உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்ட்ரண்டு ரசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல்
காலம்20ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிபகுப்பாய்வு தத்துவம்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1950)
முக்கிய ஆர்வங்கள்
நெறிமுறைகள், அறிவாற்றல்,, தருக்கம், கணிதம், மொழியியல், அறிவியலுக்கான மெய்யியல், சமயம்

பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், 3ஆவது "ஏர்ல்" ரசல் (Bertrand Arthur William Russell, 3rd Earl Russell,1872-1970): ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் தனது வாழ்க்கையை பெரும்பாலும் இங்கிலாந்தில் கழித்தாலும், தான் பிறந்த இடமாகிய வேல்சில் இறந்தார்.[1]

ரசல் 1900களின் தொடக்கத்தில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராகக் கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வுத் தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் கோட்லோப் பிரேகா என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை தருக்கத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" (On Denoting) "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" எனக் கருதப்படுகிறது[2]. இந்த இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம் முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.

ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வணிகத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.[3][4]. இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தார். அணுகுண்டு கைவிடுதலையை ஆதரித்தார், ஐக்கிய அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தார்[5].

ரசலுக்கு, அவரின் பலவகைப்பட்ட எழுத்துகளினால், "மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும்" 1950 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது"[6].

பிறப்பும் குடும்பமும்

[தொகு]

பெர்ட்ராண்ட் ரசல் மே 18, 1872 அன்று ஐக்கிய இராச்சியம், மான்மத்சயரில், டிரெல்லெக் என்ற ஊரில் பிறந்தார். அவர் தந்தைவழிப் பாட்டன், முதல் ஏர்ல் ரசல், பெட்போர்ட் ஆவார். அவர் விக்டோரியா மகாராணியால் அரசு அமைக்க அழைக்கப்பட்டு, அரசியின் பிரதம மந்திரியாக 1840, 1860களில் பணி புரிந்தார்[7].

ரசல் குடும்பம் பிரித்தானியாவில் பல நூற்றாண்டுகளாகச் சமூகத்தில் புகழ்பெற்று இருந்தது. டியூடர் வம்சம் அரசாளும் போது, அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். பிரித்தானியாவின் விக் (லிபரல் கட்சி) கட்சியின் பெரும் புள்ளிகளாகி, பிரித்தானியாவின் ஒவ்வொரு பெரும் அரசியல் மாற்றங்களில் போதும், சீரிய பங்கு வகித்தனர். சான்றாக 1536-ல் மடங்களின் ஒழிப்பு, 1688–89 காலத்தில் குளோரியசு புரட்சி (Glorious Revolution,1832) மாபெரும் சீர்திருத்தச் சட்டங்கள் இவற்றில் பங்கு வகித்தனர்[7][8].

ரசலின் தாய், காதரின் லூயிசா (1844–1874) பேரோன் எட்வார்ட் ஸ்டான்லியின் (Edward Stanley, 2nd Baron Stanley of Alderley,)மகளாவார். ரசலின் பெற்றோர்கள் அக்காலத்தில் மிக முற்போக்கான கொள்கையுடையவர்களாக இருந்தனர். இவரின் தந்தை வைகௌண்ட் ஆம்பர்லி ஓர் உயிரியலாளர்; இறைமறுப்புக் கொள்கை கொண்டவர்; தன் மனைவி தம் பிள்ளைகளின் ஆசிரியர், டக்ளஸ் ஸ்பால்டிங்கோடு காதல் கொண்டபோது அதனை இயல்பாய் மதித்தார். இருவரும்,அக்காலத்தில் நடத்தை பிறழ்வாகக் கருதப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு என்ற கொள்கைக்கு முதன் ஆதரவாளர்களாய் இருந்தனர்.[9]

பிரித்தானியாவின், பயன்பாட்டுவாதத் தத்துவவாதியான ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவர் ரசலின் மானசீக ஆசானாவார். ரசல் பிறந்த அடுத்த வருடம் மில் இறந்து விட்டாரெனினும், மில்லின் எழுத்துகள் ரசலிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

குழந்தைப் பருவமும் குமரப்பருவமும்

[தொகு]

ரசலுக்கு பிராங்க் என்ற சகோதரனும் ரெய்சல் என்ற சகோதரியும் இருந்தனர். ஜூன் 1874ல், ரசலின் அன்னை டிப்தீரியாவினால்க் மரணமடைந்தார். பின்னர் அடுத்தடுத்து சகோதரி ரெய்சலும்,நீண்ட கால மனச்சோர்வு காரணமாக ரசலின் தந்தையும் இறந்தனர். எனவே பிராங்கும், ரசலும் ஆழ்ந்த விக்டோரிய கலாசாரவாதிகளான பாட்டன் - பாட்டியின் வளர்ப்பில் விடப்பட்டனர். அவர்கள் லண்டனின் மேற்குப் பகுதியிலிருந்த ரிச்மண்ட் பார்க] எனுமிடத்திலுள்ள மாளிகையான பெம்பிரோக் லாட்ஜில் வசித்தனர். 1878ல் அவருடைய பாட்டனும் இறந்ததால் பாட்டி மட்டுமே ரசலின் குடும்பத்தின் தூணாக இருந்தார். பாட்டி மத விடயங்களில் கட்டுப்பாடானவராகவும் பழமையாளராகவும் இருந்தாலும், மற்ற விடயங்களில் முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையையும் அயர்லாந்து சுயாட்சியையும் ஆதரித்தார். ரசலின் சமூக நீதி மனப்பான்மையும், தன் கொள்கைகளை விட்டுத் தராத பண்பும் பாட்டியின் தாக்கங்களாக அவர் மீது கோலோச்சின. பாட்டிக்கு பிடித்த விவிலியம் மொழியாகிய “நீ கும்பல்களை பின்பற்றி தீங்கு செய்யாதே“ என்பது அவருடைய தாரக மந்திரம் ஆயிற்று. பெம்புரோக் லாட்ஜின் சூழ்நிலை அடிக்கடி ஜெபங்களும், உணர்ச்சி அடக்குமுறையும், சடங்கு முறையில் மூழ்கியதுமாக இருந்தது; பிராங்க் இந்த நிலைக்கு வெளிப்படையான கிளர்ச்சியுடன் செயல்பட்டார்; ஆனால் சிறுவயதேயான பெர்ட்ராண்ட் தன் உணர்ச்சிகளை ஒளிக்கக் கற்று கொண்டார்.

ரசலின் இளமைப் பருவம் மிகத் தனிமையாக இருந்ததனால் பல தடவை தற்கொலை செய்து கொள்ள எண்ணினார். தன் சுய சரிதையில் தன் அதீத விருப்பங்கள் பால் உணர்ச்சிகள், மதம், கணிதம் ஆகியவை எனவும், கணிதத்தை பற்றி மேலும் மேலும் அறிய வேண்டுமென்ற ஆவல்தான் தற்கொலையில் இருந்து தன்னைத் தடுத்தது எனவும் கூறுகிறார்.[10] வீட்டிலேயே ரசலுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர் தமயன் பிராங்க், ரசலுக்கு யூக்ளிட்டின் கணிதத்தை அறிமுகம் செய்து வைத்தார்; அது அவர் வாழ்க்கையை உருமாற்றியது.[9]

பல்கலைக்கழக வாழ்வும் முதல் திருமணமும்

[தொகு]

ரசல் கேம்ப்ரிட்ச் டிரினிடி கல்லூரியில் உதவித் தொகையுடன் 1890இல் தனது கணிதக் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ஜி.இ.மூர் மற்றும் ஆல்பிரட் நார்த் ஒயிட்ஹெட் முதலியவர்களின் நட்பைப் பெற்றார். விரைவிலே கணிதம், தத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். 1983இல் இளங்கலைப் பட்டமும், 1895ல் பெல்லொஷிப்பும் பெற்றார்[11][12].

ரசல் தனது 17ஆம் வயதில் அமெரிக்கரான குவேகர் ஆலிஸ் பியர்சல் ஸ்மித்தை சந்தித்து, பியர்சல் ஸ்மித்தின் குடும்பத்திற்கு நண்பரானார். அவர்களுக்கு ரசல் `லார்ட் ஜானின் பேரன்` என்றே தெரியும். அதனால் ரசல் தங்களுடன் இருப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். அவர்களுடன் ரசல் பாரிஸ் பொருட்காட்சி, ஈபல் கோபுரம் எனப் பொழுதைக் கழித்தார். இது அக்காலத்தில் அரிதான ஒன்றாகும்.[13]

ரசல் ஆலிஸ் என்ற பெண்மணியுடன் காதல் கொண்டது தன் பாட்டிக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவளை டிசம்பர் 13, 1894 அன்று திருமணம் புரிந்தார். பின்னர் அவர்களின் மனமுரண்பாட்டினால் 1921ல், பல நாட்கள் பிரிவுக்குப் பிறகு விவாகரத்து செய்துகொண்டனர்[14]. அக்காலத்தில் ரசல் பல பெண்களுடன் உறவாக இருந்தார். அவர்களில் லேடி ஆட்டோலின் மொரல் மற்றும் நடிகை லேடி கான்ஸ்டன்ஸ் மேலசன் ஆகியோர் பிரதானமானவர்களாக இருந்தனர்.[15]

பணிகள்

[தொகு]

1896ல் ரசல் "ஜெர்மன் சமுதாய மக்களாட்சி" என்ற தனது அரசியல் ஆய்வு நூலைப் பதிப்பித்தார். வாழ்க்கை முழுவதும் அரசியல் மற்றும் சமுதாய கோட்பாடுகளில் ஆர்வம் செலுத்தினார். 1896ல் ஜெர்மன் சமுதாய மக்களாட்சி பற்றி ”லண்டன் ஸ்கூல் ஆஃப் எகொனாமிக்ஸ்”என்ற கல்லூரியில் பாடம் கற்பித்தார். அங்கேயே அதிகாரம் பற்றிய அறிவியல் தொடர்பாக 1937ல் உரையாற்றினார்.[16] 1902ல் சிட்னி மற்றும் பியட்ரிஸ் வெப் ஆகியோர் தொடங்கிய "கோ-எபீசியண்ட் டைனிங் கிளப்" என்ற மன்றத்தில் அங்கத்தினரானார். [17].

