பிரௌன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பிரௌன் பல்கலைக்கழகம் (Brown University) என்பது ரோட் தீவின் தலைநகர் பிராவிடென்சில் உள்ள தனியார் ஐவி லீக் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். 1764இல் ரோட் தீவு & பிராவிடன்சு பண்ணைகளின் ஆங்கில காலனிகளின் கல்லூரி என ஆரம்பிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் தொடங்கப்பட்ட உயர்கல்விக்கான ஏழாவது கல்லி நிறுவனம் ஆகும். இது அமெரிக்க புரட்சிக்கு முன் தொடங்கப்பட்ட ஒன்பது காலனி கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] இது தொடங்கப்பட்ட போது அமெரிக்காவில் எந்த மதத்தவரையும் ஏற்றுக்கொள்ளும் முதல் கல்லூரியாக விளங்கியது[2]. இதன் பொறியியல் பிரிவு 1847இல் தொடங்கப்பட்டது. ஐவி லீக் கல்லூரிகளில் இது முதன்முறையாகும். 1887இல் முதுகலைப பட்ட படிப்பையும் முனைவர் பட்ட படிப்பையும் சேர்த்த இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவில் ஆரம்பகாலத்தில் முனைவர் பட்டத்தை கொடுத்த சிலவற்றில் ஒன்றாகும்[3] . இதன் புது பாடத்திட்டம் சில முறை கல்விதிட்ட தேற்றம் என்று அழைக்கப்பட்டது, மாணவர்களின் முயற்சியால் 1969இல் இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் பிரௌன் பாடத்திட்டம் என்ற பெயரில் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இப்பாடத்திட்டத்தில் கட்டாய பொது கல்வி நீக்கப்பட்டு மாணவர்கள் எந்த பாடத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்கள்[4] . 1971இல் பிரௌன் பெண்கள் கல்லூரியான பெம்புரோக் கல்லூரியை பல்கலைகழகத்துடன் இணைத்தது.இப்போது பெம்புரோக் வளாகத்தில் பிரௌனில் படிக்கும் ஆண்களுக்கும் அறை ஒதுக்கப்படுகிறது.

இளங்கலை பட்டப்படிப்பில் சேருவது கடினமாகும் 2022 ஆண்டுக்கான ஒப்புக்கொள்ளும் விகிதம் 7.2% ஆகும். [5] பல்கலைக்கழகம் கல்லூரி, அல்பெர்ட் மருத்துவ பள்ளி, பொறியியல் பள்ளி, பொது நலம் மற்றும் தொழிற்கல்வி இன்னும் பலவற்றை கொண்டுள்ளது. பிரௌனின் வெளிநாட்டு நிகழ்வு, வெளிநாட்டு பொது நிகழ்வுக்கான வாட்சன் நிறுவனத்தின் மூலம் நடைபெறுகிறது. கடல்வாழ் விலங்குகளின் உயிரியல் சோதனைகூடம், ரோட் தீவின் வடிவமைப்பு பள்ளி ஆகியவை இப்பல்கலையுடன் கல்வி முறையில் இணைக்கப்பட்டுள்ளன. பிரௌன் பல்கலையும் ரோட் தீவின் வடிவமைப்பு பள்ளியும் ஒரே படிப்புக்கு பட்டங்களை வழங்குகின்றன, இப்படிப்பு ஐந்து ஆண்டு படிப்பாகும்.

இப்பல்கலையின் முதன்மை வளாகம் பிராவிடன்சிலுள்ள காலேசு கில் வரலாற்று மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்கலையின் கட்டடங்கள் காலனி கால கட்டடங்கள். அவை நடுவண் அரசால் பாதுகாப்பட்டவை. பல்கலையின் மேற்கு ஓரத்திலுள்ள பெனிபிட் தெருவில் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு கால சிறந்த கட்டடங்கள் அமைந்துள்ளன. [6]

இப்பல்கலையின் ஆசிரியர்கள் & முன்னாள் மாணவர்கள் அமைப்பிலிருந்து எட்டு நோபல் பரிசு பெற்றவர்களும்[7] ஐந்து தேசிய மனித உரிமை பதக்கம் பெற்றவர்களும், பத்து தேசிய அறிவியல் பதக்கம் பெற்றவர்களும் எட்டு பில்லியனர்களும் உள்ளார்கள்[8] . அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் நான்கு வெளியுறவு துறை அமைச்சர்களும் 54 கீழவை (காங்கிரசு) உறுப்பினர்களும் 55 ரோட்சு வல்லுநர்களும் 52 கேட்சு கேம்பிரிச் வல்லுநர்களும் 49 மார்சல் வல்லுநர்களும் 14 மெக்கார்தர் அறிவாளி வல்லுநர்களும் 21 புலிட்சர் பரிசு வெற்றியாளர்களும் பல பிரபுக்களும் தலைவர்களும் பெரும் நிறுவனங்களைத் தோற்றுவித்தவர்களும் இருக்கின்றனர்.

வரலாறு[தொகு]

பிரௌன் பல்கலைக்கழகத்தின் தோற்றம் ரோட் தீவின் நியு போர் நகரத்தின் மூன்று குடிகள் காலனியின் பேரவைக்கு 1761இல் மனு போட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது.[9] அம்மனுவில் உயர் கல்விக்கான கல்லூரியை காலனி குடிகளுக்கு ஆரம்பிக்குமாறு கூறுகின்றனர். மனு போட்டவர்கள் நியு போர்டின் பாதிரியார் இச்ரா இச்டைல்சு, பின்னாள் யேல் பல்கலைக்கழகம் தலைவர் வில்லியம் எல்லெரி , பின்னாள் அமெரிக்க விடுதலை பிரகடனத்தை பாடிய பாடகர் ஓசியாசு லின்டன் (இவர் காலனிகளின் ஆளுநராகவும் இருந்தார்). இச்டைல்சும் எல்லெரியும் இரு ஆண்டுகளுக்கு கல்லூரி கூடுமிடத்துக்கு இணை படைப்பாளிகளாக இருந்தனர்.[10] முதல் பாப்டிசுட் தேவாலயம் பிராவிடன்சில் 1638ஆம் ஆண்டு ரோசர் வில்லியம்சு என்பவரால் தொடங்கப்பட்டது என்பதால் பிலடெல்பியா பாப்டிசுட் தேவாலயங்களின் கூட்டமைப்பு ரோட் தீவில் நடப்பவற்றின் மீது கவனம் கொண்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Encyclopedia Brunoniana | Bicentennial celebration". Brown University. பார்க்கப்பட்ட நாள் July 9, 2009.
  2. Bronson (1914), p. 30.
  3. Bronson, Walter C., The History of Brown University. Providence: Published by the University, 1914, pages 407-408
  4. "Encyclopedia Brunoniana | Curriculum". Brown University. பார்க்கப்பட்ட நாள் December 27, 2014.
  5. "University admits record low 7.2 percent of applicants to Class of 2022". Brown University. பார்க்கப்பட்ட நாள் March 28, 2018.
  6. "Providence, Rhode Island - Neighborhood Services - College Hill". City of Providence. பார்க்கப்பட்ட நாள் October 8, 2014.
  7. "Awards & Honors: National Humanities Medals". பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  8. "The 20 Universities That Have Produced the Most Billionaires". Business Insider. September 7, 2014. பார்க்கப்பட்ட நாள் July 26, 2015.
  9. Dexter (1916), pp. 24–25.
  10. Dexter (1916), p. 25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரௌன்_பல்கலைக்கழகம்&oldid=3260306" இலிருந்து மீள்விக்கப்பட்டது