உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாக் கில்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாக் செயின்ட் கிளேர் கில்பி (Jack St. Clair Kilby) (நவம்பர் 8, 1923 - ஜூன் 20, 2005) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மின்னியல் பொறியாளர் ஆவார். நுண்ணிய மின்சுற்றுக்களில் பயன்படும் மின்னுறுப்புக்களாகிய தடையம் (resistor), கொண்மி அல்லது சேர்மி (capacitor), இருமுனையம் (diode), திரிதடையம் (transistor) போன்றவற்றை ஒரே அடிமனையில் அமைத்து மின் தொகுசுற்றுகளை உருவாக்க முன்னோடியாக இருந்தவர். இவர் பொறியியலாளராக இருந்தும், முதன்முதலாக புதிதாக உருவாக்கி, தொகுசுற்றின் அடிப்படையில் விளைந்த பயனால் இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசை 2000-ஆம் ஆண்டு பெற்றார். இவர் 1958-ல் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த போது தொகுசுற்றைக் உருவாக்கினார். இவரைப்பற்றி சொல்லும் பொழுது இதே துறைக்கு இணையான பங்களித்த ராபர்ட் நாய்சு அவர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும். ராபர்ட் நாய்சு 1990ல் மறைந்து விட்டார்; இல்லாவிடில், இவரும் இப்பரிசை ஜாக் கில்பியுடன் பெற்றிருப்பார் என்பது பல்லோருடைய கணிப்பு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_கில்பி&oldid=2707426" இலிருந்து மீள்விக்கப்பட்டது