1905ல், மைண்ட் என்ற தத்துவ இதழில் இவருடைய கட்டுரை `ஆன் டிநோடிங்` (On Denoting) வெளியானது. 1908ல் ராயல் கழகத்தின் உறுப்பினர் ஆனார். ஒயிட்ஹெட்டுடன் சேர்ந்து 'கணித கோட்பாடுகள்(Principia Mathematica)' என்ற நூலை எழுதினார். 1910 ல் 'கணிதத்தின் அணுகுமுறை' என்ற மற்றொரு நூலை வெளியிட்டார். இவ்விரு நூல்களும் ரசலுக்கு மிகப்பெரும் புகழைத் தேடித் தந்தன. 1911ல் ஆஸ்திரியப் பொறியியல் மாணவர் லூட்விக் விட்கன்ஸ்டைனின் நட்புக் கிடைத்தது. அவர பெரும் மேதை எனவும், தனது தருக்க அறிவியலின் வாரிசு எனவும் ரசல் கருதினார். பல நேரங்களில் விட்கன்ஸ்டனின் பலவகையான மனபீதிகளையும், மனச்சோர்வையும் குறைக்க முயற்சி செய்தார். அவருடன் பல நாட்களைக் கழித்த ரசல் அவரால் ஈர்க்கப்பட்டு, அவரது கல்வி முன்னேற்றத்தை ஊக்குவித்தார். அந்த ஊக்குவிப்பின் விளைவாக 1922ல், 'டிராக்டடஸ் லாஜிகோ-பிலசாபிகஸ்' (தருக்க தத்துவத்தின் ஏடு) என்ற நூலை விட்கன்ஸ்டைன் வெளியிட்டார்.[18]

முதல் உலகப் போர்

[தொகு]

முதல் உலகப் போரின் போது, ரசல் அமைதிவாதச் செயல்களில் ஈடுபட்டார், 1916ல் நாட்டு பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டதனால், டிரினிடி கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். மற்றொரு குற்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் அவர் பிரிக்ஸ்டன் சிறையில் அடைக்கப்பட்டு 1918 செப்டம்பரில் விடுவிக்கப் பட்டார்.

திருமணங்கள்

[தொகு]

ஆகஸ்த் 1920ல், அவரை பிரித்தானிய அரசு ரஷ்ய புரட்சியின் விளைவுகளை பரிசீலனை செய்யும் அதிகாரபூர்வ குழுவின் உறுப்பினராக ரஷ்யாவிற்கு அனுப்பியது.[19] அங்கு அவர் லெனினை சந்தித்தார். ரசல் ரஷ்யாவில் இருக்கும்போது டோரா பிளெக் என்ற பெண்மனியைச் சந்தித்தார். இருவரும் காதல் கொண்டனர். ரஷ்யப் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இக்கால கட்டத்தில் சீனா சென்ற ரசல் பீஜிங்கில் ஒரு வருடம் தத்துவ உரைகள் ஆற்றினார்.. சீனத்தில் ரசல் நிமோனியா பாதிப்புற்று இறந்ததாக ஜப்பானிய இதழ்கள் தவறான செய்திகளைப் பிரசுரித்தன.[20] பின் ரசலும் டோராவும் ஜப்பான் சென்றனர். ஜப்பானிலிருந்து திரும்பி வருகையில் டோரா “பெர்ட்ராண்ட் ரசல் ஜப்பானிய பதிவுகள் படி இறந்து விட்டதால், ஜப்பானிய ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுக்க முடியவில்லை” என அறிக்கை விட்டார். ஜப்பானிய ஊடகங்கள் அந்த நையாண்டியை புரிந்து கொள்ளமல் குழப்பமடைந்தன.[21]

ரசல் டோராவுடன் இங்கிலாந்துக்கு திரும்பி, தனது முன்னாள் மனைவி ஆலிசை விவாகரத்து செய்து ஆறு நாட்களின் பின்னர் டோராவை 27, செப்டெம்பர் 1921 ம் திகதி திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு ஜான் கோன்ராட் ரசல், காதரீன் ஜேன் ரசல், ஆகிய இரு குழந்தைகள் பிறந்தனர். ரசல் அச்சமயம் வாழ்வியல் தேவைகளுக்காக புவியியல், நெறியியல், கல்வி பற்றிய புத்தகங்கள் எழுதினார்.[22] ரசல் டோரவுடன் இணைந்து 1927ல் பெகன் ஹில் உயர்நிலைப்பள்ளியை நிறுவினார். இப்பள்ளியை டோரா 1943 வரை நடத்தினார்[23][24].

ரசலின் அண்ணன் பிராங்கின் 1931இல் இறந்த பின்பு, ரசல் 3வது ஏர்ல் ரசல் ஆனார். 1932ல் டோராவுடனான திருமண உறவு முறிந்து அவர்கள் பிரிந்தனர். ஜனவரி 18, 1936ல், ரசல் மூன்றாவது தடவையாக பட்ரீசியா ஸ்பென்ஸ் என்ற ஆக்ஸ்போர்டு இளநிலை மாணவியைத் திருமணம் செய்தார். பட்ரீசியா ஏற்கனவே ரசலின் குழந்தைகளுக்குத் தாதியாக இருந்தவர். இவர்களுக்குப் பிறந்த மகன் தான் கோன்ராட் செபாஸ்டியன் ராபெர்ட் ரசல். இவர் 5 ஆவது ஏர்ல் ரசல் ஆனார். அவர் வரலாற்றுப் பேராசிரியராக இருந்து, பின்னர் லிபரல் ஜனநாயக கட்சியில் பெரும் புள்ளி ஆனார்.

பணிகளும் வழக்கும்

[தொகு]

இரண்டாவது உலகப் போரின் போது ரசல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது லாஸ் ஏஞ்சலஸ்யவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற அழைப்பு வந்ததால் ரசல் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அதன்பின் நியூ யார்க் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நியமிக்கப்பட்டபோது, பலத்த எதிர்ப்பு எழுந்தது. பத்து வருடங்களுக்கு முன்னர் `மணமும் நெறியும்` என்ற தனது நூலில் ரசல் எழுதிய பாலியல் நெறிகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தீர்ப்புக்கு பின் அப்பணியை இழந்தார்..[25] அதன் பின்னர் ரசல், பார்ன்ஸ் அறக்கட்டளையில் இணைந்து 'தத்துவத்தின் வரலாறு' பற்றி உரையாற்றினார். இந்த உரைகள் மேற்குலக தத்துவத்தின் வரலாறு எனப் புகழ்பெற்றன. ஆனால் ரசல் அறக்கட்டளையின் தலைவர் பார்ன்சுடன் சண்டையிட்டு, இங்கிலாந்து திரும்பி டிரினிடி கல்லூரியின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்[26].

வாழ்க்கையின் பின்பகுதி

[தொகு]

1940, 1950 களில் அவர் பிபிசி (BBC Radio)யில் பேசிய பிறகு கல்லூரி வட்டங்களுக்கு வெளியே மிக்க புகழ் பெற்றவராக விளங்கினார். ஊடக கட்டுரைகளின் பிரதான பாத்திரமாகி, உலகின் எல்லா விடயங்களைப் பற்றியும் அவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அக்டோபர் 1948ல் திராண்ட்ஹைம் நகருக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிர் தப்பினார்.[27]. இவருடைய `மேற்குலகத் தத்தவத்தின் வரலாறு` நூல் நல்ல விற்பனையாகி, வாழ்நாள் வரை தேவையான வருமானத்தைக் கொடுத்தது.

1948ல் ஒரு பேச்சில்[28] ,

"தற்போது அமெரிக்கா மட்டும் தான் அணுகுண்டை கைவசம் வைத்திருக்கிறது. சோவியத் யூனியன் தனது ஆக்கிரமிப்பு செயல்களால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அதன் செல்வாக்கின் கீழ் வைக்க முயற்சிக்கிறது. சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்குமாயிருந்தால், அது அணுகுண்டினை கையெடுக்கும் முன்பே அதனுடன் யுத்தம் புரிவது சிறந்த வழியாகும்." என ரசல் குறிப்பிட்டார். ஏனெனில் சோவியத் யூனியனிடம் அணுகுண்டு இல்லாமலிருந்தால் மேற்கின் வெற்றி சுலபமாக கிடைத்து, போர் அழிவுகள் குறைவாக இருக்கும் என்று ரசல் கருதினார். ஆனால் பலர் ரசல் அணுகுண்டின் முதல் பிரயோகத்தை ஊக்குவிக்கிறார் என நினைத்தனர்.

ஜூன் 9, 1949 அன்று, அரசரின் பிறந்தநாள் விழாவில், இவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் கொடுக்கப்பட்டது. அடுத்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது.[29][29].

1952ல், ரசல் பட்ரீசியாவை விவாகரத்து செய்து, 1925 முதல் நட்பாக இருந்த ஈடித் ஃபின்ச் என்பவரை நான்காவது முறையாக 15 டிசம்பர் 1952 அன்று மணந்தார். அந்த மண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததால் ஈடித், ரசலின் மரணம் வரை அவருடன் வாழ்ந்தார், ரசலின் மூத்த மகன் ஜானும், அவரது மனைவி சூசனும் மூளை நோயால் பாதிக்கப்பட்டனர். அதனால் ரசலும் ஈடித்தும் ஜானின் மூன்று பெண்களுக்கும் சட்டரீதியில் காப்பாளார்கள் ஆயினர். அதில் இரண்டு பெண்கள் பிற்காலத்தில் ஷிசோபிரெனியா நோயினால் பீடிக்கப்பட்டனர்.

அரசியல் நோக்கங்கள்

[தொகு]

ரசல் 1950, 1960 களில் பல அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவாகத் தனது கருத்துக்களை வெளியிட்டார். அவைகளில் முக்கியமானவை அணுகுண்டு ஆயுதத்தடையும், வியட்நாம் போரை எதிர்ப்பதும் ஆகும். அணுகுண்டு கைவிடலைக் கோரி, 11 நன்கறியப்பட்ட அணு இயற்பியலறிஞர்கள் மற்றும் மேதைகளால் கையெழுத்திடப்பட்ட ரசல்-ஐன்ஸ்டைன் பிரகடனம் 1955ல், வெளியிடப்பட்டது.[30] அவர் உலகத் தலைவர்களுக்கு இது தொடர்பான பல கடிதங்களை எழுதித் தெளிவுபடுத்தினார். ”குட் டைம்ஸ், ஒண்டர்புல் டைம்ஸ்” என்ற இரு போரெதிர்ப்புத் திரைப்படங்களை எடுத்த லியோனல் ரோகோசின் என்பவருடன் நட்பு கொண்டிருந்தார். பல இளைய புதிய இடதுசாரி இயக்க உறுப்பினர்களுக்கு ரசல் நாயகனாக தோன்றினார். 1960 களில் அமெரிக்காவின் இன அழிப்பு என கருதப்பட்ட செயல்களுக்காக மிகவும் கவலை கொண்டார். 1963ல் சமூகத்தில் தனி நபர் சுதந்திரம் தொடர்பில் எழுத்தாளர்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட “ஜெரூசலம் பரிசு்” என்ற பரிசினை முதல் வருடத்தில் பெற்றார்.[31] 1965ல் தொழில் கட்சி அரசு வியட்நாம் போருக்கு துருப்புகளை அனுப்புமோ என்ற கவலையில் தனது பிரித்தானிய தொழில் கட்சியின் உறுப்பினர் அட்டையைக் கிழித்தெறிந்தார்.

