டார்ட்மத் கல்லூரி

ஆள்கூறுகள்: 43°42′12″N 72°17′18″W / 43.70333°N 72.28833°W / 43.70333; -72.28833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார்ட்மத் கல்லூரி
டார்ட்மத் கூடம்
குறிக்கோளுரைவொக்சு கிளமண்டிசு ஆன் டிசர்ட்டோ
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
அடர்வனத்தில் அழும் ஓர் குரல்
வகைதனியார்
உருவாக்கம்திசம்பர் 13, 1769
நிதிக் கொடைUS $3.44 பில்லியன்[1]
தலைவர்ஜேம்ஸ் எட்வர்டு ரைட்
கல்வி பணியாளர்
647[2]
பட்ட மாணவர்கள்4,147[3]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1,701[3]
அமைவிடம், ,
ஐக்கிய அமெரிக்கா

43°42′12″N 72°17′18″W / 43.70333°N 72.28833°W / 43.70333; -72.28833
வளாகம்ஊரக நகரம், 269 ஏக்கர்கள் (1.1 கிமீ²)
நிறங்கள்டார்ட்மத் கிரீன்      & வெள்ளை     
தடகள விளையாட்டுகள்NCAA கோட்டம் I, ஐவி லீக்
34 பல்கலை அணிகள்
சுருக்கப் பெயர்பெரும் பச்சை
நற்பேறு சின்னம்இந்தியன்,[4] கெக்கி தி கெக்,[5] மற்றும் டார்ட்மத் மூசு[6] (அனைத்தும் அலுவல்முறையல்லாது)
சேர்ப்புஆர்க்டிக் பல்கலைக்கழகம்
இணையதளம்www.dartmouth.edu

டார்ட்மத் கல்லூரி (Dartmouth College ஒலிப்பு: /ˈdɑrtməθ/) நியூ ஹாம்சயர் மாநிலத்தில் அனோவர் நகரில் அமைந்துள்ள ஓர் தனியார், இருபாலர் இணைக்கல்வி பல்கலைக்கழகம்[7] "டார்ட்மத் கல்லூரியின் பொறுப்பாட்சியர்கள்" என நிறுவப்பட்ட [8][9] இந்நிறுவனம் ஐவி லீக் உறுப்பினராகும். தவிரவும் அமெரிக்கப் புரட்சிக்கு முன்னர் நிறுவப்பட்ட ஒன்பது கல்லூரிகளில் இதுவும் ஒன்று.[10] இளங்கலை நுண்கலைப் பாடத் திட்டத்துடன் இங்கு மருத்துவம், பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை பாடத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. நுண்கலை மற்றும் அறிவியல் துறைகளில் 19 முதுகலை பாடதிட்டங்கள் வழங்கப்படுகின்றன. rollment of 5,848 பேர் படிக்கும் டார்ட்மத் கல்லூரி ஐவி லீக் கல்லூரிகளிலேயே மிகச் சிறியதாகும்.[3]

எலூசர் வீலாக், டார்ட்மத் கல்லூரி நிறுவனர்

இக்கல்லூரி உள்ளக அமெரிக்கர்களை கிறித்தவர்களாக மாற்றிட மறைபரப்புனர் எலீசர் வீலாக்கால் 1769இல் நிறுவப்பட்டது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் பல டார்ட்மத் முன்னாள் மாணவர்கள் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.[11]

டார்ட்மத் கல்லூரியின் வளாகம் நியூ ஆம்சையரின் கனெக்டிக்கட் ஆற்று மேல் பள்ளத்தாக்கில் 269-ஏக்கர் (1.1 km²) ஊரகப் பரப்பில் அமைந்துள்ளது. தனிமையான சூழல் நிலவுவதால் தடகளப் பயிற்சிகளிலும் கிரேக்க அமைப்புகளிலும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர்.[12] டார்ட்மத்தின் 34 பல்கலை விளையாட்டு அணிகளும் ஐவி லீக்கின் NCAA முதல் கோட்டம் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இட்யூபிஞ்சென் பல்கலைக்கழகம் (செர்மனி), துர்கம் பல்கலைக்கழகம் (UK), அரசியார் பல்கலைக்கழகம் (கனடா), ஒடாகோ பல்கலைக்கழகம் (நியூசிலாந்து), மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் (ஆத்திரேலியா) மற்றும் உப்சாலா பல்கலைக்கழகம் (சுவீடன்) இணைந்த பல்கலைக்கழகங்களின் மாதரிகி பிணையத்தில் (MNU) இக்கல்லூரி 2010இல் இணைந்தது.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Lahlou, Turia. "Endowment plunges $220 mil. in 3 months". The Dartmouth இம் மூலத்தில் இருந்து 2008-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081113113011/http://thedartmouth.com/2008/11/10/news/endowment/. பார்த்த நாள்: 2008-11-10. 
 2. "Common Data Set '06-'07" (PDF). Office of Institutional Research. Retrieved 2008-08-23.
 3. 3.0 3.1 3.2 "Total Enrollment - Fall" (PDF). Office of Institutional Research. Retrieved 2008-12-16.
 4. Forbes, Allison (2003-04-15). "Mascot debate returns to agenda". The Dartmouth இம் மூலத்தில் இருந்து 2008-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081207212747/http://thedartmouth.com/2003/04/15/news/mascot/. பார்த்த நாள்: 2007-01-29. "The Assembly's Student Life Committee initiated discussions about the College's unofficial mascot, the Indian..." 
 5. Butler, Brent; Frances Cha (2004-02-16). "'Keggy' makes an awaited return". The Dartmouth இம் மூலத்தில் இருந்து 2008-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081207212758/http://thedartmouth.com/2004/02/16/news/keggy/. பார்த்த நாள்: 2007-01-29. "...Keggy debuted last fall as the Big Green's unofficial mascot..." 
 6. Spradling, Jessica (2003-05-23). "Moose tops mascot survey". The Dartmouth இம் மூலத்தில் இருந்து 2008-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081207212752/http://thedartmouth.com/2003/05/23/news/moose/. பார்த்த நாள்: 2007-01-29. "...the moose has been an unofficial symbol of the College for a long time." 
 7. "Dartmouth College: At a Glance". U.S. News & World Report. Retrieved 2007-09-19.
 8. Trustees of Dartmouth College. "2005 Form 990" (PDF). GuideStar.org. Retrieved 2008-08-23.
 9. "Trustees of Dartmouth College". Dartmouth College. Retrieved 2008-08-23.
 10. "About Dartmouth: Facts". Dartmouth College. Retrieved 2008-08-23.
 11. Jaschik, Scott (2007-09-10). "Dartmouth Approves Controversial Board Changes". Inside Higher Education. http://www.insidehighered.com/news/2007/09/10/dartmouth. பார்த்த நாள்: 2008-08-23. 
 12. Webster, Katharine (2007-05-25). "Conservatives Gain Ground at Dartmouth: Dartmouth Alumni Elect Conservatives to Trustees Amid Struggle to Change College's Direction". Associated Press (ABC News). http://abcnews.go.com/US/wireStory?id=3211439. பார்த்த நாள்: 2008-08-23. 
 13. Matariki Network பரணிடப்பட்டது 2020-12-07 at the வந்தவழி இயந்திரம்; retrieved 2013-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்ட்மத்_கல்லூரி&oldid=3358156" இலிருந்து மீள்விக்கப்பட்டது