மின்னஞ்சல்
மின்னஞ்சல் (email) என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து, யாருக்கு அனுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப்படுகின்றது. ஆரம்பத்தில் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள், பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை ஆதரிக்க
மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று மின்னஞ்சல் தலைப்பு மற்றையது மின்னஞ்சல் உள்ளடக்கம். மின்னஞ்சல் தலைப்பில் கட்டுப்பாட்டுத் தகவல்கள் உள்ளடங்கியுள்ளன. உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு பதினாறு கோடி மின்னஞ்சல்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தொண்ணூற்று ஏழு சதவிகிதம் விளம்பரங்கள் போன்ற தேவையற்ற மின்னஞ்சல்களாகும்.[1]
உருவாக்கம்
[தொகு]ஆடோடின் பிணைய மின்னஞ்சல் மூலம் சுமார் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் செய்திகள் கையாள, 1,350 பகுதிகளுக்கு சேவையை வழங்கியது. ஆடோடின் பெரிய கணினி பொறிகளின் மூலம் சுமார் 2,500 பகுதிகளுக்கு இடையே வழங்கிய முதல் மின்னஞ்சல் சேவை தளம் ஆகும்.
புரவலன் அடிப்படையிலான மின்னஞ்சல் அமைப்புகள்
[தொகு]1961 ஆம் ஆண்டில், எம்ஐடி பொருத்தமான நேர பறிமாற்ற அமைப்பு (CTSS) மூலம் பல பயனர்கள் ஒரே நேரத்தில் மைய அமைப்புடன் உள்நுழைந்து தொடர்பு கொள்ள முடிந்தது. தொலைவில் இருந்து இணையம் மூலம் மத்திய வன்தட்டில் கோப்புகளை சேமிக்க மற்றும் அனுப்ப முறைசாரா நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கு "மின்னஞ்சல்" எனப்பெயரிடப்பட்டது. 1965 - எம்ஐடி CTSS மின்னஞ்சல் உருவாக்கம்
மற்ற அமைப்புகள் விரைவில் தனிநபர் மின்னஞ்சல் பயன்பாடுகளை கொண்டுவந்தனர். அவை:
- 1962 - 1440/1460 நிர்வாக முனையம் கணினி உருவாக்கம்
- 1968 - ATS/360 உருவாக்கம்
- 1972 - யூனிக்ஸ் மின்னஞ்சல் நிரல் உருவாக்கம்
- 1972 - லாரி பிரட் மூலம் APL அஞ்சல்பெட்டி உருவாக்கம்
- 1974 - பிளாட்டோ IV ஆன்லைன் செய்தி பலகை அமைப்பைஉருவாக்கியது.ஆகஸ்ட், 1974 இல் 'தனிப்பட்ட குறிப்புகள்' எழுத இதில் வசதிகள் இருந்தது
- 1978 - நியூ ஜெர்ஸி மருத்துவம் மற்றும் பல்மருத்துவ பல்கலைக்கழகத்தில் மின்னஞ்சல் (EMAIL) சிவா ஐயாதுரையினால் உருவாக்கம்.[2][3]
- 1981 - PROFS ஐபிஎம்
- 1982 - டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் ஒருங்கமைந்த மின்னஞ்சல் உருவாக்குதல்
அவர்கள்களின் அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே அடிப்படையை கொண்டவையாக இருப்பினும் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அவை வழங்கும் வசதிகள் வேறுபட்டவையாக இருந்தன
மின்னஞ்சல் தொடர்பமைப்புகள்
[தொகு]உள்ளூர் மற்றும் உலக தொடர்பமைப்புகள் மூலம் பல்வேறு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைந்த இணக்கமான மின்னஞ்சல்களை உருவாக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1971 ஆம் ஆண்டு முதல் ஆர்பாநெட் மின்னஞ்சல் RFC561, RFC680, RFC724, மற்றும் 1977 இன் RFC733 மூலம் ஒரு தரப்படுத்தப்பட்ட கணினி அமைப்புகள் மூலம் அனுப்பப்பட்டது.
- 1978 ஆம் ஆண்டு யு.யு.சி.பி. மூலம் யூனிக்ஸ் மின்னஞ்சல் குழுவலைப் பின்னலுக்குள் தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது.