கடைசி வருடங்களும், மரணமும்

[தொகு]

ரசல் தன் வரலாற்று நூலை மூன்று தொகுதிகளாக 1967,1968,1969 களில் வெளியிட்டார். உடல்நிலை தளர்ந்தாலும், இறுதி வரை தெளிவான மனத்துடனும், சிந்தனையுடனும் இருந்தார். 23 நவம்பர் 1969 அன்று த டைம்ஸ் செய்தித்தாளுக்கு செகோஸ்லாவாக்கியாவில் நடைபெற இருக்கும் போலிக் குற்றச்சாட்டு நீதிமன்ற வழக்குகள் மிகவும் கவலை தருபவையாக உள்ளன என எழுதினார். அதே மாதம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயளாளர் ஊ தாண்டுவுக்கு, அமெரிக்கா வியட்நாமில் செய்த சித்திரவதை, இன அழிப்பு பற்றி ஒரு சர்வதேச குற்ற விசாரணை மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அடுத்த மாதம், சோவியத் பிரதமர் அலெக்சி கோசிஜனிடம், எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து அலெக்சாண்டர் சோல்ஷனிஸ்தனை வெளியேற்றுவதற்குக் கண்டனம் தெரிவித்தார். 31, ஜனவரி 1970 அன்று ரசல் இஸ்ரேலின் பாலஸ்தீனிய தரை ஆக்கிரமிப்பைக் கண்டித்து, இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனிய நிலங்களில் இருந்து விலகி வரவேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.[32] அதுதான் ரசலின் வாழ்க்கையிலேயே இடம் பெற்ற கடைசி அரசியல் நடவடிக்கையாகும்.

ரசல் இன்ப்ளுவென்சா சுரத்தினால், வேல்சில் உள்ள தன் வீட்டில் 2ம் பிப்ரவரி, 1970ல், இறந்தார். அவரின் விருப்பப்படி இவர் உடல் மதச் சடங்குகள் எதுவும் இல்லாமல் தகனம் செய்யப்பட்டு, சாம்பல் வேல்ஸ் மலைகளின் மீது தெளிக்கப்பட்டது.

பகுப்பாய்வு தத்துவம்

[தொகு]

பெர்ட்ராண்ட் ரசல் பகுப்பாய்வு தத்துவம் என அழைக்கப்படும் இயல்களின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தார். 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அவர் ஜி.ஈ.மூருடன் சேர்ந்து, "பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிரான கிளர்ச்சி” என்னும் நூலை எழுதினார். இலட்சியவாதம் என்ற தத்துவம் ஜி.டபிள்யு.எஃப்..ஹெகல் என்பவராலும், எஃப்.எச்.பிராட்லி என்பவராலும் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது.[33] இந்த விமர்சனத்தின் எதிரொலியாக 30 வருடங்களுக்குப் பின், வியன்னாவில் தருக்க பாசிடிவிஸ்டுகளினால் ரசல் மற்றும் மூர் ஆகியோர்களைப் பற்றிய பிழையான எண்ணக்கருக்கள் விதைக்கப்பட்டன. ரசல் குறிப்பாக இலட்சியவாதத்திற்கும், ஒட்டுசேர்வாதத்திற்கும் (coherentism) சார்பான `உள் உறவுகள் சித்தாந்தம்` (doctrine of internal relations) என்பதை விமர்சனம் செய்தார். ரசலின் கூற்றின்படி, அந்த சித்தாந்தம் ஒரு பொருளை அறிந்து கொள்ள, அதனுடனுள்ள அனைத்துப் பொருள்களின் உறவையும் அறிய வேண்டும் என சொல்கிறது. ரசல், இச்சித்தாந்தத்தின் பிரகாரம் அந்தரம், காலம், விஞ்ஞானம், எண் இவற்றை புரியகொள்ள முடியாமல் போகும் என்றார்.[34]

ரசலும், மூரும் அவர்கள் கணிப்பில் தத்துவத்தில் இருக்கும் பொருளற்ற, ஒட்டுசேராத உறுதிக் கூற்றுகளை இல்லாமலாக்க முயன்றனர். அவர்கள் இருவரும் வாதத்தில், தத்துவக் கோட்பாடுளிலுள்ள துல்லியம் மற்றும் தெளிவு ஆகியவற்றை, சரியான மொழியின் பிரயோகத்தினால் மிக எளீமையான இலக்கண பகுதிகளாக உடைத்து அடைய முயன்றனர். மேலும் ரசல் முறையான தருக்கம், விஞ்ஞானம் ஆகியவை தத்துவவாதியின் முக்கிய உபாயங்கள் என்றார். இன்னும் சொல்லப் போனால், முன்னால் இருந்த தத்துவவாதிகளைப் போல் அல்லாது, தத்துவத்திற்கு ஒரு தனி வழி இல்லை என்று ரசல் நம்பினார். அவர் தத்துவவாதியின் வேலை என்பது, உலகைப் பற்றிய மிகப் பொதுவான அறுதியுரைகள் எனவும், குழப்பத்தை இல்லாமல் செய்வது எனவும் நினைத்தார். குறிப்பாக அவர் மெடாபிசிக்ஸ் என்பதின் மிகைகளைத் தடுக்க விரும்பினார். ரசல் ஓக்கமின் வில்லியத்தின் கொள்கையான தேவைக்கற்ற பாகுபாடுகளை நிராகரித்தல் என்பதை தன் பாகுபாட்டியலின் மையமாக உள்வாங்கினார்[35][36]

தருக்கமும், கணிதத்தின் தத்துவமும்

[தொகு]

"ஜியோமிதியின் அஸ்திவாரம் மீது" என்ற ரசலின் முதல் கணித நூல் 1987ல் பிரசுரிக்கப் பட்டது. இதில் இமானுவேல் காண்டின் (1724–1804) பாதிப்பை உணர முடிகின்றது. ரசல் அந்நூலில் விபரித்த கருத்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் அந்தர-காலம் என்ற கருத்தை முடியாதது ஆக்கும் என உணர்ந்து, கணிதம் மற்றும் ஜியோமிதி வரையிலான இமானுவேல் கண்ட்டின் அணுகுமுறையையும், தான் முதலில் விபரித்த கருத்து பற்றிய சிக்கலான முடிவையும் நிராகரித்தார்[37]

எண் என்பதின் வரையறுத்தலில் ஈடுபட்ட ரசல், ஜார்ஜ் பூல், கெஓர்க் கேண்டோர், மற்றும் அகஸ்தஸ் டி மார்கன் ஆகியோரின் ஆய்வுகளை படித்தார். மக்மாஸ்டர் பல்கலை கழகத்தில் பெர்ட்ராண்ட் ரசலின் ஆவணங்களோடு சார்ல்ஸ் பியர்ஸ் என்பவருடைய அல்ஜீப்ராவின் தருக்கம் பற்றிய படிப்பு சீட்டுகளும் உள்ளன.[38] 1900ல் ரசல் சர்வதேச தத்துவ மகாநாட்டில் பங்கு கொண்டு, இத்தாலிய கணிதவியலாளர் கீசப்பே பீனோவின் ஆய்வுகளை அறிந்து கொண்டார். அவர் பீனோவின் புதிய குறியீட்டு முறைமை மற்றும் இயற்கணிதத்தின் அடிகோள்கள் போன்றவற்றில் அவதானம் செலுத்தினார். மேலும் பீனோவின் கருத்துக்களை, தருக்கரீதியில் 0, எண், சந்ததி, மற்றும் ஆங்கில சொல் த இவற்றைத் தவிற மற்ற எல்லா அடிகோள் சொற்களையும் வரையறுத்தார். 1897 முதல் 1903 வரை, ரசல் பீனோவின் குறியீடுகளை இயற்கணிதத்திற்கு பயன்படுத்தி எழுதிய பல கட்டுரைகளை பிரசுரித்தார். அவற்றில் சில ”முறையின் கருத்து” , (பிரெஞ்சில்) "உறவுகளின் தருக்கமும் கணத்தின் கோட்பாடில் உபயோகமும்", ”முதலெண்கள் மேல்” ஆகியவையாகும். அவர் கணிதத்தின் அஸ்திவாரங்களை ”இரண்டாம் வகை தருக்கம்” என்பதிலிருந்து ஆக்கமுடியும் என திடமாக நம்பினார். மேலும் இரண்டாம் வகை தருக்கம் வரம்பற்ற புரிதல் அடிக்கோளை (unrestricted comprehension axiom) உட்கொண்டுள்ளது எனவும் நம்பினார்.

ரசல் கோட்லோப் ஃபிரேக தானே தனியாக 0, சந்ததி, எண் இவற்றின் வரையறைகளைக் கண்டுபிடித்தார் என அறிந்தார். எண்ணின் வரையறுப்பு இப்போது 'ரசல்-ஃபிரேக வரையறுப்பு' என அழைக்கப் படுகிறது. ரசல் 1903 ல் பிரசுரித்த `கணிதத்தின் கோள்கள்” என்ற புத்தகத்தில் ஃபிரேகவின் கண்டுபிடிப்பை சுட்டிக் காட்டினார்)[39]. ஆனால், இந்நூலின் பிற்சேர்க்கையில் ஃபிரேகவின் இரண்டாவது - வகை சார்பலன்கள் முதல்-வகை சார்பலன்களை ஆதாரமாகக் கொண்டதின் முரண்பாடு மெய்மையை விளக்கினார். ரசல் முரண்பாடு மெய்மை என அழைக்கப்படும் பிரச்சினைக்கு விடை காண முதல் அடிகள் எடுத்தபோது, கணிதத்தின் கோள்கள் எழுதும் முன், காண்டோரின் `மிகப் பெரிய முதலெண் இல்லை` என்ற நிரூபணத்தை அறிந்து, அது தவறு என நினைத்தார், காண்டோர் முரண்பாடுமெய்மை என்பது ரசல் முரண்பாடுமெய்மையின் ஒரு வகை எனக் காட்டப்பட்டது. இது ரசலை வர்க்கங்களை பகுப்பாய்வதற்கு தூண்டியது, ஏனெனில் எந்த பொருளின் எண்ணுக்கும், அதன் வர்க்கத்தின் எண்ணிக்கை விளைவு அந்த எண்ணை விட அதிகம் என அறியப்பட்டிருந்தது. இது ஒரு சுவாரசியமான வர்க்கம், அதாவது வர்க்கங்களின் வர்க்கம் என்பதை கண்டுபிடிக்க ஏதுவானது. அது தன்னையே உட்கொண்டுள்ள வர்கங்கள், மற்றும் தன்னை உட்கொண்டில்லாத வர்கங்கள் என இரு வகை வர்க்கங்களை கொண்டது. இந்த வர்கத்தின் மேல் எழுந்த சிந்தனைகள் ரசலை “புரிதலின் கோள்” என்றழைக்கப்படுவதின் உயிர்சேத பிழையை கண்டுபிடிக்க வைத்தன. அதனாலெழும் முரண்பாடு, அதாவது, 'இ' இ யின் உறுப்பினர் இல்லை என்ற ஒரே ஒரு நிபந்தனையின் கீழ்தான் 'இ` இ என்பதின் உறுப்பினராகும். இது ரசலின் முரண்பாட்டு மெய்மை என அறியப்படுகிறது. இதற்கு விடையை `கணிதத்தின் கோள்` களின் பின்னிணைப்பில் ஈனை இட்டு, அதை ”வகைகளின் கோட்பாடு” Theory of types. என்று கூறினார். அது வெகுளியான கணங்களின் கோட்பாட்டில் (naive set theory) உள்ள முரண்களை வெளியே கொண்டு வந்தது மட்டுமில்லாமல், ரசலின் கண்டுபிடிப்புகள் நவீன ”அடிகோள் கண கோட்பாடு” axiomatic set theory என்பதை பிறப்பாக்கம் செய்தன. அது மேலும் ஃபிரேகவின் இயற்கணிதத்தை தருக்கமயமாக்குவதின் திட்டத்தை அழித்து, ”வகைகளின் கோட்பாடு” மற்றும் ரசலின் பிந்தைய கண்டுபிடுப்புகள் தற்கால கணினி விஞ்ஞானம், மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை போன்றவற்றின் அஸ்திவாரத்தை இட்டன.

