உள்ளடக்கத்துக்குச் செல்

எல்ஃபிரெட் எலினெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்பிரெட் யெலினெக்
Elfriede Jelinek in 2004
Elfriede Jelinek in 2004
பிறப்பு20 அக்டோபர் 1946 (1946-10-20) (அகவை 77)
முர்சுசுலாக், இசுடைரியா, ஆசுதிரியா
தொழில்எழுத்தாளர், புதினங்கள்
தேசியம்ஆத்திரியர்
வகைபெண்ணியம், சமூகவியல் திறனாய்வு, நாடகம்
செயற்பட்ட ஆண்டுகள்1963–நடப்பில்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி பியானோ டீச்சர், டை கின்டர் டெர் டோட்டென், லஸ்ட்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2004
கையொப்பம்

எல்பிரெட் யெலினெக் (Elfriede Jelinek, இடாய்ச்சு: [ɛlˈfʀiːdə ˈjɛlinɛk]; பிறப்பு: அக்டோபர் 20, 1946)ஆத்திரிய நாட்டு பெண்ணிய இடாய்ச்சு மொழி நாடகாசிரியரும் எழுத்தாளருமாவார். 2004ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் "சமூகத்தின் தேய்வழக்குகளின் அபத்தத்தையும் அவற்றின் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் தமது புதினங்களில் இனிய உரையாடல்கள் மூலமாக சிறப்பான மொழிநடையில் வெளிப்படுத்தியதற்காக" இந்த நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற பத்தாவது பெண்மணியும் ஆசுதிரியாவின் முதல் பெண்ணும் இவராவார். இவரது தன்வரலாற்றை ஒட்டிய பியானோ டீச்சர் என்ற புதினத்திற்காக பெரிதும் அறியப்பட்டவர். இந்தக் கதையை மையமாகக் கொண்டு 2001இல் ஆசுதிரிய திரை இயக்குநர் மைக்கேல் ஹைன்கெ எடுத்த பிரான்சிய மொழி திரைப்படத்திற்கு கான் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் குழு விருது கிடைத்தது.[1][2]

இவருக்கு 1998இல் ஜார்ஜ் பூக்னர் விருது கிடைத்துள்ளது. பிரான்சின் காஃப்கா பரிசு பெற்ற நான்காவது எழுத்தாளரும் முதல் பெண்மணியுமாவார்.[3][4][5]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

எல்பிரெடு யெலினெக் 1946ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று ஆசுதிரியாவில் இசுட்டீரியா பகுதியில் உள்ள முர்சுசுலாக் நகரில் பிறந்தார். இவரது தாயார் உரோமானிய செருமானியரான ஓல்கா இல்லோனா. தந்தையார் செக் யூதர்.[6] இவர்கள் வியன்னாவில் வாழ்ந்து வந்தனர்.[6][7][8]

எலினெக்கின் தந்தை முக்கியமான தொழிற்சாலை ஒன்றில் வேதியியலாளராக பணிபுரிந்தமையால் இரண்டாம் உலகப் போர் காலத்தில் துன்புறுத்தப்படவில்லை; ஆனால் பல உறவினர்கள் பெரும் இனவழிப்பில் பாதிக்கப்பட்டனர். எலினெக்கின் தாய் வியன்னாவின் உயர்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுமியாக எலினெக் உரோமானியக் கத்தோலிக்க கன்னிமடப் பள்ளியில் தமது கல்வியைத் துவங்கினார். எலினெக்கை இசையில் சிறுமுது அறிஞராக வளர்க்க அவரது தாயார் திட்டமிட்டிருந்தார். இளவயதிலிருந்தே பியானோ, கித்தார், வயலின், வியோலம் ரிக்கார்டர் போன்ற இசைக்கருவிகளில் பயிற்சி பெற்றார். பின்னர் வியன்னா இசைப் பல்கலைக்கழகத்தில் இசைக்கருவிக்கான பட்டயப் படிப்பில் பட்டம் பெற்றார். தந்தையாரின் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தாயாரின் உயர்ந்த இலக்குகளை எட்ட எலினெக் முழுமையாக ஒத்துழைத்தார்.[9] வியன்னா பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றையும் நாடக கலையையும் பயின்றார். இருப்பினும் மனத்தகைவு நோயால் பாதிக்கப்பட்ட எலினெக் தமது படிப்பை பாதியிலேயே விட வேண்டியதாயிற்று. தனது பெற்றோரின் வீட்டில் தனித்து இருக்க வேண்டிய நிலையில் தன் நோய்க்கான சிகிச்சையாக கவிதைகள் எழுதத் துவங்கினார். ஓராண்டுக்குப் பிறகு, மனநிலை தேறி வீட்டை விட்டு அன்னையுடன் வெளிவரத் தொடங்கினார்.[9] 1967ஆம் ஆண்டில் லிசாசு சாட்டன் (லிசாவின் நிழல்) என்ற இலக்கியப் படைப்பை வெளியிட்டார்; 1969இல் முதல் இலக்கியப் பரிசு பெற்றார். 1960களில் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார்; நிறையப் படித்துக் கொண்டும் "பெரும்பாலும் தொலைக்காட்சிகளை கண்டு கொண்டும்" காலத்தைக் கழித்தார்.[9] 1974 முதல் 1991 வரை ஆசுதிரிய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1][3][5]