- 1981 இல் IBM மெயின்பிரேம் மின்னஞ்சல் பிட்நெட் மூலம் இணைக்கப்பட்டது.
- 1984 ஆம் ஆண்டு DOS இயங்குதளம் மூலம் இயங்கும் ஐபிஎம் கணினிகள் பகிர்வு தகவல்களை மின்னஞ்சல் மூலம் பிறர்க்கு அனுப்புமாறு அமைக்கப்பட்டது.
வகைகள்
[தொகு]வலை அடிப்படையிலான மின்னஞ்சல்
[தொகு]இந்த வகை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் வகையாகும் உள்ளது. பல இலவச மின்னஞ்சல் வழங்குநர்கள் அவர்களது வலை அடிப்படையிலான மின்னஞ்சல்களை வழங்குகின்றனர். அந்த சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் ஒரு இணைய உலாவி மூலம் மின்னஞ்சல் கணக்கில் நுழைகின்றனர். அதன் முக்கிய குறைபாடு அதை பயன்படுத்த எப்போதும் இணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
POP3 மின்னஞ்சல் சேவைகள்
[தொகு]POP3 என்பது அஞ்சல் அலுவலக நெறிமுறை 3 சுருக்கும். இது இணையத்தில் ஒரு முன்னணி மின்னஞ்சல் கணக்கு வகையாக உள்ளது. ஒரு POP3 மின்னஞ்சல் கணக்கில், மின்னஞ்சல் செய்திகளை வாடிக்கையாளர் தன் கணினியில் பதிவிறக்கம் செய்தவுடன், அச்செய்தி வழங்கியில் இருந்து நீக்கப்படும். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகில் மின்னஞ்சலை சேமித்து வைக்க முடியாது. பெரும்பாலான பாப் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு நகலை பதிவிறக்கம் செய்த பின்னர் வழங்கியில் செய்திகளை விட்டுவைக்க ஒரு வழியும் இல்லை என்றாலும், பெரும்பாலான மின்னஞ்சல் வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்துகின்றனர்.
IMAP மின்னஞ்சல் சர்வர்கள்
[தொகு]IMAP இணைய செய்தி அனுமதி நெறிமுறை குறிக்கிறது. அது POP3 மின்னஞ்சலின் மாற்று ஆகும். ஒரு IMAP கணக்கு பயனர் மின்னஞ்சல் வழங்கியில் மின்னஞ்சல் கோப்புறைகளை அனுமதிகின்றது. மேலும் செய்திகளின் தலைப்புகள், அனுப்புநர் மற்றும் பொருள் மற்றும் சாதனம் தொடர்புடைய குறிப்பிட்ட செய்திகளை பதிவிறக்கசெய்யலாம். பொதுவாக மின்னஞ்சல் ஒரு மின்னஞ்சல் வழங்கியில் சேமிக்கப்படும்.
MAPI மின்னஞ்சல் சர்வர்கள்
[தொகு]செய்தி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (MAPI) ஒரு செய்தி அமைப்புகட்டுமானம் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஏபிஐ அடிப்படையிலான மின்னஞ்சல் வழங்கி ஆகும்.
மின்னஞ்சல் சேவை வழங்குபவர்கள்
[தொகு]உலாவிகள் ஊடாக சேவையை வழங்குபவர்கள்
[தொகு]பெரும்பாலும் உலாவிகள் (Browsers) ஊடாக மின்னஞ்சலை அனுப்புதல்/பெறுதல் மிகப்பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிரபலமான சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேடற்பொறி மூலம் பிரபலமடைந்த கூகிளினால் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 10 ஜிபி அளவிற்கு மேலதிகமான இடத்தை இந்த மின்னஞ்சல் மிகப்பிரபலமடைந்து வருகின்றது. மற்றைய நிறுவனங்களைப் போன்று அல்லாமல் எழுத்துகளாலான விளம்பரங்களால் மிகவும் வேகம் குறைந்த இணைப்பிலும் இயங்கக் கூடியது. இதுவே உலகின் அதிகமாக பயன்படுத்தப்ப்படும் மின்னஞ்சல் வழங்குனர் ஆகும்.
'யாகூமெயில் 'யாகூ வின் ஓர் மின்னஞ்சற் சேவையாகும். இலசமான இணைப்பில் அளவற்ற மின்னஞ்சற் சேமிப்பு அளவு அளிக்கின்றார்கள்.