ரசல் தருக்கவாதத்தை, அதாவது கணிதம் தருக்கமயம் ஆக்கமுடியும் என்ற கருத்தைக் கூறி, அவரின் முன்னாள் ஆசான் ஆல்பிரட் நார்த் ஒயிர்ஹெட் உடன் சேர்ந்து எழுதிய `கணித கோட்பாடுகள்` Principia Mathematica, என்ற நூல், எல்லா கணிதத்திற்குமான அடிக்கோள் முறையாக ஆயிற்று. 1910ல் வந்த நூலின் முதல் பகுதி, ரசலின் பெரும்பான்மை ஆக்கம் என கருதப்படுகிறது. ஏனைய நூல்களுக்கு மேலாக அது, கணித அல்லது குறியியல் தருக்கத்தை விசேட துறை ஆக்கியது. மேலும் நூலின் இரு பகுதிகள் பிரசுரிக்கப்பட்டன என்றாலும், ஆரம்ப திட்டமான ஜியோமிதியை பற்றிய நான்காம் பகுதி வெளீவரவில்லை, ரசல் தனது முதலாவது பதிப்பில் திருத்தம் பார்க்க முடியாமல் போனாலும், அவர் புதிய பிரச்சினைகளையும், வளர்ச்சிகளையும் பற்றி இரண்டாம் பிரசுரத்தின் முன்னுரையில் கூறியிருந்தார். மிக சிக்கலான மற்றும் நுணுக்கமான `கணித கோட்பாடு`களை முடித்தவுடன், ரசல் சோற்வுற்று தன் அறிவுத் திறன்கள் அதில் முழுமையாக பிரயோகப்படுத்தப்படவில்லை என நினைத்தார்.[40] அந்நூல், ஃபிரேகவின் முரண்பாடு மெய்மையை தவிர்த்தாலும், பின்னர் குர்டு கோடல், கணித கோட்பாடுகள் அல்லது எந்த முரணற்ற தொடக்கநிலை மீள்வரு இயற்கணிதமுறையும் (system of primitive recursive arithmetic), அந்த முறைக்குள்ளேயே செய்யப் படும் ஒவ்வொரு அறுதியுரையும் தீர்மானம் ஆக்க முடிபவை என முடிவு எடுக்க முடியாது, அதாவது எந்த அறுதியுரையோ அல்லது அதன் எதிர்மறையோ அந்த முறைக்குள் நிரூபிக்கலாம் என முடிவுகட்ட இயலாது என்று கூறியது. (கோடலின் முழுவிலா தேற்றம் Gödel's incompleteness theorem ). ரசலின் கணக்கு தருக்கத்தில் எழுதப்பட்ட முக்கிய கடைசி நூல் “கணித தத்துவத்திற்கு அறிமுகம்” என்பதாகும். அது அவர் முதலாம் உலகப் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சிறையில் இருந்த போது எழுதப்பட்டது. அந்நூலின் உள்ளடக்கம் பொதுவாக முந்தைய ஆக்கங்களின் விளக்கமும், அவற்றின் தத்துவ சிறப்புக்கள் பற்றியதுமாக இருந்தது.

மொழியின் தத்துவம்

[தொகு]

ரசல் மொழியை தத்துவத்தின் நடுவில் வைத்தார்; அது லூட்விக் விட்கன்ஸ்டைன், கில்பர்ட் ரைல், ஜே.எல்.ஆஸ்டின், பி.எஃப்.ஸ்ட்ராசன் உட்பட மற்ற தத்துவவாதிகள் மீது பெரும் தாக்கத்தைக் கொடுத்தது. அவர்கள் தமது பணியில், ரசலின் செய்முறையையும், தருக்கத்தையும் உபயோகித்தனர். ரசலும், ஜி. ஈ.மூரும் துல்லிய உரையை ஒழுக்கமாக வற்புறுத்தினர். மொழியின் தத்துவத்திற்கு ரசலின் இன்றியமையாத பங்களிப்பு ”நிலைப்பட்ட வருணனை கோட்பாடு” ( theory of definite descriptions,) ஆகும்.

விட்கன்ஸ்டைன், ரசலின் மாணவர், அவர் இறப்புக்குப் பின் பிரசுரிக்கப்பட்ட “தத்துவ ஆய்வுகள்” (Philosophical Investigations) என்ற நூலினால் மொழி தத்துவத்தில் புகழ் அடைந்தார். ஆனால் ரசல் விட்கன்ஸ்டைனின் பிற்காலத்திய ஆக்கங்கள் உசிதமானவை அல்ல என கருதினார். ஆனால் ரசல் அவர் மீது மிக உயர்ந்த அபிப்பிராயம் வைத்து, அவரது முற்காலத்திய ஆக்கங்கள் தொடர்பாக அவரை, ஆழ்ந்த மனம், அதீத ஆர்வம், அதி ஊக்கம், இலக்கணம் ஆகியவை கொண்டவர் என்றும், அவர் ஒரு மேதாவிக்கு மிகச் சிறந்த மரபான உதாரணம் என்றும் கூறினார். - [41].

தருக்க அணுவாதம்

[தொகு]

தத்துவ பகுப்பாய்வின் பரபௌதீக அணுகுமுறையும், அவரது அனுபவவாத மைய தருக்கவாதத்தையும் தருக்க அணுவாதம் என்று ரசல் அழைத்ததார். தருக்க அணுவாதத்தை ”தருக்க அணுவாதம்” என்ற சில விரிவுரைகளில் முதலில் 1918ல் வெளியிட்டார்.[42] இவ்விரிவுரைகளில் ரசல், தன் கருத்தான, ஒரு அமைந்த மொழி, அது உலகை பிரதிபலித்து, நம் அறிவை அணுமட்ட அறுதியுரை மற்றும் அதன் உண்மைச்செயல் அளவிலேயே காண முடியும் என்பதை விவரித்தார். தருக்க அணுவாதம் தீவிர அனுபவவாதத்தின் (empiricism) ஒரு வகையாகும். ஏனெனில் ரசல் அப்படிப்பட்ட இலட்சிய மொழியில் ஒவ்வொரு பொருள் உள்ள அறுதியுரை, நமக்கு பிரத்யக்சமாக தெரிந்த பொருள்களின் நேரடித் தொடர்பாக சுட்டிக் காட்டும் சொற்களை வைத்திருக்க வேண்டும் அல்லது நமக்கு பிரத்யக்சமாக தெரியும் பொருள்களை சுட்டிக்காட்டும் சொற்களால் வரையறுக்கப்பட வேண்டும் என வாதிட்டார். ஆனால் சில தருக்க சொற்களான எல்லா, (ஆங்கில) த, (ஆங்கில) இஸ் போன்ற சொற்களுக்கு அமைப்பிலிருந்து விதிவிலக்கு அளித்தார். ஆனால் அச்சொற்களின் மீது நமது புரிதல் பற்றி அவர் திருப்தி அடையவில்லை. ரசலின் அணுவாதத்தின் மையக் கருத்து என்னவென்றால், உலகம் தருக்க ரீதியில் சுயமான சுதந்திரமான சங்கதிகளாலும், பன்மையான சங்கதிகளாலும் ஆனது. நமது அறிவு நேரடி அனுபவத்தின் தரவை நம்பியுள்ளது. ரசல் வாழக்கையின் பிற்காலத்தில் தருக்க அணுவாதத்தின் சில தன்மைகளை முக்கியமாக ஒரு அமைப்பில் ஐயம் கொள்ளத் தொடங்கினார்.

அறிவுக்கோட்பாடு

[தொகு]

ரசலின் அறிவுக்கோட்பாடு பல மாற்றங்களை அடைந்தது. முதலில் அவர் நவ-ஹெகல்வாதத்தை கைவிட்டவுடன், வாழ்நாள் முழுவதும் தத்துவ நிஜத்துவவாதி ஆக இருந்தார், அதாவது நன் நேரடி அனுபவம் அறிவை சேர்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரது சில கருத்துகள் தாக்கத்தை இழந்து விட்டாலும், அவர் சொன்ன அறிவு பெறும் முறையின் வேற்றுமைகள் தத்துவ உலகத்தில் செல்வாக்கு வைத்துள்ளன. அவையாவன பிரத்யக்சத்தின் அடிப்படை அறிவு, மற்றும் விவரண அடிப்படை அறிவு ஆகும். சில வேளைகளில் நாம், நமது இந்திரியங்களின் மூல தரவு, அதாவது நிற பார்வைகள், சப்தங்கள், இப்படிப்படவை மட்டுமே நமக்கு பிரத்யக்சமாகும்; ஆனால் மற்றவை எல்லாம் அதாவது, இந்த இந்திரிய தரவுகள் சுட்டிக்காட்டும் அல்லது அவற்றினால் காரணவழியாக அடையும் தூலப் பொருள்கள், அதாவது வருணனை வழி அறிவு நேரடியாகத் தெரிவதில்லை.[43], என ரசல் நினைத்தார். இந்த வேற்றுமை பரந்த உபயோகத்தை பெற்று இருக்கிறது.

பிற்கால தத்துவத்தில், ரசல் ஒருவித “சார்பற்ற ஒருபொருண்மை வாதம்” ( neutral monism, ) என்பதில் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார் - அதாவது பொருள் உலகம், மற்றும் மன உலகம் இவற்றின் வித்தியாசங்கள் நியதியற்றவை, ஆனால் இரண்டையும் சார்பற்ற பண்பு ஆக மற்றலாம். இக்கருத்தை முதலில் அமெரிக்க தத்துவவாதி/மனோதத்துவவாதி வில்லியம் ஜேம்சும், அதன் முன்னால் ரசலால் மிகவும் பாராட்டப்பட்ட பருச் ஸ்பிநோசாவும் வெளியிட்டனர்.[44] ஜேம்சின் “தூய அனுபவம்” என்பதற்குப் பதிலாக, ரசல் நம் நோக்கங்களின் முதல் நிலைகளை `சம்பவங்கள்` என்றார் - அது அவருடைய பழைய ஆசான் ஒயிட்ஹெட்டின் “செய்முறை தத்துவம்” (process philosophy) கருத்தை ஒட்டி இருக்கிறது.

