உள்ளடக்கத்துக்குச் செல்

லியோன் கூப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோன் என் கூப்பர்
2007 இல் கூப்பர்
பிறப்புபெப்ரவரி 28, 1930 (1930-02-28) (அகவை 94)
பிராங்க்ஸ் பல்கலைக்கழகம், நியூயார்க். ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்பிரவுன் பல்கலைக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம் (இளங்கலைப் பட்டம் 1951, முதுகலைப் பட்டம் 1953, முனைவர் பட்டம் 1954)
ஆய்வு நெறியாளர்ராபர்ட் செர்பர்
அறியப்படுவதுமீக்கடத்துத் திறன்
கூப்பர் ஜோடி
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1972)
இயற்பியலுக்கான காம்ஸ்டாக் பரிசு (1968)

லியோன் என் கூப்பர் (Leon N Cooper[1]) (பிப்ரவரி 28, 1930 ): அமெரிக்க இயற்பியலாளரும் நரம்பிணைப்புகளின் மீக்கடத்துத்திறன் குறித்து ஆய்வு செய்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார்.[2][3] இவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்கள் ஜான் பார்டீன், ஜான் ராபர்ட் சிறீபர் ஆகியோராவர்.. மேலும் மீக்கடத்துத் திறன் பற்றிய பி.சி.ஸ் கோட்பாட்டினை விரிவாக்கி சீர் செய்தவர்கள் ஆவார்கள். நரம்பிணைப்புகளின் மீள்தன்மை (பி.சி.எம் ஆய்வு) குறித்த ஆய்வு இவரது பெயரால் கூப்பர் ஜோடி ஆய்வு என அழைக்கப்படுகிறது.[4]

கல்வியும் பணிகளும்

[தொகு]

கூப்பர் 1947 ஆம் ஆண்டில் பிராங்க்ஸ் அறிவியலுக்கான உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[5][6]. 1951 இல் இளங்கலைப் பட்டமும்[7] 1953 இல் முதுகலைப் பட்டமும் பெற்றார் [7] 1954 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[7][8] இவர் ஒருவருட காலம் உயர்தர கல்விக்கான நிறுவனத்திலும், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திலும் ஓஹியோ பல்கலைக் கழகத்திலும் பனியாற்றினார். பின்பு 1958 இல் பிரவுன் பல்கலைக்கழகத்திலும் பணியில் சேர்ந்தார்.[8] இவர் தாமஸ் ஜே. வாட்சன் Sr. பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த போது அவருக்கு அறிவியல் பேராசியராய் இருந்தார். மேலும் மூளை மற்றும் நரம்பியல் அமைப்பு நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றினார்.. 1969 இல் கூப்பர் காய் அல்லார்ட் என்பவரை மணந்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மனைவி காய் அல்லார்ட் உடன் கூப்பர்.1972

1969 இல் கூப்பர் காய் அல்லார்ட் என்பவரை மணந்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்..[9]

அவர் இன்ஸ்டிடுயூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நியூக்ளியர் ஆய்வுக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பு உட்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டார். கொலம்பியா பிராட்கேஸ்டிங் சிஸ்டம் என்ற நிறுவனம் தயாரித்த நகைச்சுவைத் திரைப்படமான தி பிக் பேங் தியரியில் இடம்பெற்ற கதாபாத்திரமான ஷெல்டன் கூப்பர், என்ற பாத்திரப் பெயர் இவருடைய நினைவால் பின்னாளில் பெயரிடப்பட்டதாகும்.[10]

உறுப்பினரும் பெருமதிகளும்

[தொகு]
  • அமெரிக்கன் பௌதீக சங்கத்தின் உறுப்பினர்
  • கலை மற்றும் அறிவியல் அமெரிக்க அகாடமி உறுப்பினர்
  • அறிவியல் தேசிய அகாடமியின் உறுப்பினர்
  • அமெரிக்கன் தத்துவ சங்கத்தின் உறுப்பினர்
  • அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினர்
  • நரம்பியல் ஆராய்ச்சி திட்ட இணை உறுப்பினர்
  • ஆல்ஃபிரெட் பி. சலோன் ஃபவுண்டேஷனின் ஆராய்ச்சி உறுப்பினர் (1959-1966)
  • ககன்ஹைம் நிறுவன உறுப்பினர்(1965-66)
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு (1972) [7]
  • தேசிய அறிவியல் அகாடமியில் (1968) இயற்பியலுக்கான காம்ஸ்டாக் பரிசினை சிரீபருடன் பகிர்ந்துகொண்டார்.
  • கொலம்பியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவப்பேராசிரியர் விருது பெற்றார்
  • டெஸ்கார்ட்ஸ் பதக்கம் , அகாடமி டி பாரிஸ், யுனிவர்சிட்டி ரெனெ டெஸ்கார்ட்ஸ் ஆகியவற்றைப் பெற்றார்.
  • கொலம்பியா கல்லூரியின் ஜான் ஜே விருது (1985)[7]
  • ஏழு மதிப்புறு முனைவர் பட்டம்[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Many printed materials, including the Nobel Prize website, have referred to Cooper as "Leon Neil Cooper". However, the middle initial N does not stand for Neil, or for any other name. The correct form of the name is, thus, "Leon N Cooper", with no abbreviation dots
  2. "Superconductivity". CERN official website. CERN.
  3. Weinberg, Steven (February 2008). "From BSC to the LHC". CERN Courier 48 (1): 17–21. https://cds.cern.ch/record/1734155. 
  4. Bienenstock, Elie (1982). "Theory for the development of neuron selectivity: orientation specificity and binocular interaction in visual cortex". The Journal of Neuroscience 2 (1): 32–48. பப்மெட்:7054394. 
  5. "Bronx Science Honored as Historic Physics Site by the American Physical Society". bxscience.edu. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
  6. MacDonald, Kerri (15 October 2010). "A Nobel Laureate Returns Home to Bronx Science". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2010/10/16/nyregion/16nobel.html. பார்த்த நாள்: 27 July 2012. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 "Leon Cooper". research.brown.edu.
  8. 8.0 8.1 Vanderkam, Laura (15 July 2008). "From Biology to Physics and Back Again: Leon Cooper". Scientific American. http://www.scientificamerican.com/article.cfm?id=biology-physics-cooper-westinghouse. பார்த்த நாள்: 27 July 2012. 
  9. Carey, Charles W. (2014). American Scientists. Infobase Publishing. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0807-0.

</nowiki>

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோன்_கூப்பர்&oldid=2907324" இலிருந்து மீள்விக்கப்பட்டது