ஜான் ஸ்டைன்பேக்
ஜான் எர்னஸ்ட் ஸ்டைன்பேக் ஜூனியர் (John Ernst Steinbeck Jr. பிப்ரவரி 27, 1902 - டிசம்பர் 20, 1968) ஓர் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். அவர் 1962 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார், "அவரது யதார்த்தமான மற்றும் கற்பனையான எழுத்துக்களுக்காகவும் அவர்கள் தீவிரமான சமூக உணர்வைக் கொண்டிருக்கும் இவரது எழுத்துக்களுக்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார்." [1] அவர் "அமெரிக்க இலக்கியத்தின் மாபெரும் ஜாம்பவான்" என்று அழைக்கப்படுகிறார்[2] மற்றும் அவரது பல படைப்புகள் மேற்கத்திய இலக்கியத்தில் முக்கியமான படைப்புகளாக கருதப்படுகின்றன. [3]
தனது எழுத்து வாழ்க்கையில், 16 புதினங்கள், ஆறு புனைகதை அல்லாத நூல்கள் மற்றும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 33 நூல்களை எழுதியுள்ளார். டொர்டில்லா பிளாட் (1935) மற்றும் கேனரி ரோ (1945), பல தலைமுறைள் கடந்தும் காவியமாகக் கருதப்படும் ஈஸ்ட் ஆஃப் ஈடன் (1952) மற்றும் ஆஃப் மைஸ் அண்ட் மென் (1937) மற்றும் தி ரெட் போனி (1937) ஆகிய புதினங்களுக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். புலிட்சர் பரிசு பெற்ற- தி கிராப்ஸ் ஆஃப் வெரத் (1939) [4] ஸ்டீன்பெக்கின் தலைசிறந்த படைப்பாகவும் அமெரிக்க இலக்கிய நெறிமுறையின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. இது வெளியிடப்பட்ட முதல் 75 ஆண்டுகளில், இது 14 மில்லியன் பிரதிகள் விற்றது. [5]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
ஸ்டீன்பெக் 1902 பிப்ரவரி 27 அன்று கலிபோர்னியாவின் சலினாஸில் பிறந்தார். [6] அவர் ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ஐரிஷ் ஆகிய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். [7] ஜோகன் அடோல்ஃப் க்ரோஸ்டைன்பெக் (1828-1913), எனும் ஸ்டீன்பெக்கின் தந்தைவழி தாத்தா, அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தபோது குடும்ப பெயரை ஸ்டீன்பெக் எனச் சுருக்கினார்.
அவரது தந்தை ஜான் எர்ன்ஸ்ட் ஸ்டீன்பெக் (1862-1935), மான்டேரி கவுண்டியில் பொருளாளராக பணியாற்றினார். ஜானின் தாயார், முன்னாள் பள்ளி ஆசிரியரான ஆலிவ் ஹாமில்டன் (1867-1934), ஸ்டீன்பெக்கின் வாசிப்பு மற்றும் எழுத்தின் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டார். [8] இவர் எபிஸ்கோபல் தேவாலயத்தின் உறுப்பினராக இருந்த போதிலும் பின்னர் அறியவியலாமைக் கொள்கை உடையவராக இருந்தார். [9] [10] பசிபிக் கடற்கரையிலிருந்து இருபத்தைந்து மைல் தொலைவில் உள்ள உலகின் மிக வளமான மண்ணினால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கிராமப்புற பள்ளத்தாக்கில் இவர் வசித்து வந்தார். பள்ளத்தாக்கு மற்றும் கடற்கரை இரண்டும் அவரது சில சிறந்த புனைகதைகளுக்கான அமைப்புகளாக இருகும் என அவர் நினைத்தார். [11] அவர் தனது கோடைகாலத்தை அருகிலுள்ள பண்ணைகளிலும் பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடனும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு பண்ணைகளில் கழித்தார். புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பற்றி அவர் அங்கு இருந்தபோது அறிந்து கொண்டார். இது அவருக்குஆஃப் மைஸ் அண்ட் மென் எனும் நூலினை எழுத உதவியது.
விருது[தொகு]
அவர் 1962 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார்,
சான்றுகள்[தொகு]
- ↑ "Nobel Prize in Literature 1962". Nobel Foundation. October 21, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 17, 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Swedish Academy reopens controversy surrounding Steinbeck's Nobel prize". தி கார்டியன். 3 January 2013. https://www.theguardian.com/books/2013/jan/03/swedish-academy-controversy-steinbeck-nobel. பார்த்த நாள்: January 12, 2019.
- ↑ "Swedish Academy reopens controversy surrounding Steinbeck's Nobel prize". தி கார்டியன். 3 January 2013. https://www.theguardian.com/books/2013/jan/03/swedish-academy-controversy-steinbeck-nobel. பார்த்த நாள்: January 12, 2019.
- ↑ "Novel". The Pulitzer Prizes. August 21, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ Chilton, Martin. "The Grapes of Wrath: 10 surprising facts about John Steinbeck's novel". Telegraph (London). December 13, 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 6, 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "John Steinbeck Biography". Biography.com website. A&E Television Networks. February 6, 2018. February 26, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Okie Faces & Irish Eyes: John Steinbeck & Route 66". Irish America. June 2007. November 21, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 23, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "John Steinbeck Biography". March 5, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 14, 2010 அன்று பார்க்கப்பட்டது.. National Steinbeck Centre
- ↑ Alec Gilmore. John Steinbeck's View of God பரணிடப்பட்டது மார்ச் 4, 2016 at the வந்தவழி இயந்திரம். gilco.org.uk
- ↑ The true adventures of John Steinbeck, writer: a biography. Viking Press. https://archive.org/details/trueadventuresof00bens/page/248.
- ↑ Of Mice and Men. Penguin Books. https://archive.org/details/ofmicemenpenguin00john.