ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்
ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் | |
---|---|
பிறப்பு | Ramsgate, Kent, இங்கிலாந்து | 15 பெப்ரவரி 1861
இறப்பு | 30 திசம்பர் 1947 கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு | (அகவை 86)
படித்த கல்வி நிறுவனங்கள் | கேம்பிரிச் பல்கலைக்கழகம் |
காலம் | 20 ஆவது நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | மாறுகை மெய்யியல் |
முக்கிய ஆர்வங்கள் | மீவியற்பியல், கணிதம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | மாறுகை மெய்யியல்(Process Philosophy) |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் (Alfred North Whitehead) (பெப்ரவரி 15 1861-டிசம்பர் 30 1947) தலைசிறந்த பிரித்தானியக் கணிதவியலர், மெய்யியலாளர்களின் ஒருவர். இவர் இயற்கணிதம், ஏரணம், கணிதத்தின் அடித்தளங்கள், அறிவியலின் மெய்யியல், இயற்பியல், மீவியற்பியல், கல்வி ஆகிய பல துறைகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய பேரறிஞர். இவர் பெர்ட்ரண்டு ரசலுடன் சேர்ந்து எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூல், கணிதவியலில் பேரிலக்கியமாகக் கருதப்படுகின்றது.
வாழ்க்கை
[தொகு]ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெடின் பாட்டனார் தாமசு வொய்ட்ஹெட் ஆண்பிள்ளைகளுக்காக சாட்டம் வீடு (Chatham House) கல்வியகம் ஒன்றை நடத்திவந்த போதிலும், இவர் இங்கிலாந்தில் டோர்செட் (Dorset) என்னும் இடத்தில் உள்ள, சிறந்த பள்ளிகளில் ஒன்றென கருதப்பட்ட, இழ்செபோர்ன் பள்ளியில் (Sherborne School) படித்தார். இவர் பள்ளியில் கணிதம், விளையாட்டு ஆகிய துறைகளின் மிகச்சிறந்தவராக விளங்கினார்.
1880 முதல் 1910 வரையிலான காலப்பகுதியில், இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் தான் கணிதம் கற்றும், கற்பித்தும், படைப்புகள் நிகழ்த்தியும் வந்தார். 1890 களில் இவர் ஆய்ந்து முழுப்பொது இயற்கணித ஆழுரை (Treatise on Universal Algebra) (1898) இயற்றினார். 1900களில் தன்னுடைய முன்னாள் மாணவர் பெர்ட்ரண்டு ரசலுடன் சேர்ந்து பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவின் முதல் பதிப்பை வெளியிட்டார்.[1].
தான் கேம்பிரிட்ஜில் பேராசிரியர் பதவியைப் பெறுவது குறைந்த வாய்ப்புடையது என்று அறிந்து பிரின்சிப்பியாவின் முதல் தொகுதி வெளிவந்தவுடன் கேம்பிரிட்ஜை விட்டு 1910 இல் வெளியேறினார்.
1891 இல் வொய்ட்ஹெட் பிரான்சில் வளர்ந்த ஈவலின் வேட் என்னும் அயர்லாந்துப் பெண்மணியை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். முதல் உலகப்போரில் ராயல் பிளையிங் கோரில் (Royal Flying Corps, அரச வானூர்தியர் குழுவில்) பங்குகொண்ட ஒரு மகன் இறந்துவிட்டார். இக்காலப்பகுதியில் அமைதிக்கொள்கையை வலியுறுத்தியதால் பெர்ட்ரண்ட் ரசல் 1918 இன் பெரும் பகுதியை சிறைச்சாலையில் கழித்தார். வொய்ட்ஹெட், ரசலை சிறையில் சென்று பார்த்தார் எனினும், அமைதிக்கொள்கையை பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை; அதேபோல ரசலும் வொய்ட்ஹெடின் பிளேட்டோவியம் (Platonism), யாவும் உள்ளமுடைமை (Panpsychism) என்னும் கொள்கைகள்பால் இருந்த ஈடுபாட்டை கிண்டல் செய்தார். உலகப்போருக்குப் பின்னர் வொய்ட்ஹெடும், ரசலும் அறிவுறவு கொள்ளவில்லை. வொய்ட்ஹெட் பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவின் 1925 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்புக்கு எந்த கருத்தூட்டமும் தரவில்லை.
