ராபர்ட் நாய்சு
Jump to navigation
Jump to search
ராபர்ட் நாய்சு | |
---|---|
பிறப்பு | திசம்பர் 12, 1927 Burlington, அயோவா |
இறப்பு | சூன் 3, 1990 ஆஸ்டின், டெக்சஸ் | (அகவை 62)
படித்த கல்வி நிறுவனங்கள் | Grinnell College மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் |
பணி | இணை நிறுவனர்: பேர்ச்சைல்டு செமிகண்டக்டர், இன்டெல் |
பெற்றோர் | Ralph Brewster Noyce Harriet மே Norton |
வாழ்க்கைத் துணை | Elizabeth Bottomley Ann Bowers |
பிள்ளைகள் | William B. Noyce Pendred Noyce Priscilla Noyce Margaret Noyce |
விருதுகள் | Faraday Medal (1979) Harold Pender Award (1980) John Fritz Medal (1989) |
ராபர்ட் நாய்சு. (ரொபர்ட் நொய்ஸ், Robert Noyce, டிசம்பர் 12, 1927 – ஜூன் 3, 1990), என்பவர் ஒரு புகழ் பெற்ற பொறியியலாளர். இவர் 1957ல் ஃவேர்ச்சைல்டு செமிகண்டக்டர் (Fairchild Semiconductor) என்னும் நுண் மின்கருவிகள் செய்யும் நிறுவனத்தை துணைநிறுவனராக இருந்து நிறுவினார். இதே போல 1968ல் இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தையும் தொடக்கினார். நோபல் பரிசு பெற்ற ஜாக் கில்பி அவர்களைப் போலவே நுண் தொகுசுற்றுகள் ஆக்கத்திற்கு ஆழ்பங்களித்த முன்னோடி இவர். ஜாக் கில்பியுடைய புத்தாக்கம், புத்தியற்றல் இவருடையதைக் காட்டிலும் சுமார் 6 மாதம் முந்தியது ஆனால், நாய்சு அவர்களின் முறை ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களைச் செய்வதில் சிறந்தது, உற்பத்தி செய்யவும் எளிதானது. இன்றளவும் பயன்படும் அடிப்படையானதும் கூட.