அறிவியியல் தத்துவம்

[தொகு]

ரசல் தான் தன்னுடைய தத்துவ வழியைப் பற்றி திடநம்பிக்கை வைக்கிறார் , ஆனால் அவருடைய தத்துவ முடிவுகள் பற்றி அவ்வளவு திட நம்பிக்கை இல்லை எனவும் அறுதியிட்டார். ரசல் விஞ்ஞான முறையில் விசுவாசம் வைத்தாலும், விஞ்ஞானத்தினால் தற்காலிக பதில்களைத்தான் அடைய முடிகிறது. விஞ்ஞானத்தினால் பெரிய அங்கக ஒற்றுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் பயன் தராது எனவும் நம்பினார்[45]. அர்சலின் தத்துவத்திலும் அது உண்மை என்றார். விஞ்ஞானம், தத்துவம் இரண்டின் முடிவும், இலக்கும் உண்மையை புரிதல் ஆகும், முன்னுரைப்பது மட்டும் அல்ல என ரசல் கூறினார்.

விஞ்ஞானத்தின் தத்துவம் ஒரு விசேஷ துறையாவதற்கு ரசலின் பணி வித்திட்டது. விஞ்ஞானம் பற்றிய ரசலின் கருத்துகள் பெரும்பான்மையாக வெளியிடப்பட்டது அவரரல் 1914 ல் எழுதப்பட்ட “தத்துவத்தில் விஞ்ஞான முறையின் களமாக நம் புற உலகத்தின் அறிவு” என்ற நூலில்தான். மேலும் அந்நூல் தருக்க பாசிடிவிசவாதிகளை பெரிய அளவில் ஆட்டம் காட்டியது.

ரசல், பிரத்தியட்ச வழியில் தெரியும் நம் மூளையின் உள்குணம் தவிர, பௌதீக உலகத்தை, நுண்புல அமைப்பில்தான் தெரிந்து கொள்ள முடியும் என்றார். நோக்கமுடையவை, நோக்கமற்றவை இவற்றின் மிகச்சரியான ஒரே சமய ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு, நோக்கங்களும் தூல உலகத்தில் நாம் நேராக அறியும் உள்குணத்தின் மீதான ஒரு பகுதி ஆகும் என்று ரசல் கூறினார்.[46]

ரசல் ”அணுக்களின் அகரம்” The ABC of Atoms 1923 , ”சார்பியலின் அகரம்” The ABC of Relativity (1925), உள்ளிட்ட பல விஞ்ஞான நூல்களை எழுதினார்.

நெறிமுறையியல்

[தொகு]

ரசல் நன்நெறி பற்றி அதிகளவு எழுதினாலும், அது தத்துவத்தின் ஒரு பகுதி எனவும், அதை பற்றி எழுதும் போது தான் ஒரு தத்துவவாதியாக இருந்து எழுதுவதாகவும் நம்பவில்லை. தன் முதல் வருடங்களில், ஜி.ஈ.மூரின் நெறியின் கோள்கள் Principia Ethica என்ற நூலினால் மிகவும் தாக்கத்திற்குள்ளானார். மூருடன் சேர்ந்து அவர், நெறி பற்றிய சங்கதிகள் புறவயமானவை, ஆனால் அவற்றை உள்ளுணைர்வு மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும். அவை பொருள்களின் சாதாரண குணங்கள், ஆனால் பொருள்களுடன் சமமானதல்ல. அதனால் நெறியின் குணங்களை நெறியற்ற குணங்களால் பகுப்பாய்வு செய்ய முடியாது என நினைத்தார். நெறி பற்றிய சொற்கள் அகவய முக்கியத்துவங்களைப் பற்றி பேசுவதால், அவற்றை புறவய சங்கதிகளின் முறையில் நிரூபிக்க முடியாது என நம்பிய டேவிட் ஹியூம் உடன் ஒத்துக் கொண்டார், டேவிட் ஹியூம் அவருடைய தத்துவ நாயகனாக இருந்தார்.

ரசலின் மற்ற சித்தாந்தகளையும் சேர்த்து, அவை தருக்க பாசிடிவிசவாதிகளுக்கு தாக்கம் கொடுத்தன. அதனால் அவர்கள் உணர்ச்சிவாதம் என்பதை ரசலுக்கு எதிராக முன்வைத்தனர். உணர்ச்சிவாதத்தின் நெறி அறுதியுரைகள் அர்த்தமற்றவை, அல்லது நம் சாய்வுகளையும் விருப்பங்களையும் பற்றிப் பேசுபவையாகும். ஆனால் ரசல் நெறி அறுதியரைகளை அவ்வளவு குறுகியதாக பார்க்கவில்லை, ஏனெனில் அவருடைய நெறிக் கேள்விகள் அர்த்தமுள்ளது மட்டுமல்லாமல், எந்த சமுதாயத்திற்கும் முக்கியமானது என்றும் கருதினார். ரசல் பகுத்தறிவின் சான்றோன் எனக் கருதப்பட்டாலும், அவர் பகுத்தறிவு நன்நெறிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என ஹியூமுடன் சேர்ந்து நம்பினார்.

சமயமும் இறையியலும்

[தொகு]

ரசல் மதம் என்பது மூடநம்பிக்கை என அறுதியிட்டார். சில நல்ல விளைவுகள் இருந்தாலும், மாெத்தத்தில் மதம் மனிதர்களுக்கு தீங்குதான் செய்கிறது. மதமும், மத நோக்கும் அறிவு வளர்ச்சியை தடுப்பவை. அச்சத்தையும், சுதந்திரமின்மையும் வளர்க்கிறது. அதனால் போர், துன்பங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு பொறுப்பாகிறது.

1949 ல் ”நான் நாத்திகனா இறை ஐயம் கொண்டவனா” என்ற உரையில்,

நான் “தத்துவ அளவில் அல்லது தத்துவ அவையினர் முன்னிலையில் பேசுவதானால், என்னை இறை ஐயம் கொண்டவன் என வருணிக்க வேண்டும். ஏனெனில் ஆணித்தரமாக கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை உறுிப்படுத்துவதற்கு நிரூபணங்கள் இல்லை. அதே சமயம் சாதாரண மனிதனுக்கு என் எண்ணத்தை சொல்வதானால், என்னை நாத்திகன் என வருணிக்க வேண்டும்" என்று கூறினார். மேலும்,

” நான் மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பினாலும், இரு வருடங்கள் கழித்து (1896ல்), கடவுள் உண்டு என நம்பினேன் , ஏனெனில் “முதல் காரணி” வாதம் அழிக்க முடியாததாக தோன்றியது. 18ம் வயதில் கேம்ப்ரிட்ஜ் செல்லும் முன்பு, மில்லின் சுயசரிதையை படித்தேன். அதில் அவர் தந்தை `என்னை சிருட்டித்தவர் யார்` என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஏனெனில் அது `கடவுளை யார் சிருட்டித்தது` என்ற கேள்விக்கு அழைத்துச் செல்லும் எனச் சொல்வதாக படித்தேன். அதிலிருந்து “முதல் காரணி” வாதத்தை கைவிட்டு, நாத்திகனானேன். ”பெர்ட்ரண்டு ரசல் - சுயசரிதை - ப 36“

மேலும்,

“தருக்கரீதியில் உலகம் 5 நிமிடம் முன்னால்தான் எல்லா இனங்களுடன் தோன்றிற்று, அதில் மக்களும் இல்லாததொரு பழையகாலத்தை “ஞாபகம்” வைத்துள்ளனர் என்று சொல்ல தடயம் ஒன்றும் இல்லை. தருக்க ரீதியில் பல காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லை. இப்பொழுதோ, எதிர்காலத்திலோ நடக்கக் கூடியது அல்லது உலகம் 5 நிமிடம் முன்னாடிதான் ஆக்கப் பட்டது என்ற முன்கோளை, பொய் என நிரூபிக்க முடியாது” என்றும் கூறினார்.

பெர்ட்ரண்டு ரசல் - “மூளையின் பகுப்பாய்வு” 1921 ப 159-160.

பால்ய பருவத்தில் ரசல் நிரந்தர உண்மைகளுக்காக ஏங்கினார், அவருடைய புகழ்பெற்ற கட்டுரையான “சுதந்திர மனிதனின் துதி” பரணிடப்பட்டது 2009-04-19 at the வந்தவழி இயந்திரம், என்பதில் இயற்கைக்கு புறம்பான, அமானுஷ்ய நம்பிக்கைகளை வெறுத்தாலும், நான் வாழ்க்கையின் ஆழ்ந்த பொருளைப் பற்றி ஏக்கம் கொண்டுள்ளதாக ஒத்துக் கொண்டார்.

ரசலுடைய மதம் பற்றிய கருத்துகள் `நான் ஏன் கிருஸ்துவன் இல்லை` `மதம், இத்தியாதி ,பற்றிய இதர கட்டுரைகள்` என்ற இரு நூல்களில் காணப்படுகின்றன. ”நான் ஏன் கிருஸ்துவன் இல்லை” என்பது பற்றி 6 மார்ச் 1927 ல் பாட்டர்சீ நகர மாளிகையில், தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண்டன் கிளையில் உரையாற்றினர், ஒரு வருடம் கழித்து அது துண்டுப்பிரசுரமாக வெளிவந்தது. அதில் கடவுள் நம்பிக்கையின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையியல் பற்றியும் பேசுகிறார். அவருடைய முடிவு,

”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டது என நினைக்கிறேன். அது ஒரு பகுதி நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய பீதி, மற்றொரு பகுதி நம் பக்கத்தில் ஒரு அண்ணன் இருந்து நம் துக்கங்களிலும் வாழ்க்கை கஷ்டகாலங்களிலும், சச்சரவுகளிலும் ஆதரவு கொடுப்பதாக ஒரு உணர்வு....... ஒரு நல்ல உலகம், அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மீது பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் வேண்டவில்லை” என்பதாகும்.

தத்துவம் மீது செல்வாக்கு

[தொகு]

ரசல், குறிப்பாக ஆங்கிலம் பேசும் உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஃபிரேக, மூர், விட்கன்ஸ்டைன் போன்றோரின் செல்வாக்கு இருந்தாலும், ரசல் பகுப்பாய்வை தத்துவ தொழிலின் முக்கிய முறையாக்கினார். 20ம் நூற்றாண்டு பகுப்பாய்வு இயக்கங்கள் ஓரளவு ரசலுக்கு கடமைப்பட்டவையாக இருந்தன.

