டெரெக் வால்காட்
Appearance
டெரெக் வால்காட் | |
---|---|
ஆம்ஸ்டர்டாமில் வால்காட், (மே 20, 1998) | |
பிறப்பு | காஸ்ட்ரீஸ், செயிண்ட் லூசியா | 23 சனவரி 1930
இறப்பு | 17 மார்ச்சு 2017 கேப் தோட்டம், குரொசு-ஐலெட், செயிண்ட் லூசியா | (அகவை 87)
தொழில் | கவிஞர், நாடகாசிரியர், பேராசிரியர் |
தேசியம் | செயின்ட் லூசியா |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1992 டி. எஸ். எலியட் பரிசு 2011 |
பிள்ளைகள் | பீட்டர் வால்காட், எலிசபெத் வால்காட்-ஹாக்ஷா, ஆனா வால்காட்-ஹார்டி |
கையொப்பம் | |
டெரெக் வால்காட் (Derek Walcott, சனவரி 23, 1930, மார்ச் 17, 2017) செயின்ட் லூசியாவைச் சேர்ந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர் ஆவார். இவர் 1992-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். மேலும் 2011-ஆம் ஆண்டு டி.எசு.எலியாட் பரிசை தனது "வெள்ளை நாரைகள்" நூலுக்காக வென்றார். இவரது "ஒமேரோஸ்" மிகவும் அறியப்பட்ட, புகழப்பட்ட படைப்பாகும்.