ் தென் கரோலினாவின் கிரீன்வில்லில் பிறந்தார். இவரது தந்தை ஹென்றி கீத் டவுன்ஸ் (1876-1958), ஒரு வழக்கறிஞராக இருந்தார். மற்றும் இவரது தாய் எலன் சம்மர் டவுன்ஸ் (நீ ஹார்ட்; 1881-1980) ஆவார். [5] அவர் ஃபர்மன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளாம் அறிவியல் பட்டமும் மற்றும் நவீன மொழிகளில் இளங்கலைப் பட்டத்தினை 1935 ஆம் ஆண்டில் பெற்றார். [1] டவுன்ஸ் 1937 ஆம் ஆண்டில் டியூக் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலை அறிவியலில் பட்டப்படிப்பை முடித்தார், [6] பின்னர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் 1939 அம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். இரண்டாம் உலகப் போரின் போது, பெல் ஆய்வுக் கூடங்களில் தொலைக் கண்டுனர்வி குண்டுவெடிப்பு முறைகளில் பணியாற்றினார்.

தொழில் மற்றும் ஆராய்ச்சி

[தொகு]

1950 ஆம் ஆண்டில், டவுன்ஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். [1] 1950 முதல் 1952 வரை கொலம்பியா கதிர்வீச்சு ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். அவர் 1952 முதல் 1955 வரை இயற்பியல் துறையின் தலைவராக இருந்தார்.

1953 ஆம் ஆண்டில், டவுன்ஸ், ஜேம்ஸ் பி. கார்டன் மற்றும் ஹெர்பர்ட் ஜே. ஜீகர் ஆகியோருடன் இணைந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதல் அம்மோனியா மேசரை உருவாக்கினார் . [1]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மரபு

[தொகு]

டவுன்ஸ் 1941 ஆம் ஆண்டில் வீடற்றவர்களுக்கு சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலரான பிரான்சிஸ் எச். பிரவுனை மணந்தார் [7] . கலிபோர்னியாவின் பெர்க்லியில் வாழ்ந்த இவர்களுக்கு லிண்டா ரோசன்வீன், எலன் ஆண்டர்சன், கார்லா கெஸ்லர் மற்றும் ஹோலி டவுன்ஸ் ஆகிய நான்கு மகள்கள் இருந்தனர். [1]

டவுன்ஸ் தனது 99 வயதில் கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் ஜனவரி 27, 2015 அன்று இறந்தார். [8] "அவர் கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான சோதனை இயற்பியலாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்" என்று பெர்க்லியில் இயற்பியல் பேராசிரியரான ரெய்ன்ஹார்ட் ஜென்செல் டவுன்ஸ் பற்றி கூறினார்.கிறித்துவ மதத்தின் மீது இவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். [9]

விருதுகள் மற்றும் கவுரவங்கள்

[தொகு]

1964 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை நிகோலே பாசோவ் மற்றும் அலெக்சாண்டர் புரோகோரோவ் ஆகியோருடன் இணைந்து பெற்றுக் கொண்டார். 1956 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அகாதமியின் நிரந்த உறுப்பினராக ஆனார்.1957 ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.1959 ஆம் ஆண்டில் ரிச்மயர் நினைவு விருதினைப் பெற்றார்.1945 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக இருந்த ஹாரி ட்ரூமன் முதல் 1999 ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வரை இவர் அமெரிக்க அரசாங்கத்தின் ஆலோசகராக இருந்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Charles H. Townes — Biographical". Nobelprize.org. 2006. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.
  2. "Remembering Charles Townes". Furman University. 2015-01-27. Archived from the original on 2015-01-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Nobel laureate and laser inventor, Charles Hard Townes, dies at 99". Berkeley.edu. 2015-01-27. பார்க்கப்பட்ட நாள் January 27, 2015.
  4. "Charles Townes". www.aip.org (in ஆங்கிலம்). 2015-04-17. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
  5. "Notable South Carolinians- Dr. Charles Hard Townes | Indigo Blue". Indigobluesc.com. 1915-07-28. Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-22.
  6. "Charles Townes". The Array of Contemporary American Physicists. Archived from the original on 23 February 2016. பார்க்கப்பட்ட நாள் 30 December 2015.
  7. admin. "Celebrating the 100th Birthday of Frances H. Townes". Youth Spirit Artworks. பார்க்கப்பட்ட நாள் 2016-03-14.
  8. "Charles H. Townes Dies at 99; He Envisioned the Laser, Bringing It Into Daily Life". The New York Times. 2015-01-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
  9. Henry, David. "Pioneer of James Bond's Laser, Dies at 99". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்._எச்._டவ்ன்ஸ்&oldid=3553515" இலிருந்து மீள்விக்கப்பட்டது