விட்கன்ஸ்டைனின் ரசல் மீதான தாக்கம், ரசலின் கணித உண்மைகள் நிரூபணத்திற்கு அப்பாற்பட்ட அறுதியுரைகள் என நம்பவைத்தது. 1901 ல் அவர் கூறிய முரண்மை மெய்மை, 30 வருடங்களுக்கு பின் நிலையாகக்கப்பட்ட குர்ட் கோடலின் முடிவெடுக்கமுடியாத தேற்றங்கள் போன்றவை ரசலை கணிதத்தின் மேல் அவருக்குள்ள ஐயமின்மையை குலைக்க வைத்தன. ஐரோப்பிய பல்கலை கழகங்களில் பரவிய இந்த ஐயம் ஒருகால் ரசலின் முக்கியமான தாக்கமாக இருக்கலாம். ரசலுக்கு விட்கன்ஸ்டைன் மீதுள்ள தாக்கத்தின் ஆதாரம், ரசல் பிரசுரிக்க உதவிய விட்கன்ஸ்டைனின் "தருக்க தத்துவ ஏடு" நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதைக்காெண்டு, விட்கன்ஸ்டைன் டாக்டர் பட்டம் பெற்று, கேம்ப்ரிட்ஜ் பலகலைகழகத்தில் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொள்ள ரசல் உதவினார் என்று கூறலாம்.[47] ரசலின் தாக்கம் மற்ற தத்துவவாதிகளான அல்பிரட் அயர், ருடால்ஃப் கார்நாப், அலோன்சோ சர்ச், டேவிட் கப்லன், சால் கிரிப்க, காரல் போப்பர், டபிள்யூ.வி.குவின், ஜான் சேரல் ஆகியோரின் மேல் வெளிப்படையாகக் காணப்படுகின்றது.

ரசல் பெரும் தொகையான எழுத்துகளை விட்டுச் சென்றார்.. குமரப் பருவத்தில் இருந்து, தினமும் சராசரி 3000 வார்த்தைகளை எழுதினார். அவைகளில் மிகச்சிறிய திருத்தங்களே இருந்தன. அவர் முதல் வரைவே மிகச்சிக்கலான, அதிநுட்பமான விஷயங்களிலும் கடைசி வரைவாக இருந்தது. அவரது பிரசுரிக்கப் படாத எழுத்துகள் ஒரு பொக்கிஷம். ஆய்வாளர்கள் அதிலிருந்து இன்னும் பல ஆழ்ந்த நுட்பங்களை கற்றுக் கொண்டு வருகிறார்கள்.

அமைதிவாதம், யுத்தம், அணுகுண்டுகள்

[தொகு]

ரசல் எப்பொழுதும் முழு அமைதிவாதி அல்ல. அவர் குறிப்பிட்ட போர்களை நாகரீகத்தின் எதிரி, அதனால் நன்நெறி அற்றது என்று சொல்லி எதிர்த்தார். அதே சமயம் 1915 ல் அவர் எழுதிய கட்டுரையான "போரின் நன்நெறி இல், போர்களை நாகரீகத்தை முன்னேற்றுபவை என்று ஆதாரப்படுத்தினார். ரசலின் முதலாவது உலக யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள், அவருக்கு அபராதம், சிறைவாசம், பிரித்தனுக்குள் பிரயாணத்தின் கட்டுப்பாடுகள், டிரினிடி காலேஜில் ஆசிரிய பதவி இழப்பு ஆகியவற்றை கொண்டு வந்தன. 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்பு விடுதலை கிடைத்தாலும், 1 வருடம் சிறை அதிகாரிகள் மேற்பார்வையில் இருந்தார்[48] . இரண்டாம் உலகப் போர் துவங்கும் வரை பிரித்தானிய அரசின் ஹிட்லரை சாந்தப்படுத்தும் கொள்கையை ஆதரித்தார், ஆனால் 1940 ன் போது, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு ஹிட்லரை தோற்கடிக்க வேண்டும் என்றார்.[49]

அணுகுண்டின் முதல் பிரயோகத்தில் இருந்து, அதை எப்பொழுதும் எதிர்த்தார். 1955 இல், ரசல் ஐன்ஸ்டைன் பிரகடனத்தை வெளியிட்டார். அது ஐன்ஸ்டைன், மற்றும் 9 அறிவு ஜீவிகளால் கையொப்பம் இடப்பட்டது. அது விஞ்ஞானம், உலக விவகாரங்கள் மீதான முதல் பக்வாஷ் மகாநாட்டை ஏற்படுத்தியது. 1958ல், ரசல் அணுகுண்டு கைவிடல் இயக்கத்தின்]] முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 வருடங்கள் கழித்து, ஒத்துழையாமையை அது ஆதரிக்கவில்லை என்பதால், அதிலிருந்து ராஜிநாமா செய்தார். செப்டம்பர் 1961ல், ஒரு வாரம் ஒத்துழையாமையை தூண்டியதால் சிறைக்கு அனுப்பப்பட்டார், பாதுகாப்பு அமைச்சகம் முன் அவர் `அணுஆயுதத்தை தடையிடு` என்ற ஆர்பாட்டம் செய்ததால் ஏற்பட்டாலும், அவரது வயது கருதி சிறையில் அடைக்கப்படவில்லை.

கியூபா எரிகணை நெருக்கடியின் போது, ரசல் அ.நா. ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, நிகிதா குருஸ்சாவ், ஐ.நா.வின் ஊதாண்ட், பிரித்தானிய பிரதமர் ஹரால்ட் மக்மில்லன் ஆகியோருக்கு தந்திகள் அனுப்பினார். கென்னெடியை அவர் பெரும் விமரிசனம் செய்து கென்னெடி ஹிட்லரைப் பார்க்கிலும் அபாயகரமானவர் என்றார். குருஸ்சாவ் ஒரு பெரும் மடலில் ரசலுக்குப் பதில் அளித்தார், அது சோவியத் நாட்டிலும் பிரசுரிக்கப் பட்டது[50].

மானுடத்திற்கு அணு ஆயுதங்களால் வரும் ஆபத்தை கண்டு கவலையுற்று, 1960ல், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ராபர்ட் ஆப்பன்ஹைமர், ஜோசப் ரிட்பிளாட், மற்றும் இதர புகழ் பெற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, உலக கலை விஞ்ஞான அகாதமியை நிறுவினார்.

பெர்ட்ரண்ட் ரசல் அமைதி கட்டளை மற்றும் அதன் பிரசுரக் கையேடு ”ஸ்போக்ஸ்மேன் புக்ஸ்” 1963ல் ரசலின் உலக அமைதி, மனித உரிமை, சமூக நீதிப் பணிகளை முன்னேற்றிச் செல்ல தொடங்கியது. 1963 முதல் வியட்நாமில் அமெரிக்காவின் உள்ளீட்டை எதிர்க்கத் தொடங்கினார். 1966 இளவேனிற்காலத்தில், 'வியட்நாம் போர் குற்றங்கள்' என்பதை எழுதி முடித்தார். பிறகு பிரெஞ்சு தத்துவவாதி ஜான் பால் சார்த்தரேயுடன் ரசல் தீர்ப்பாயம் என்ற சர்வதேச போர் குற்ற தீர்ப்பாயத்தை அமைத்தார். மேலும் அமெரிக்க அரசாங்கத்தின் கென்னடி கொலை அறிக்கையை ”கொலை மேல் 16 கேள்விகள் 1964 ” என்ற கட்டுரை வழியாக கண்டித்தார்.

பொதுவுடைமையும் சமவுடைமையும்

[தொகு]

ரசல் முதலில் “கம்யூனிஸ்டு சோதனை” என்பதில் பெரும் நம்பிக்கை காட்டினார். ஆனால் 1920ல் உருசிய புரட்சியைப் பார்க்க சோவியத் யூனியன் சென்று விளாடிமீர் லெனினை சந்தித்த பின், அங்குள்ள அரசியல் முறையில் நம்பிக்கை இழந்து, திரும்பி வந்தபோது “போல்ஷவிசம், கோளும் செயல்முறையும்” என விமர்சன நூல் எழுதினார். அவர் “நான் இந்த சூழலில் மிகவும் சந்தோஷமற்றவனாக உள்ளேன். அதன் பயன்பாட்டுவாதம், அன்பு, அழகு வாழ்க்கை எழுச்சி இவற்றின் மீது ஆர்வமில்லாமை என்னை நசுக்குகிறது”. என்று கூறினார். அவர் லெனினை ஒரு மத வெறியர் என்ற கோணத்தில் பார்த்தார். 1922, 1923 பொது தேர்தல்களில் ரசல் பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்டுத் தோற்றுப் போனார். அவர் ஸ்டாலினின் அரசை கடுமையாக கண்டித்தார், மார்க்சீயவாதத்தை `ஒரு சமயக் கோட்பாடு` என கருதினார்[51][52][53] ரசல் ஜனநாயகம், உலக அரசாங்கம் இவற்றிற்கு ஆதரவு கொடுத்து, `சோம்பேறிததனத்தின் புகழ்சி”, ”மனிதனுக்கு எதிர்காலம் உள்ளதா” போன்ற நூல்களில் சர்வதேச ஜனநாயக அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

பெண்கள் உரிமைகள்

[தொகு]

ரசல் , இளைஞனாக இருக்கும் போது லிபரல் கட்சியின் அங்கத்தினராக இருந்து, பெண் உரிமையைப் பற்றி பேசினார். 1910ல் வெளியிடப்பட்ட “பெண் உரிமை எதிர்ப்பு பீதிகள்” என்னும் பிரசார துண்டுப்பிரசுரத்தில், சில மனிதர்கள் பெண் உரிமையை எதிர்ப்பது ஏனெனில், பெண்களுக்கு தீங்கான வழிகள் செய்யும் சுதந்திரம் கட்டுப்பட்டு விடுமோ என்று அஞ்சுவதால் என்று ரசல் கூறினார். 1907 தேர்தலில் மக்களைவைக்கு பெண் உரிமை கட்சியின் சார்பாளராக விம்பிள்டன் தொகுதியில் நின்றார், ஆனால் தேர்தெடுக்கப் படவில்லை.[54]

காம உணர்வுகள் மீது கருத்து

[தொகு]

ரசல் 1929 ல் விக்டோரிய காலத்து மனப்பான்மைக்கு எதிராக எழுதிய "மணமும் நெறியும்" என்ற நூலில், கணவன் மனைவி உறவு இல்லாத ஆண், பெண் இருவருக்குள் பாலுறவு, அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தால் தப்பில்லை என்று கூறி, `சோதனை மணம்` அல்லது `சகா மணம்' என்று கல்யாணம் முனாலேயே இளம் பெண்களும் ஆண்களும் பால் உறவு கொண்டு மணம் புரியும் நிர்பந்தனையின்றி தங்கள் உறவை சீராக்கம் செய்யலாம் என்பதை ஆதரித்தார்[55][56]. அது அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. ரசல் மாணவர்களுக்கு பால் கல்வி, மேலும் கருத்தடை உபாயங்கள் கிடைப்பது போன்றவற்றிற்காக வழக்காடினார். மேலும் குழந்தை இல்லை என்றால் சுலப மணரத்தையும் ஆதரித்தார்.

