யசுனாரி கவபட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யசுனாரி கவபட்டா

யசுனாரி கவபட்டா (川端 康成 Kawabata Yasunari, சூன் 11, 1899 - ஏப்ரல் 16, 1972) நோபல் பரிசு பெற்ற யப்பானிய நாவலாசிரியர் ஆவார். சாகாவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் இழந்தவர். செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். 1968 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் யப்பானியரானார். யப்பானிய இலக்கியங்களை ஆங்கிலத்துக்கும் பிற மேலைத்தேய மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பதில் குறிப்பிடத்தக்க ஊக்குவிப்பாளராக இருந்தார். 1972 இல் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் எதுவும் தெளிவாகத் தெரியவரவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசுனாரி_கவபட்டா&oldid=2304275" இருந்து மீள்விக்கப்பட்டது