கேப்ரியெலா மிஸ்திரெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேப்ரியெலா மிஸ்திரெல்

தொழில் கல்வியாளர், பேராளர், கவிஞர்
நாடு சிலிக்காரர்
எழுதிய காலம் 1914–1957
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1945
கையொப்பம் Firma Gabriela Mistral.png
Mistral G 1945.JPG

கேப்ரியெலா மிஸ்திரெல் (Gabriela Mistral, எசுப்பானியம்: [ɡaˈβɾjela misˈt̪ɾal]; 7 ஏப்ரல் 1889 – 10 சனவரி 1957) என்பது சிலி நாட்டு கவிஞரும் கல்வியாளரும் பெண்ணியலாளருமான லூசிலா கோடொய் அல்கயாகாவின் (Lucila Godoy Alcayaga) புனைபெயராகும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இலத்தீன் அமெரிக்கரும் முதல் இலத்தீன் அமெரிக்க பெண்மணியும் ஆவார்; 1945ஆம் ஆண்டில் "தமது கவிதை வரிகள் மூலமாக இலத்தீன அமெரிக்க உலகத்தின் எதிர்பார்ப்புகளின் சின்னமாக விளங்கும் " இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. இவரது பாடல்களின் மையக்கருத்தாக இயற்கை, ஏமாற்றம், காதல், அன்னையின் அன்பு, சோகமும் மீட்பும், பயணம், தாயக முதுகுடிகள் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளாலான , இலத்தீன் அமெரிக்க அடையாளம் ஆகியவற்றை கொண்டிருந்தது. இவரது உருவப்படம் சிலி நாட்டின் 5,000 பெசொ வங்கித்தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]