- ஹாட்மெயில் - http://hotmail.com இது அமெரிக்க வாழ் தமிழரான சிவா ஐயாதுரை அவர்களால் உருவாக்கப்பட்ட. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.
மின்னஞ்சல் சேவைக்குதவும் மென்பொருட்கள்
[தொகு]- மைக்ரோசாப்ட் அவுட்லுக் (Microsoft Outlook)
இது மைக்ரோசாப்ட் ஆபீசு (Office) பதிப்புக்களுடன் வருவது. இதில் அவுட்லுக் 2003 (Outlook 2003) எரித, குப்பை அஞ்சல்களை (spam) வடிகட்டும் வசதிவாய்ந்து
- மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஃசுப்பிரசு (Microsoft Outlook Express)
இது இணைய உலாவியான இண்டர்நெட் எக்ஃசுப்புளோரர் (Internet Explorer) உடன் இலவசமாக வருவது.
- மொட்சிலா தண்டர்பேர்ட் (Mozilla Thunderbird)
இலவசமாக மின்னஞ்சல் சேவையை வழங்குபவர்கள் விளம்பரங்கள் மூலம் பணத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். இதில் ஜிமெயில் கூகிள் தேடு பொறி போன்றே சம்பந்தப்பட்ட எழுத்துகளால் ஆன விளம்பரத்தைக் காட்டுகின்றது.
பயன்கள்
[தொகு]வணிக மற்றும் நிறுவன பயன்பாடுகள்
[தொகு]நவீனமயமாக்களின் காரணமாக மின்னஞ்சலானது வளர்ந்து வரும் நாடுகள், வணிக நிறுவனங்கள், அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் போன்றவற்றால் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. 'இ-புரட்சி'யில் இதன் பங்கு மிக முக்கியமானது ஆகும். பணியிட தகவல்தொடர்பு பற்றிய 2010 ஆம் ஆண்டுக்கான ஒரு ஆய்வின்படி, அமெரிக்கர்களில் 83% பேர் தங்களுடைய வெற்றிகரமான வேலைக்கும், உற்பத்தி திறனுக்கும், மின்னஞ்சல் பெரும் உதவியாக இருந்ததாக கூறியுள்ளனர்.[4]
வணிக நிறுவனத்தில் பிற பயன்கள் பின்வருமாறு
- தளவாடங்களை மேம்படுத்துதல்
உலக வணிகர்கள் பெரும்பாலும் தங்களுடைய வணிக நண்பர்களை தொடர்புகொள்வதில் பல இடர்பாடுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஒரே இடத்திலோ, ஒரே நாட்டிலோ, ஒரே கட்டிடத்திலோ அவர்கள் சந்திப்பதில் உள்ளவை ஆகும். அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகள், மாநாடுகள் போன்றவை அதிக நேரத்தையும், பொருட்செலவையும் எடுத்துக்கொள்வதாக உள்ளன. ஆனால் மின்னஞ்சல் என்பது இதற்கு மாற்றாகவும் அதனை விட குறைந்த செலவாக இருப்பாதாகவும் உள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பினை விட இதன் செலவு குறைவு ஆகும்.
2.ஒத்தாசையுடன் உதவுதல் வணிகர்கள் அனைவரும் ஒரேசமயத்தில் தொலைபேசியிலேயோ அல்லது மாநாட்டிலோ பங்குபெற வேண்டுமெனில் அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பங்குபெற வேண்டிய கட்டாயமும், ஒரே கால அளவினை செலவிட வேண்டியுள்ளது. ஆனால் மின்னஞ்சல் பயனபடுத்துவதால் அவர்களுக்கான நேரத்தினை அவர்களே நிர்ணயம் செய்ய இயலும்.
3.செலவைக் குறைத்தல் ஒரு மின்னஞ்சல் அனுப்புவது என்பது அஞ்சல் அல்லது தொலைதூர தொலைபேசி அழைப்புகள், டெலக்ஸ் அல்லது தந்தி அனுப்பும் செலவினை விட மிகவும் குறைவானது ஆகும்.
4.வேகம் இதற்கான மாற்று வழிகளை விட இதன் வேகம் அதிகம்.
