கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ்
கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் Konstantin Novoselov. | |
---|---|
பிறப்பு | ஆகத்து 23, 1974 நிழ்சினி தாகில், உருசிய சோவியத் கூட்டிணைப்பு சோசலிசக் குடியரசு, சோவியத் ஒன்றியம் |
வாழிடம் | இங்கிலாந்து |
குடியுரிமை | உருசியா மற்றும் ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | உருசியா |
துறை | திண்மநிலை இயற்பியல் |
பணியிடங்கள் | மான்ச்செசிட்டர் பல்கலைக்கழகம்]] |
கல்வி கற்ற இடங்கள் | மாசுக்கோ இயற்பியல் தொழில்நுட்ப உயர்கல்விக்கூடம் நீமேகென் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | யான் கீசு மான், ஆந்தரே கெய்ம் |
அறியப்படுவது | கிராபீன் (graphene) பற்றிய ஆய்வு |
விருதுகள் | இயற்பியல் நோபல் பரிசு (2010) |
கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Sergeevich Novoselov, இரசிய மொழி: Константи́н Серге́евич Новосёлов, கொன்ஸ்டண்டீன் செர்கேவிச் நவசியோலொவ், பிறப்பு: ஆகத்து 23, 1974) உருசியாவில் பிறந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இயற்பியல் அறிவியலாளர். ஒற்றையணு தடிப்புள்ள கரிம அணுப் படலத்தை பற்றிய இவருடைய ஆய்வு புகழ்பெற்றது. ஆந்தரே கெய்ம் என்பாருடன் சேர்ந்து இவருக்கு 2010 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1]. நோவொசியெலோவ் தற்பொழுது மான்ச்செசிட்டர் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ ஒருசில அணுவளவுத் தடிப்புள்ள பொருள்களைப் பற்றி ஆயும், இடையளவு இயற்பியல் (Mesoscopic physics, மேசோசுக்கோப்பிக் இயற்பியல்) என்னும் துறையில் (பிரித்தானிய) வேந்தியக் குமுக ஆய்வுப் பேராளராகப் (Royal Society Research Fellow) பணிபுரிகிறார்[2][3].
பணி வரலாறு
[தொகு]நோவோசியெலோவ் இதுகாறும் 60 ஒத்தோர்-தேர்வுசெய்த (peer-reviewed) ஆய்வுரைகள எழுதியுள்ளார், இவை இடையளவு (mesoscopic) மீகடத்தி, ஃகால் விளைவு காந்த அளவியல் (Hall effect magnetometry) [4], காந்த நுண்புலங்களின் பிரிமுகங்களின் (எல்லைச்சுவர்களின்) அணுத்துகள் அளவு நகர்ச்சிகள் (sub-atomic movements of magnetic domain walls),[5] கெக்கோ பல்லியின் காலின் இறுகப்பற்றும் தன்மையை ஒத்த செயற்கைநாடா (கெக்கோ நாடா) (gecko tape) கண்டுபிடிப்பு,[6], ஓரணுத் தடிப்புள்ள கரிமப்படலமாகிய கிராஃவீன்.[7] ஆகிய துறைகளைப் பற்றியவை.
பரிசுகளும் பெருமைகளும்
[தொகு]- 2008 ஆண்டுக்கான ஐரோப்பிய இயற்பியல் பரிசு (Europhysics Prize). இப்பரிசு இவர் தனித்து நிற்கும் ஒற்றை அணுத் தடிப்புள்ள கரிம அணுப் படலத்தைக் கண்டுபிடித்தற்காகவும் அதன் தனித்தன்மையான எதிர்மின்னியியல் பண்புகளை விளக்கியதற்காகவும் தந்தார்கள். பரிசளிப்பு வாசகம், "for discovering and isolating a single free-standing atomic layer of carbon (graphene) and elucidating its remarkable electronic properties." என்னும் தொடரைக் கொண்டிருந்தது[8]
- 2010ஆண்டில் ஆந்தரே கெய்ம் என்பாருடன் இணைந்து இயற்பியல் நோபல் பரிசு. இப்பரிசு, இருதிரட்சி (two-dimensionla) கிராஃவீன் (graphene)பொருளைப் பற்றிய புதுப்பெயர்ச்சிதரும் செய்முறை ஆய்வுகளுக்காக வழங்கப்பட்டது. நோபல் குழுவின் சாற்றுமொழி , "for groundbreaking experiments regarding the two-dimensional material graphene."[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ 1.0 1.1 "2010 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு". நோபல் நிறுவனம். 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
- ↑
fellow "Konstantin Novoselov". ரோயல் கழகம். பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "முனை. கோஸ்டியா நவசியோலொவ்". மான்செஸ்டர் பல்கலைக்கழகம். Archived from the original on 2012-12-05. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
- ↑ ஏ. கே. கெயின் வேறு. (2000). "Non-Quantized Penetration of Magnetic Field in the Vortex State of Superconductors". நேச்சர் 406.
- ↑ K. S. et al. (2003). "Subatomic Movements of a Domain Wall in the Peierls Potential". நேச்சர் 426: 812–816. doi:10.1038/nature02180.
- ↑ A. K. Geim et al. (2003). "Microfabricated Adhesive Mimicking Gecko Foot-Hair". Nature Materials 2: 461–463. doi:10.1038/nmat917.
- ↑ A. K. Geim, K. S. Novoselov (2007). "The Rise of Graphene". Nature Materials 6: 183–191. doi:10.1038/nmat1849.
- ↑ "Waters, Darren (2008) Nano switch hints at future chips". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.