சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் (சேர் - ஈழ வழக்கு, Sir) என்பது மரியாதையுடன் விளிப்பதற்கான ஒரு சொல்லாகும். உயர் தரத்திலுள்ளோர், கல்வி கற்பிப்போர் போன்றவர்களை இச்சொல் கொண்டு மற்றோர் விளிப்பர். சர் என்பதற்கான பெண்பாற் சொல் மெடம் (Madam) என்பதாகும்.

முற்காலத்தில் படைத் தளபதிகளுக்கு (Knights, Baronets) இக்கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது.

"சர்" பட்டம் - நைட்ஹுட் எனப்படும் சர் பட்டம் பிரித்தானிய அரசாங்கத்தின் உயரிய சிவில் விருதாகக் கருதப்படுகின்றது.

சாதாரணப் பயன்பாடு[தொகு]

சாதாரணமாக ஆங்கில மொழி உரையாடலின் போது அல்லது முன்னறிமுகம் இல்லாத ஒருவரை விழித்துப் பேசும் போது குறிப்பிட்ட நபரின் பெயர் தெரியாத விடத்து “சேர்” (Sir) என்று அழைக்கலாம். அவ்வாறே பெண்களை மெடம் (Madam) என்றழைக்கலாம்.

இதன் அடிப்படையிலேயே இன்று வர்த்தக நிலையங்களில், வீதியோர கடைத்தெருக்களில் வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு இந்த "சேர் மெடம்" சொற்கள் பரவலாகப் பயன்படுவதை அவதானிக்கலாம். இன்று மின்னஞ்சல் வழியாக வரும் முன்னறிமுகம் இல்லாத மின்னஞ்சல் தகவல்களும் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது.

பெயர் தெரிந்தி்ருப்பினும்[தொகு]

இதைத் தவிர (பெயர் தெரிந்திருந்தாலும்) உயர் நிலை அதிகாரிகளாக இருப்போரை விழித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் “சேர், மெடம்” பயன்படுகின்றது.

வாடிக்கையாளர்களுக்கான கொடுக்கல் வாங்கல் தபால் கடிதங்களிலும் ஒரு நபரின் பெயர் தெரிந்து இருப்பினும் சேர் மெடம் போன்ற சொற்கள் பயன்படுவதனை காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்&oldid=1948568" இலிருந்து மீள்விக்கப்பட்டது