5.எழுதப்பட்ட சான்று நபர்களுக்க்கிடையேயான, தொலைபேசி உரையாடல்கள்களைப் போல் அல்லாமல் இதில் அனுப்பியவர், பெறுபவர், நேரம், தேதி போன்றவைகள் இடம்பெறுவதால் ஒரு சான்றாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். சேமிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் சில பிரச்சினைகளின் போது அதனை சான்றாக காண்பிக்க உதவும்.
6.வணிக மின்னஞ்சல் மின்னஞ்சல் மூலமாக வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சலுகைகள் பற்றியும், புதிய பொருட்களின் அறிவிப்பு பற்றியும், பங்களிப்பு< (opt-in") என்பதன் மூலம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடன் அனுமதியுடன் வழங்குகின்றன.[5] பயனர்களின் கலாச்சாரத்தை அறிந்து அதற்கான தொடர்புடைய பொருட்களுக்கான தகவல்களை வழங்குகின்றன. பயனர்களின் அனுமதியின்றி, அனுப்பப்படுமேயானால் அதனை அவர்கள் ஸ்பேம் செய்ய இயலும்.[6]
தனி நபர் பயன்பாடு
[தொகு]7.தனிநபர் கணினி
பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பிய தனிப்பட்ட மின்னஞ்சலை தங்கள் வீட்டில் அல்லது அபார்ட்மெண்டில் இருந்தபடியே தம் தனிப்பட்ட கணினி மூலம்பார்க்க முடியும்.
8.அலைபேசி
தொடக்க காலத்தில் கணிப்பொறியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இவை இருந்தன. தற்போதைய நிலையில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் மடிக்கணினி மூலமாகவும் மின்னஞ்சல் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இல்லாத நேரங்களிலும் மின்னஞ்சல் பார்க்க இயலும். சுமார் 1.4 பில்லியன் பயனர்கள் உள்ளதாகவும் அதில் 50 பில்லியன் ஸ்பேம் மின்னஞ்சகள் தினமும் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தங்களுடைய சொந்த மற்றும் அலுவலகம் தொடர்பான மின்னஞ்சல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன. அமெரிக்க இளைஞர்கள் தங்களுடைய முகநூல் கணக்கினை விட மின்னஞ்சல்களை அதிகம் பார்ப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.[7] 30 சதவீத மக்கள் தங்களுடைய அலைபேசியை மின்னஞ்சல் பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவதாகவும், 91% சதவீத மக்கள் ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் தங்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளதா என பார்வையிடுவதாக தகவல்கள் உள்ளன.[8]
இவற்றையும் காணவும்
[தொகு]- அஞ்சல்தலை சேகரிப்பு
- அஞ்சல் வரலாறு
- அஞ்சல் குறியீடுகள்
- அஞ்சலட்டை
- அஞ்சல்குறி
- அஞ்சலக சுட்டு எண்
- இந்திய அஞ்சல் துறை
- இந்திய தபால் சேவை
- அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்
- விதவிதமான அஞ்சல் தலைகள்
- அஞ்சல் தலையில் அழகான பூக்கள்
சான்றுகள்
[தொகு]- ↑ 25-12-2013 அன்று வெளிவந்த கல்கண்டு வார இதழ்.பக்கம்-2
- ↑ Stromberg, Joseph (22 February 2012). "A Piece of Email History Comes to the American History Museum". Smithsonian Institution. Archived from the original on 27 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ National Museum of American History(23 February 2012). "Statement from the National Museum of American History: Collection of Materials from V.A. Shiva Ayyadurai". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 19 February 2013.
- ↑ By Om Malik, GigaOm. "Is Email a Curse or a Boon? பரணிடப்பட்டது 2010-12-04 at the வந்தவழி இயந்திரம்" September 22, 2010. Retrieved October 11, 2010.
- ↑ Martin, Brett A. S.; Van Durme, Joel; Raulas, Mika; Merisavo, Marko (2003). "E-mail Marketing: Exploratory Insights from Finland" (PDF). Journal of Advertising Research 43 (3): 293–300. doi:10.1017/s0021849903030265. http://www.basmartin.com/wp-content/uploads/2010/08/Martin-et-al-2003.pdf.
- ↑ Lev, Amir. "Spam culture, part 1: China".
- ↑ "Email Is Top Activity On Smartphones, Ahead Of Web Browsing & Facebook [Study]". 28 March 2013.
- ↑ "The ultimate mobile email statistics overview".