1974ஆம் ஆண்டு சூன் 12 அன்று காட்ஃப்ரைடு அங்சுபெர்க்கை திருமணம் புரிந்தார்; இவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டவில்லை.[10][11]

படைப்புக்களும் அரசியல் சார்பும்

[தொகு]

எலினெக்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் வரை இடாய்ச்சு மொழி இலக்கிய உலகிற்கு அப்பால் இவரது படைப்புக்களைப் பற்றி அறியப்படவில்லை. இவரது படைப்புக்கள் ஆசுதிரிய இலக்கியத்தை வேராகக் கொண்டிருந்தன[12].

அவரது படைப்புக்களை மதிப்பிட எலினெக்கின் அரசியல் சார்பும் பெண்ணியக் கருத்துக்களும் பொதுவுடமைக் கட்சி அங்கத்துவமும் மிகவும் முக்கியமானவை. இக்காரணங்களால் அவரது படைப்புகள் விமர்சிக்கப்பட்டன. பிரெடெரிக் ஐகெலர் என்ற ஆசிரியர் எலினெக்கின் படைப்புக்களில் முதலாளித்துவ நுகர்வுச் சமூகமும் மனிதர்களையும் மனித உறவுகளையும் வணிகப்படுத்தும் அதன் தன்மையும், பொது வாழ்விலும் தனிவாழ்விலும் ஆசுதிரியாவின் கொடுந்தேசியவாத கடந்த காலத்தின் எச்சங்கள், மற்றும் முதலாளித்துவ தந்தை மரபுவழி சமூகத்தில் பெண்கள் மீதான சுரண்டலும் ஒடுக்கப்படுத்துதலும் மூன்று முதன்மை "இலக்குகளாக" இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.[13]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Austrian novelist and poet Elfriede Jelinek wins Nobel prize for literature" (in ஆங்கிலம்). த கார்டியன். 7 அக்டோபர் 2004. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2013.
  2. "Who is the Austrian Nobelist?" (in ஆங்கிலம்). டைம்சு ஆப் இந்தியா. 8 அக்டோபர் 2004. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "Melody of resistance" (in ஆங்கிலம்). த இந்து. 17 அக்டோபர் 2004. Archived from the original on 2007-11-27. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2013.
  4. "Waiting for change" (in ஆங்கிலம்). த இந்து. 6 மார்ச் 2005. Archived from the original on 2008-10-11. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. 5.0 5.1 எலன் ரைடிங் (8 அக்டோபர் 2004). "Austrian Writer of Sex, Violence and Politics Wins Nobel" (in ஆங்கிலம்). த நியூயார்க் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2013.
  6. 6.0 6.1 "Elfriede Jelinek biography". notablebiographies.com. 23 March 2005.
  7. "Elfriede Jelinek: Introduction". eNotes. 15 June 2002.
  8. Elfriede Jelinek profile, The Poetry Foundation website; retrieved 7 September 2013.
  9. 9.0 9.1 9.2 Boiter, Vera (1998). Elfriede Jelinek. Women Writers in German-Speaking Countries. Westport, CT: Greenwood Press. pp. 199–207.
  10. "Portrait of the 2004 Nobel Laureate in Literature", nobelprize.org; retrieved 13 July 2010.
  11. Gottfried Hüngsberg profile IMDb.com; accessed 13 July 2010
  12. Honegger, Gitta (2006). "How to Get the Nobel Prize Without Really Trying". Theater (Yale School of Drama: Duke UP) 36 (2): 5–19. doi:10.1215/01610775-36-2-4. https://archive.org/details/sim_theater_2006_36_2/page/5. பார்த்த நாள்: 2 April 2013. 
  13. Eigler, Friederike (1997), "Jelinek, Elfriede", in Eigler, Friederike (ed.), The Feminist Encyclopedia of German Literature, Westport, CT: Greenwood Press, pp. 263–4

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ஃபிரெட்_எலினெக்&oldid=3761295" இலிருந்து மீள்விக்கப்பட்டது