வொய்ட்ஹெட் எப்பொழுதுமே, குறிப்பாக 1890களில், இறையியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய குடும்பம் சர்ச் ஆஃவ் இங்கிலாந்தில் (Church of England) நிலைபெற்றிருந்தனர்:இவருடைய தந்தையும், அவர் உடன்பிறப்புகளும் சர்ச் விக்கார்களாக இருந்தனர், வொய்ட்ஹெடின் உடன்பிறந்தார் தமிழகத்தின் சென்னையில் பிசப்பாக (bishop) இருந்தார். வொய்ட்ஹெடின் மனைவியின் உந்துதலாலும், கார்டினல் நியூமன் அவர்களின் எழுத்துகளாலும், வொய்ட்ஹெட் ரோமன் கத்தோலிக்கம் மீது ஆர்வம் கொண்டார். முதல் உலகப்போருக்கு முன்னர் இவர் தன்னை கடவுள் ஐயப்பாட்டாளர் அல்லது கடவுள் கொள்கை பற்றிய சாய்வு ஏதுமற்றவராக இருந்தார். பின்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக மாறினார். எனினும் எந்த திருச்சபையிலும் முறைப்படி சேரவில்லை. இறையொருமையாளர்கள் (யூனிட்டேரியன் கொள்கையர்) இவரை தங்கள் நண்பர் என்று கூறுவர்.
வொய்ட்ஹெட் இயற்பியலிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார். இவருடைய பெல்லோ (Fellow) எனும் மேல் உறுப்பினர் பெருமைக்கான ஆய்வுரையில் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் அவர்களின் மின்சாரம் காந்தம் பற்றிய கருத்துக்களை அலசினார். கணிதவியல் மற்றும் இயற்பியல் பற்றிய வொய்ட்ஹெட்டின் பார்வையும் கண்ணோட்டமும் தூய அறிவியல்நோக்கு என்பதைவிட கூடுதலான மெய்யியல் நோக்கு எனலாம். அத்துறைகளின் தனிப்பட்ட கருத்துகள் கேள்விகளை விட அவற்றின் பரந்த வளர்ச்சி வாய்ப்பும் இயல்பும் பற்றியே அவர் அதிகம் நுணுகி நோக்கினார்.
வொய்ட்ஹெட் 1922 முதல் 1923 வரை அரிஸ்டாட்டிலிய குமுகம் என்னும் அறிவியல் சிந்தனை நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
1910 முதல் 1924 வரை வொய்ட்ஹெட் பெரும்பாலும் யூனிவெர்சிட்டி காலேஜ் இலண்டன், இம்ப்பீரியல் காலேஜ் இலண்டன் ஆகியவற்றில் இயற்பியல், அறிவியலின் மெய்யியல், கல்வியைப் பற்றிய கருத்துகளும் செயற்பாடுகளும் பற்றி எழுதியும் கற்பித்தும் வந்தார். 1903 ஆம் ஆண்டு முதல் ராயல் சொசைட்டி பெல்லோவாக இருந்தார், பின்னர் 1931 ஆம் ஆண்டு பிரித்தானிய கல்விப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இயற்பியலில் பொது பொருளீர்ப்பியல் (general relativity) பற்றி வொய்ட்ஹெட் ஐன்ஸ்டைன் கொள்கைக்கு போட்டியாக ஒரு கருத்தியக் கொள்கையை முன்வைத்தார். ஆனால் இது வரவேற்கப்படவில்லை. ஏனெனில் இதன்படி பொருளீர்ப்பு நிலைஎண் G (gravitational constant G) நடைமுறை அளவீட்டு மெய்நிலைக்கு மாறாக, மாறுபடும் ஒன்றாக இருந்தது. எனவே வொய்ட்ஹெடின் பொருளீர்ப்புக் கொள்கை ஏற்பு பெறவில்லை.[2] ஆனால் இவருடைய 1919 ஆம் ஆண்டு வெளியான "இயற்கை அறிவின் கொள்கைகள் பற்றிய கேள்விகள்" (Enquiry Concerning the Principles of Natural Knowledge) கருத்துகள் ஏற்றம் பெற்று இருந்தது. இது இயற்பியலின் அடிப்படை மெய்ய்யியல் கோட்பாடுகளை தொகுக்க எழுந்த முயற்சி. ஆனாலும் இது தற்கால இயற்பியலில் பெரிய தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை.