ரசல் ஒருபால் சேர்க்கை சட்ட சீர்திருத்த சங்கத்தின் ஆதரவாளர். 1958ல் மற்ற அறிவுஜீவிகளுடன் டைமெஸ் பத்திரிகைக்கு அனுப்பப்பட்ட, ஒருபால் சேர்க்கை சட்ட மாற்ற கோரிக்கை விடப்பட்ட ஒரு கடிதத்தில் கையொப்பம் இட்டார். பிரித்தனில் 1967 ல் ஓரளவு அச்சட்டம் ஓருபால் சேர்க்கைக்கு சாதகமாக தளர்ந்தது.[57]

இனம்

[தொகு]

இனம் பற்றிய ரசலின் கருத்துகள் ஒரு நிலையாக இருக்கவில்லை. 1951ல், இன சமத்துவம், பல்லின மணங்களை ஆதரித்தார். `மாறும் உலகுக்கு புதிய நம்பிக்கைகள்` என்ற நூலில், இனக்காழ்ப்பு என்ற அத்தியாயத்தில், “பல்லின சேர்க்கை உயிரியல் நோக்கில் தீங்கு என சொல்லப் படுகிறது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், கறுப்பர்கள் வெள்ளையர்களை விட அறிவு குறைந்தவர் என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஆனால் அதை ஒரு வழியாக முடிவு செய்வதற்கு இரு இனங்களும் சம தளத்தில் வைக்கப்படல் வேண்டும் " என்று சொன்னர்:

அவர் முந்தைய எழுத்துகளில் பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளை வற்புறுத்தினார். 16 நவம்பர் 1922 அன்று, பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் இன முன்னேற்ற சங்கத்தில் உரை ஆற்றுகையில், மேற்கத்திய கருத்தடை வழிமுறைகள் உலகம் முழுவதும் பரவுவதின் முக்கியத்துவத்தை அறுதியிட்டார். அது 1960 களின் உலக குடும்பக்கட்டுப்பாடின் முன்னோடியாக திகழ்ந்தது.

1932 இல், ரசல் இனமேம்பாட்டியல் எளிதாக பிறழ வாய்ப்பு உண்டு என அதை விமர்சித்தார். பிறகு “கறுப்பர்கள் வெள்ளையர்களுக்கு தாழ்ந்தவர்கள்” என்பது தேவையற்ற ஊகம் என்ற அதைக் கண்டித்தார் (`கல்வியும் சமூக முறையும்` அத்தியாயம் 3).

கடைசி வருடங்களும், மரணமும்

[தொகு]

ரசல் தன் வரலாற்று நூலை மூன்று தொகுதிகளாக 1967,1968,1969 களில் வெளியிட்டார். உடல்நிலை தளர்ந்தாலும், இறுதி வரை தெளிவான மனத்துடனும், சிந்தனையுடனும் இருந்தார். 23 நவம்பர் 1969 அன்று த டைம்ஸ் செய்தித்தாளுக்கு செகோஸ்லாவாக்கியாவில் நடைபெற இருக்கும் போலிக் குற்றச்சாட்டு நீதிமன்ற வழக்குகள் மிகவும் கவலை தருபவையாக உள்ளன என எழுதினார். அதே மாதம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயளாளர் ஊ தாண்டுவுக்கு, அமெரிக்கா வியட்நாமில் செய்த சித்திரவதை, இன அழிப்பு பற்றி ஒரு சர்வதேச குற்ற விசாரணை மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அடுத்த மாதம், சோவியத் பிரதமர் [|அலெக்சி கோசிஜனிடம், எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து அலெக்சாண்டர் சோல்ஷனிஸ்தனை வெளியேற்றுவதற்குக் கண்டனம் தெரிவித்தார். 31, ஜனவரி 1970 அன்று ரசல் இஸ்ரேலின் பாலஸ்தீனிய தரை ஆக்கிரமிப்பைக் கண்டித்து, இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனிய நிலங்களில் இருந்து விலகி வரவேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.[32] அதுதான் ரசலின் வாழ்க்கையிலேயே இடம் பெற்ற கடைசி அரசியல் நடவடிக்கையாகும்.

ரசல் இன்ப்ளுவென்சா சுரத்தினால், வேல்சில் உள்ள தன் வீட்டில் 2ம் பிப்ரவரி, 1970ல், இறந்தார். அவரின் விருப்பப்படி அவர் உடல் மதச் சடங்குகள் எதுவும் இல்லாமல் தகனம் செய்யப்பட்டு, சாம்பல் வேல்ஸ் மலைகளின் மீது தெளிக்கப்பட்டது.

வாங்கிய பட்டங்கள்

[தொகு]

ரசல் வாழ்க்கை முழுவதும் பல பட்டங்களைப் பெற்றார்.

  • பிறப்பு முதல் 1908 வரை : த ஹானரபிள் பெர்ட்ராண்ட் ஆர்தர் வில்லியம் ரசல்
  • 1908 முதல் 1931 வரை: த ஹானரபிள் பெர்ட்ராண்ட் ஆர்தர் வில்லியம் ரசல் FRS
  • 1931 முதல் 1949 வரை த ரைட் ஹானரபிள் த ஏர்ல் ரசல் FRS
  • 1949 முதல் இறப்பு வரை த ரைட் ஹானரபிள் த ஏர்ல் ரசல் OM, FRS

ரசலின் நூல்கள் பட்டியல்

[தொகு]

இது ரசலின் எழுத்துகளில் ஒரு பகுதி மட்டுமே. முதலில் பதிப்பித்த ஆண்டு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது

  • 1896, German Social Democracy, London: Longmans, Green.
  • 1897, An Essay on the Foundations of Geometry, Cambridge: At the University Press.
  • 1900, A Critical Exposition of the Philosophy of Leibniz, Cambridge: At the University Press.
  • 1903, The Principles of Mathematics The Principles of Mathematics, Cambridge: At the University Press.
  • 1905 On Denoting, Mind vol. 14, NS, ISSN: 00264425, Basil Blackwell
  • 1910, Philosophical Essays, London: Longmans, Green.
  • 1910–1913, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (with ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்), 3 vols., Cambridge: At the University Press.
  • 1912, The Problems of Philosophy, London: Williams and Norgate.
  • 1914, Our Knowledge of the External World as a Field for Scientific Method in Philosophy, Chicago and London: Open CPublishing.
  • 1916, Principles of Social Reconstruction, London: George Allen & Unwin.
  • 1916, Justice in War-time, Chicago: Open Court.
  • 1917, Political Ideals, New York: The Century Co.
  • 1918, Mysticism and Logic and Other Essays, London: Longmans, Green.
  • 1918, Proposed Roads to Freedom: Socialism, Anarchism, and Syndicalism, London: George Allen & Unwin.
  • 1919, Introduction to Mathematical Philosophy, London: George Allen & Unwin, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-09604-9 for Routledge paperback) (Copy at Archive.org).
  • 1920, The Practice and Theory of Bolshevism,London: George Allen & Unwin
  • 1921, The Analysis of Mind, London: George Allen & Unwin.
  • 1922, The Problem of China, London: George Allen & Unwin.
  • 1923, The Prospects of Industrial Civilization (in collaboration with Dora Russell), London: George Allen & Unwin.
  • 1923, The ABC of Atoms, London: Kegan Paul, Trench, Trubner.
  • 1924, Icarus, or the Future of Science, London: Kegan Paul, Trench, Trubner.
  • 1925, The ABC of Relativity, London: Kegan Paul, Trench, Trubner.
  • 1925, What I Believe, London: Kegan Paul, Trench, Trubner.
  • 1926, On Education, Especially in Early Childhood, London: George Allen & Unwin.
  • 1927, The Analysis of Matter, London: Kegan Paul, Trench, Trubner.
  • 1927, An Outline of Philosophy, London: George Allen & Unwin.
  • 1927, Why I Am Not a Christian, London: Watts.
  • 1927, Selected Papers of Bertrand Russell, New York: Modern Library.
  • 1928, Sceptical Essays, London: George Allen & Unwin.
  • 1929, Marriage and Morals, London: George Allen & Unwin.
  • 1930, The Conquest of Happiness, London: George Allen & Unwin.
  • 1931, The Scientific Outlook, London: George Allen & Unwin.
  • 1932, Education and the Social Order, London: George Allen & Unwin.
  • 1934, Freedom and Organization, 1814–1914, London: George Allen & Unwin.
  • 1935, In Praise of Idleness, London: George Allen & Unwin.
  • 1935, Religion and Science, London: Thornton Butterworth.
  • 1936, Which Way to Peace?, London: Jonathan Cape.
  • 1937, The Amberley Papers: The Letters and Diaries of Lord and Lady Amberley (with Patricia Russell), 2 vols., London: Leonard & Virginia Woolf at the Hogarth Press.
  • 1938, Power: A New Social Analysis, London: George Allen & Unwin.
  • 1940, An Inquiry into Meaning and Truth, New York: W. W. Norton & Company.
  • 1946, of Western Philosophy and Its Connection with Political and Social Circumstances from the Earliest Times to the Present Day, New York: Simon and Schuster.
  • 1948, Human Knowledge: Its Scope and Limits, London: George Allen & Unwin.
  • 1949, Authority and the Individual, London: George Allen & Unwin.
  • 1950, Unpopular Essays, London: George Allen & Unwin.
  • 1951, New Hopes for a Changing World, London: George Allen & Unwin.
  • 1952, The Impact of Science on Society, London: George Allen & Unwin.
  • 1953, Satan in the Suburbs and Other Stories, London: George Allen & Unwin.
  • 1954, Human Society in Ethics and Politics, London: George Allen & Unwin.
  • 1954, Nightmares of Eminent Persons and Other Stories, London: George Allen & Unwin.
  • 1956, Portraits from Memory and Other Essays, London: George Allen & Unwin.
  • 1956, Logic and Knowledge: Essays 1901–1950 (edited by Robert C. Marsh), London: George Allen & Unwin.
  • 1957, Why I Am Not A Christian and Other Essays on Religion and Related Subjects (edited by Paul Edwards), London: George Allen & Unwin.
  • 1958, Understanding History and Other Essays, New York: Philosophical Library.
  • 1959, Common Sense and Nuclear Warfare, London: George Allen & Unwin.
  • 1959, My Philosophical Development, London: George Allen & Unwin.
  • 1959, Wisdom of the West ("editor", Paul Foulkes), London: Macdonald.
  • 1960, Bertrand Russell Speaks His Mind, Cleveland and New York: World Publishing Company.
  • 1961, The Basic Writings of Bertrand Russell (edited by R.E. Egner and L.E. Denonn), London: George Allen & Unwin.
  • 1961, Fact and Fiction, London: George Allen & Unwin.
  • 1961, Has Man a Future?, London: George Allen & Unwin.
  • 1963, Essays in Skepticism, New York: Philosophical Library.
  • 1963, Unarmed Victory, London: George Allen & Unwin.
  • 1965, On the Philosophy of Science (edited by Charles A. Fritz, Jr.), Indianapolis: The Bobbs-Merrill Company.
  • 1967, Russell's Peace Appeals (edited by Tsutomu Makino and Kazuteru Hitaka), Japan: Eichosha's New Current Books.
  • 1967, War Crimes in Vietnam, London: George Allen & Unwin.
  • 1967–1969, The Autobiography of Bertrand Russell, 3 vols., London: George Allen & Unwin.
  • 1969, Dear Bertrand Russell... A Selection of his Correspondence with the General Public 1950–1968 (edited by Barry Feinberg and Ronald Kasrils), London: George Allen and Unwin.

