வி. சூ. நைப்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வி. எஸ். நைப்பால்
V. S. Naipaul

தொழில் புதின, பயண, கட்டுரை எழுத்தாளர்
நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரித்தானியா
இலக்கிய வகை புதினம், கட்டுரைகள்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஏ. ஹவுஸ் ஃபோர் மிஸ்டர் பிஸ்வாஸ்
A Bend in the River
The Enigma of Arrival
In a Free State
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
Booker Prize
1971
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2001
துணைவர்(கள்) பாட்ரீசியா ஆன் ஹேல் நைப்பால் (1955 - 1996)

நதிரா நைப்பால் (1996 - இன்று)

வி. எஸ். நைப்பால் (V. S. Naipaul; பிறப்பு: 17 ஆகத்து 1932), அல்லது வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால், டிரினிடாடில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் ஆவர். 2001 ஆம் ஆண்டில் இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[1]

கல்வி[தொகு]

ஸ்பெயின் போர்ட்டில் அரசி ராயல் கல்லூரியில் பயின்றார் வெளிநாட்டில் சென்று படிக்க டிரினிட்டாட் அரசு கல்வி உதவித் தொகை இவருக்கு வழங்கியது.அந்த உதவித் தொகையைக் கொண்டு ஆங்கிலம் படிக்க ஆக்சுபோர்டுக்குச் சென்று கல்வி பயின்றார்.

படைப்புகள்[தொகு]

மனத்தில் உறுதியும் தெளிவும் கொண்ட நைப்பால் நூல்கள் பல எழுதினார். புதினங்களும் பயணநூல்களும் எழுதி உள்ளார். இசுலாமிய நாடுகளான ஈரான் இந்தோனேசியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தம் அனுபவங்களையும் கருத்துகளையும் ஒரு நூலில் எழுதினார். பல்வேறு நாடுகளின் அடிமைகள் பற்றியும் கொரில்லாப் போராட்டம் பற்றியும் அரசியல்வாதிகளின் ஊழல்கள் ஏழைகளின் ஒடுக்கப்பட்டோரின் நிலைகள் பற்றியும் தம் நூல்களில் எழுதியுள்ளார். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டுச் சிக்கல்கள் பற்றியும் எழுதினார். இந்தியாவிலும் பயணம் செய்து மூன்று நூல்கள் எழுதினார்.

திருமணம்[தொகு]

ஆக்சுபோர்டில் பாட்ரிசியா ஆன் ஹேல் என்னும் பெண்ணைச் சந்தித்தார். 1955இல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மனைவி 1996 இல் இறந்தார். பின்னர் நதிரா என்னும் பெண்ணை மணந்துகொண்டார்.

பட்டங்களும் பரிசுகளும்[தொகு]

  • புக்கர் பரிசு (1971)
  • நைட் பட்டம் (1981)
  • டேவிட் கோகன் பிரிட்டிசு இலக்கியப் பரிசு (1993)
  • நோபல் பரிசு (2001)
  • கேம்பிரிட்ஜ் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழக சிறப்பு முனைவர் பட்டங்கள்.

குறிப்பிடத்தக்க நூல்கள்[தொகு]

  • Miguel Street (1959)
  • A House for Mr Biswas (1961)
  • A Bend in the River (1979)
  • A Way in the World (1994)
  • An Area of Darkness (1963)
  • In a Free State (1971)
  • India: An wounded civilization (1977)
  • Among the Believers:An Islamic Journey (1981)
  • The Enigma of Arrival (1987)
  • India:A Million Mutinies Now (1990)
  • Reading and Writing:A Personal Account (200)
  • Literary Occasions (2004)
  • Guerrillas (2012)

வரலாறு[தொகு]

பாட்ரிக் பிரஞ்ச் என்பவர் நைப்பாலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். 500 செல்வாக்குப் படைத்தோர் பட்டியலில் வீ எஸ் நைப்பாலும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். டெப்ரடும் சண்டே டைம்சும் (இங்கிலாந்து) இணைந்து தெரிவு செய்துள்ளனர். (2014) இங்கிலாந்தில் வில்சயரில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சூ._நைப்பால்&oldid=1698046" இருந்து மீள்விக்கப்பட்டது