குறிப்புகள்
[தொகு]- ↑ On Whitehead the mathematician and logician, see Grattan-Guinness (2000, 2002), and Quine's chapter in Schilpp (1941), reprinted in Quine (1995).
- ↑ [1]
உசா நூற்பட்டியல்
[தொகு]வொய்ட்ஹெடின் படைப்புகள்
[தொகு]- 1898. A Treatise on Universal Algebra with Applications. Cambridge Uni. Press. 1960 reprint, Hafner.
- 1911. An Introduction to Mathematics. Oxford Univ. Press. 1990 paperback, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-500211-3. Vol. 56 of the Great Books of the Western World series.
- 1917. The Organization of Thought Educational and Scientific. Lippincott.
- 1920. The Concept of Nature. Cambridge Uni. Press. 2004 paperback, Prometheus Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59102-214-2. Being the 1919 Tarner Lectures delivered at Trinity College.
- 1922. The Principle of Relativity with Applications to Physical Science. Cambridge Uni. Press.
- 1925 (1910-13), with Bertrand Russell. Principia Mathematica, in 3 vols. Cambridge Uni. Press. Vol. 1 to *56 is available as a CUP paperback.
- 1925a. Science and the Modern World. 1997 paperback, Free Press (Simon & Schuster), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-83639-4. Vol. 55 of the Great Books of the Western World series.
- 1925b (1919). An Enquiry Concerning the Principles of Natural Knowledge. Cambridge Uni. Press.
- 1926. Religion in the Making. 1974, New American Library. 1996, with introduction by Judith A. Jones, Fordham Univ. Press.
- 1927. Symbolism, Its Meaning and Effect. The 1927 Barbour-Page Lectures, given at the University of Virginia. 1985 paperback, Fordham University Press.
- 1929. Process and Reality: An Essay in Cosmology. 1979 corrected edition, edited by David Ray Griffin and Donald W. Sherburne, Free Press. (Part V. Final Interpretation பரணிடப்பட்டது 2007-02-21 at the வந்தவழி இயந்திரம்)
- 1929a. The Aims of Education and Other Essays. 1985 paperback, Free Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-935180-4.
- 1929b. Function of Reason. 1971 paperback, Beacon Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8070-1573-3.
- 1933. Adventures of Ideas. 1967 paperback, Free Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-935170-7.
- 1934. Nature and Life. University of Chicago Press.
- 1938. Modes of Thought. 1968 paperback, Free Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-935210-X.
- 1947. Essays in Science and Philosophy. Runes, Dagobert, ed. Philosophical Library.
- 1947. The Wit and Wisdom of Whitehead. Beacon Press.
- 1951. "Mathematics and the Good" in Schilpp, P. A., ed., 1951. The Philosophy of Alfred North Whitehead, 2nd. ed. New York, Tudor Publishing Company: 666-81. Also printed in:
- in The Philosophy of Alfred North Whitehead, 1941, P. A. Schilpp, Ed.;
- in Science & Philosophy; Philosophical Library, 1948.
- 1953. A. N. Whitehead: An Anthology. Northrop, F.S.C., and Gross, M.W., eds. Cambridge Univ. Press.
- Price, Lucien, 1954. Dialogues of Alfred North Whitehead, with Introduction by Sir Ross David. Reprinted 1977, Greenwood Press Reprint, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8371-9341-9, and 2001 with Foreword by Caldwell Titcomb, David R. Godine Publisher, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56792-129-9.
வொய்ட்ஹெடின் கருத்துகளைப் பற்றிய பிறர் படைப்புகள்
[தொகு]- Browning, Douglas and Myers, William T., eds., 1998. Philosophers of Process. Fordham Univ Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8232-1879-1, contains some primary texts including:
- "Critique of Scientific Materialism"
- "Process"
- "Fact and Form"
- "Objects and Subjects"
- "The Grouping of Occasions"
- Durand G., 2007. "Des événements aux objets. La méthode de l'abstraction extensive chez A. N. Whitehead". Ontos Verlag.
