உள்ளடக்கத்துக்குச் செல்

மாரியோ பார்க்காசு யோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரியோ பார்காசு யோசா
Mario Vargas Llosa
பிறப்புஃகோர்கே மரியோ பெட்ரோ பார்க்காசு யோசா
மார்ச்சு 28, 1936 (1936-03-28) (அகவை 88)
அரேக்கிப்பா, பெரு
தேசியம்பெரு, எசுப்பானியா
கல்வி நிலையம்சான் மார்கோசு தேசியப் பல்கலைக்கழகம்
மாட்ரிட் காம்புளுடென்சு பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்2010 இலக்கிய நோபெல் பரிசு
துணைவர்ஃகூலியா உர்குவிடி (1955–1964)
பேட்ரீசியா யோசா (1965–தற்காலம் வரை)
பிள்ளைகள்ஆல்வேரோ
கொன்சாலோ
மார்கனா
கையொப்பம்
இணையதளம்
http://www.mvargasllosa.com

மாரியோ பார்க்காசு யோசா (எசுப்பானிய ஒலிப்பு: [ˈmaɾjo ˈβarɣaz ˈʎosa], ஆங்கிலம்: Mario Vargas Llosa, பி. மார்ச் 28, 1936) ஒரு பெருவிய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இதழாளர். 2010ம் ஆண்டிற்கான இலக்கிய நோபெல் பரிசினை வென்றவர். யோசா, இலத்தீன் அமெரிக்காவின் (தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின்) முதன்மையான எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

எசுப்பானிய மொழியில் எழுதும் யோசா 1960களில் நாய்களின் நகரம் எனப் பொருள் படும் எசுப்பானிய மொழிப் புதினம் La ciudad y los perros (ல சியுடாடு இ லொசு பெர்ரொசு) என்பதை 1963 இல் எழுதினார். இது ஆங்கிலத்தில் தி டைம் ஆஃப் தி ஃகீரோ (The Time of the Hero) என அறியப்படுகின்றது. 1965 இல் பச்சை வீடு எனப்பொருள்படும் ல காசா பெர்டே (La Casa Verde, ஆங்கிலத்தில் தி கிரீன் ஃகவுசு The Green House) என்னும் புதினத்தை எழுதினார். பெரு நாட்டின் தனிவல்லாட்சியர் (சர்வாதிகாரி) மானுவேல் ஏ. ஓதிரியா (Manuel A. Odría) என்பாரின் ஆட்சியை அடிப்படையாக கொண்டு 1969 இல் வரைந்த கான்வர்சேசியோன் என் ல கத்தேடரல் (Conversación en la catedral) (ஆங்கிலத்தில் கன்வர்சேசன் இன் தி கத்தீடரல் Conversation in the Cathedral) என்னும் புதினம் போன்ற பற்பல எழுத்துகளின் வழி புகழ் எய்தினார். நகைச்சுவை புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், பரபரப்பூட்டும் அரசியல் புதினங்கள் என பலவகைப்பட்ட புனைவுப் படைப்புகளை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட லோசா 1990ம் ஆண்டு பெரு நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993ம் ஆண்டு எசுப்பானியா நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற இவர் தற்போது இலண்டன் (ஐக்கிய இராச்சியம்) நகரில் வசித்து வருகிறார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியோ_பார்க்காசு_யோசா&oldid=2897635" இலிருந்து மீள்விக்கப்பட்டது