செஸ்லா மிலாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செஸ்லா மிலாஸ் (Czesław Miłosz [1] [2]  ; 30 ஜூன் 1911 - 14 ஆகஸ்ட் 2004) ஒரு போலந்து-அமெரிக்கரான இவர் [3] [4] கவிஞர், உரைநடை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இராஜதந்திரி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் அவர், 1980 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். ஸ்வீடிஷ் அகாதமி, அதன் நோபல் மேற்கோளில், "உலகின் கடுமையான மோதல்களில் வெளிப்படும் ஒரு சாமானியனின் குரல் இவரின் எழுத்து". எனப் பாராட்டியுள்ளது. [5]

ஐரோப்பாவில் வாழ்க்கை[தொகு]

தோற்றம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

செஸ்லாவ் மிலாஸ் ஜூன் 30, 1911 அன்று ஸ்ஜெடெஜ்னி கிராமத்தில் பிறந்தார். இது உருசியப் பேரரசு (இப்போது கோடெய்னாய் மாவட்டம், கவ்னாஸ் கவுண்டி, லிதுவேனியாவில் உள்ளது. ). அவர் போலந்து குடிமைப் பொறியாளரான அலெக்ஸாண்டர் மினோஸ் (1883-1959) மற்றும் அவரது மனைவி வெரோனிகா (நீ குனாட்; 1887-1945) ஆகியோரின் மகன் ஆவார்.

மினோஸ் ஒரு பரவலாக அறியப்பட்ட நபர்கள் உள்ள குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய் வழி, தாத்தா ஜிக்மண்ட் குனாட், ஒரு போலந்து குடும்பத்தின் வழித்தோன்லாக இருந்தார்.வார்சாவில் விவசாயப் பிரிவில் பயின்ற ஜிக்மண்ட், லித்துவேனியன் வம்சாவளியைச் சேர்ந்த சிரூஸ் குடும்பத்தின் வம்சாவளியான மினோஸின் பாட்டி ஜோசெஃபா என்பவரை மணந்தார். பின்னர், ஸ்ஜெட்டெஜ்னியில் குடியேறினார். அவரது மூதாதையர்களில் ஒருவரான சிமோன் சிரூக், போலந்தின் மன்னர் ஸ்டானிஸ்வா I மற்றும் லிதுவேனியாவின் செயலாளராக இருந்தார். [6] மினோஸின் தந்தை வழி தாத்தா ஆர்தூர் மினோஸ்ஸும் ஒரு சிரூஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் போலந்து சுதந்திரத்திற்காக 1863 ஆம் ஆண்டு நடந்த ஜனவரி எழுச்சியில் போராடினார். மிலாசின் பாட்டி, ரீகா, லாத்வியாவில் இருந்த ஒரு மருத்துவரின் மகள் ஆவார்.[7] செர்பினியில் மினோச் பூங்கா அமைந்துள்ளதை குறிப்பிடுக் காட்டிய மிலாசின் சுயசரிதை எழுத்தாளரான வரலாற்றாசிரியர் ஆண்ட்ரெஜ் இதன்மூலம் இவர்களது குடும்பம் செர்பிய வம்சாவளியை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மினோஸ் குடும்பம் செர்பியாவில் தோன்றி இன்றைய லித்துவேனியாவில் குடியேற வாய்ப்பிருந்திருக்கலாம் எனத் தெரிவித்தார். [8] மினோஸின் தந்தை ரிகாவில் பிறந்து கல்வி கற்றார். மினோஸின் தாயார் ஸ்ஸெட்டெஜ்னியில் பிறந்தார் மற்றும் கிராகோவில் கல்வி கற்றார். [9]

அவர் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி 1955 ஆம் ஆண்டு வெளியான புதினமான தி இசா வேலி மற்றும் 1959 ஆம் ஆண்டு வெளியான புதினமான நேட்டிவ் ரியால்மிலும் நினைவு கூர்ந்தார். இந்த படைப்புகளில், அவர் தனது கத்தோலிக்க பாட்டி, ஜோசெபாவின் செல்வாக்கு, இலக்கியத்தின் மீது வளர்ந்து வரும் அன்பு மற்றும் அவரது ஆரம்பகால விழிப்புணர்வு, போன்றவற்றினைப் பற்றி விவரித்தார்.

சைபீரியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் பணிபுரிய அவரது தந்தையை பணிபுரிய நியமித்தபோது, அவரும் அவரது தாயும் அவருடன் இருப்பதற்காக சைபீரியா பயணம் செய்தனர். [10] 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் ஏற்பட்டதனால் , மினோஸின் தந்தை ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டார், பொறியியல் சாலைகள் மற்றும் துருப்புக்களின் நகர்வுகளுக்கான பாலங்களை தயாரிக்கும் பணிகளில் இவர் பணிபுரிந்தார். 1915 இல் ஜேர்மன் இராணுவம் இவர்கள் இடத்தினைக் கைப்பற்றியபோது மினோஸ் மற்றும் அவரது தாயார் வில்னோவில் தங்கவைக்கப்பட்டனர்.

சான்றுகள்[தொகு]

  1. "Miłosz". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 20 August 2019.
  2. [Merriam-Webster Dictionary] Milosz
  3. "NEH grant details: "The Spirit of the Place": Polish-American Poet Czeslaw Milosz in California". National Endowment for the Humanities. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
  4. "Czeslaw Milosz | Biography, Books, Nobel Prize, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
  5. "The Nobel Prize in Literature 1980". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  6. Franaszek, Andrzej. Milosz: A Biography. பக். 35. இணையக் கணினி நூலக மையம்:982122195. 
  7. Franaszek, Andrzej. Milosz: A Biography. பக். 40. இணையக் கணினி நூலக மையம்:982122195. 
  8. Franaszek, Andrzej. Milosz: A Biography. பக். 38. இணையக் கணினி நூலக மையம்:982122195. 
  9. Franaszek, Andrzej. Milosz: A Biography. பக். 36. இணையக் கணினி நூலக மையம்:982122195. 
  10. Franaszek, Andrzej. Milosz: A Biography. பக். 15. இணையக் கணினி நூலக மையம்:982122195. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஸ்லா_மிலாஸ்&oldid=2909295" இலிருந்து மீள்விக்கப்பட்டது