- Ivor Grattan-Guinness, 2000. The Search for Mathematical Roots 1870-1940. Princeton Uni. Press.
- ------, 2002, "Algebras, Projective Geometry, Mathematical Logic, and Constructing the World: Intersections in the Philosophy of Mathematics of A. N. Whitehead," Historia Mathematica 29: 427-62. Many references.
- Charles Hartshorne, 1972. Whitehead's Philosophy: Selected Essays, 1935-1970. University of Nebraska Press
- Kneebone, G., 2001, (1963). Mathematical Logic and the Foundations of Mathematics. Dover reprint: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-41712-3. The final chapter is a lucid introduction to some of the ideas in Whitehead (1919, 1925b, 1929).
- LeClerc, Ivor, ed., 1961. The Relevance of Whitehead. Allen & Unwin.
- Lowe, Victor, 1962. Understanding Whitehead. Johns Hopkins Uni. Press.
- ------, 1985. A. N. Whitehead: The Man and His Work, Vol. 1. Johns Hopkins U. Press.
- ------, and Schneewind, J. B., 1990. A. N. Whitehead: The Man and His Work, Vol. 2. Johns Hopkins U. Press.
- Richard Milton Martin, 1974. Whitehead's Categorial Scheme and Other Essays. Martinus Nijhoff.
- Mays, Wolfgang, 1959. The Philosophy of Whitehead. Allen & Unwin.
- ------, 1977. Whitehead's Philosophy of Science and Metaphysics: An Introduction to his Thought. The Hague: Martinus Nijhoff.
- Mesle, C. Robert, 2008. Process-Relational Philosophy: An Introduction to Alfred North Whitehead," Templeton foundation Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59947-132-7
- Nobo, Jorge L., 1986. Whitehead's Metaphysics of Extension and Solidarity. SUNY Press.
- Willard Quine, 1941, "Whitehead and the rise of modern logic" in Schilpp (1941). Reprinted in his 1995 Selected Logic Papers. Harvard Univ. Press.
- Nicholas Rescher, 1995. Process Metaphysics. SUNY Press.
- ------, 2001. Process Philosophy: A Survey of Basic Issues. Univ. of Pittsburg Press.
- Schilpp, Paul A., ed., 1941. The Philosophy of A. N. Whitehead (The Library of Living Philosophers). New York: Tudor.
- Weber, Michel, 2006. Whitehead’s Pancreativism–The Basics. Ontos Verlag
- Will, Clifford, 1993. Theory and Experiment in Gravitational Physics. Cambridge University Press.
வெளி இணைப்புகள்
[தொகு]- Whitehead homepage பரணிடப்பட்டது 2008-05-13 at the வந்தவழி இயந்திரம் (under development)
- Stanford Encyclopedia of Philosophy: Alfred North Whitehead" – by A. D. Irvine
- A N Whitehead: New World Philosopher பரணிடப்பட்டது 2007-02-11 at the வந்தவழி இயந்திரம்
- Center for Process Studies at the Claremont School of Theology. Primarily concerned with the thought of Whitehead and Charles Hartshorne, and the various modes of thought that have emerged out of their work.
- Centre de philosophie pratique « Chromatiques whiteheadiennes »
- Whitehead Research Project Dedicated to the research of, and scholarship on, the texts, philosophy and life of Alfred North Whitehead; and explores and analyzes the relevance of Whitehead's thought in dialogue with contemporary philosophies.
- Synge, John L., "Whitehead's Principle of Relativity" on arXiv.org
- During, Elie, 2007, ""Philosophical twins ? Bergson and Whitehead on Langevin's Paradox and the Meaning of 'Space-Time' பரணிடப்பட்டது 2008-03-24 at the வந்தவழி இயந்திரம்" in Durand, G. & Weber, M., eds., Alfred North Whitehead's Principles of Natural Knowledge. Frankfurt & Lancaster: Ontos Verlag.