குறிப்பு: இது ஒரு எடுத்துக்காட்டு தான். ரசல் பல துண்டுப் பதிப்புகள், அறிமுகங்கள், சஞ்சிகை கட்டுரைகள், ஆசிரியருக்கு கடிதங்கள் போன்றவற்றை எழுதினார். அவர் எழுத்துகளைப் பல திரட்டுகளில் காணலாம், குறிப்பாக “பெர்ட்ரண்ட் ரசலின் எழுத்துகள் திரட்டு”, என்ற மக்மாஸ்டர் பல்கலைக் கழக ஆவணத்திரட்டு. இதுவரை பதிப்பிக்கப்படாத ரசலின் எழுத்துகளைக் கொண்டு 16 பகுதிகளை வெளியிட்டுள்ளது. இன்னும் பல பாகங்கள் வெளிவரும். மேலும் அவர்களிடம் ரசல் எழுதிய 30,000 கடிதங்கள் உள்ளன.

ரசலின் தத்துவத்தை பற்றிய நூல்கள்

[தொகு]

வாழ்க்கை குறிப்பு நூல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hestler, Anna (2001). Wales. Marshall Cavendish. pp. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7614-1195-X.
  2. Ludlow, Peter, "Descriptions", The Stanford Encyclopedia of Philosophy (Fall 2008 Edition), Edward N. Zalta (ed.), URL = [1].
  3. Richard Rempel (1979). "From Imperialism to Free Trade: Couturat, Halevy and Russell's First Crusade". Journal of the History of Ideas 40 (3): 423–443. doi:10.2307/2709246. 
  4. Bertrand Russell (1988) [1917]. Political Ideals. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-10907-8.
  5. The Nobel Foundation (1950). Bertrand Russell: The Nobel Prize in Literature 1950. Retrieved on 11 June 2007.
  6. 7.0 7.1 Bloy, Marjie, Ph.D. "Lord John Russell (1792–1878)". பார்க்கப்பட்ட நாள் 2007-10-28.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. Cokayne, G.E.; Vicary Gibbs, H.A. Doubleday, Geoffrey H. White, Duncan Warrand and Lord Howard de Walden, editors. The Complete Peerage of England, Scotland, Ireland, Great Britain and the United Kingdom, Extant, Extinct or Dormant, new ed. 13 volumes in 14. 1910–1959. Reprint in 6 volumes, Gloucester, UK: Alan Sutton Publishing, 2000.
  8. 9.0 9.1 Paul, Ashley. "Bertrand Russell: The Man and His Ideas". Archived from the original on 2002-11-20. பார்க்கப்பட்ட நாள் 2007-10-28.
  9. The Autobiography of Bertrand Russell, p.38
  10. O'Connor, J. J. (2003). "Alfred North Whitehead". School of Mathematics and Statistics, University of St Andrews, Scotland. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  11. Griffin, Nicholas. "Bertrand Russell's Mathematical Education". Notes and Records of the Royal Society of London, Vol. 44, No. 1. pp. 51–71. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  12. Wallenchinsky et al. (1981), "Famous Marriages Bertrand...Part 1".
  13. Wallenchinsky et al. (1981), "Famous Marriages Bertrand...Part 3".
  14. Kimball, Roger. "Love, logic & unbearable pity: The private Bertrand Russell". The New Criterion Vol. 11, No. 1, September 1992. The New Criterion. Archived from the original on 2006-12-05. பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  15. Simkin, John. "London School of Economics". Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2007-11-16.
  16. Russell, Bertrand (2001). Ray Perkins (ed.). Yours Faithfully, Bertrand Russell: Letters to the Editor 1904–1969. Chicago: Open Court Publishing. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8126-9449-X. பார்க்கப்பட்ட நாள் 2007-11-16.
  17. Russell on Wittgenstein
  18. "Bertrand Russell (1872–1970)". Farlex, Inc. பார்க்கப்பட்ட நாள் 2007-12-11.
  19. ""Bertrand Russell Reported Dead"" (PDF). The New York Times. 21 April 1921. பார்க்கப்பட்ட நாள் 2007-12-11.
  20. Russell, Bertrand (2000). Richard A. Rempel (ed.). "Uncertain Paths to Freedom: Russia and China, 1919-22". Vol. 15. Routledge. pp. lxviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-09411-9. {{cite book}}: |work= ignored (help); Unknown parameter |nopp= ignored (help)
  21. Monk, Ray (2004; online edition, January 2008). "'Russell, Bertrand Arthur William, third Earl Russell (1872–1970)'". Oxford Dictionary of National Biography. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்month=September. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/35875. பார்க்கப்பட்ட நாள் 2008-03-14. {{cite web}}: Check date values in: |year= (help)
  22. Inside Beacon Hill: Bertrand Russell as Schoolmaster. Jespersen, Shirley ERIC# EJ360344, published 1987
  23. ""Dora Russell"". 2007-05-12. Archived from the original on 2008-01-19. பார்க்கப்பட்ட நாள் 2008-02-17.
  24. Leberstein, Stephen (November/December 2001). ""Appointment Denied: The Inquisition of Bertrand Russell"". Academe. Archived from the original on 2008-10-04. பார்க்கப்பட்ட நாள் 2008-02-17. {{cite web}}: Check date values in: |date= (help)
  25. ""Bertrand Russell"". 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-02-17.
  26. Griffin, Nicholas (ed.) (2002). "The Selected Letters of Bertrand Russell". Routledge. p. 660. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-26012-4. {{cite book}}: |author= has generic name (help)
  27. A philosopher’s letters | Love, Bertie | Economist.com
  28. 29.0 29.1 Ronald W. Clark, Bertrand Russell and His World, p94. (1981) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-13070-1
  29. Russell, Bertrand (1955-07-09). ""Russell Einstein Manifesto"". Archived from the original on 2009-08-01. பார்க்கப்பட்ட நாள் 2008-02-17. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  30. "Jerusalem International Book Fair". Archived from the original on 2008-01-22. பார்க்கப்பட்ட நாள் 2009-06-20.
  31. 32.0 32.1 Russell, Bertrand; Perkins, Ray (2002). Yours faithfully, Bertrand Russell: a lifelong fight for peace, justice, and truth in letters to the editor. Chicago: Open Court. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8126-9450-3. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: multiple names: authors list (link)
  32. Copleston, Frederick Charles (1975). "History of Philosophy". Paulist Press. p. 577. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8091-0072-X. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
  33. Irvine, A. D. (2003-05-01). "Bertrand Russell". Stanford University. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
  34. Russell, Bertrand (1992). The Analysis of Matter. London: Routledge. p. 424. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-08297-8.
  35. Baird, Forrest E. (2008). From Plato to Derrida. Upper Saddle River, New Jersey: Pearson Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-158591-6. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  36. Monk, Ray (January 1999). "Cambridge Philosophers IX: Bertrand Russell". Philosophy (Cambridge University Press) 74 (01): 105–117. doi:10.1017/S0031819199001072. 
  37. Bertrand Russell Archives at McMaster University
  38. Russell's The Principles of Mathematics
  39. The Autobiography of Bertrand Russell, the Early Years, p. 202.
  40. The Autobio. of B. Russell, pg. 329.
  41. Klement, Kevin (2005-10-24). "Russell's Logical Atomism". Stanford University. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
  42. Fumerton, Richard (2004-01-19). "Knowledge by Acquaintance vs. Description". Stanford University. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
  43. Stubenberg, Leopold (2005-02-03). "Neutral Monism". Stanford University. பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
  44. Russell, Bertrand (1993). Our Knowledge of the External World as a Field for Scientific Method in Philosophy. Routledge. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-09605-7.
  45. in a lettera letter to Newman which has been reprinted in Russell's autobiography)
  46. The Autobio. of B. Russell, pgs. 435-440.
  47. Vellacott, Jo (1980). Bertrand Russell and the Pacifists in the First World War. Brighton: Harvester Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85527-454-9.
  48. Rempel, Richard A. (December 1978). "The Dilemmas of British Pacifists During World War II". The Journal of Modern History 50 (4): D1213–D1229. doi:10.1086/241842. http://links.jstor.org/sici?sici=0022-2801%28197812%2950%3A4%3CD1213%3ATDOBPD%3E2.0.CO%3B2-4. 
  49. Horst-Eberhard Richter (2006). Die Krise der Männlichkeit in der unerwachsenen Gesellschaft. Psychosozial-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-89806-570-7.
  50. Bertrand Russell, Unpopular Essays (1950), p.19, Simon and Schuster
  51. [2] Art-Historical Notes: "Where are the Hirsts of the 1930s now?" The Independent, Nov 13, 1998 by David Buckman
  52. [3] Absent Minds: Intellectuals in Britain by Stefan Collini Oxford University Press, 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-929105-5, 9780199291052
  53. Crawford, Elizabeth (2001). The Women's Suffrage Movement: A Reference Guide, 1866–1928. Routledge. p. 785. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-23926-5.
  54. Hauerwas, Stanley (1978-04-19). ""Sex and Politics: Bertrand Russell and Human Sexuality'"". Christian Century. Archived from the original on 2007-08-23. பார்க்கப்பட்ட நாள் 2008-02-17.
  55. Haeberle, Erwin J. (1983). ""Pioneers of Sex Education"". The Continuum Publishing Company. Archived from the original on 2008-03-13. பார்க்கப்பட்ட நாள் 2008-02-17.
  56. Gay and Lesbian Humanist Association (1997-11-02). "Lesbian and Gay Rights: The Humanist and Religious Stances". பார்க்கப்பட்ட நாள் 2008-02-17.

வெளி இணைப்புகள்

[தொகு]

Writings available online

Audio

Other

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ட்ரண்டு_ரசல்&oldid=4041198" இலிருந்து மீள்விக்கப்பட்டது