அறியவியலாமைக் கொள்கை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழர் சமயம் |
---|
![]() |
அறியவியலாமைக் கொள்கை அல்லது அறியவியலாமை நிலைப்பாடு எனப்படுவது சில விடயங்களின் தன்மை அல்லது மெய்ப்பொருள் பற்றிப் போதிய தகவல்களோ அறிவோ மனிதருக்கு இன்னும் கிடைக்காததால் அந்த விடயங்களைப் பற்றி எந்தவிதமான அறுதியான முடிவுகளையும் முன்வைக்காமல் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக இறை, மறுபிறவி, பிறவிச் சுழற்சி, ஆன்மா போன்ற விடயங்கள் அறிவியல் நோக்கில் விளக்கப்படவில்லை. எனவே பலர் இவை பற்றி அறியவியலாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.
பெரும்பாலான மனிதர்களால் நம்பப்படும் இறை போன்ற விடயங்களை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கடைப்பிடிப்பது எளிதன்று. பௌத்தம் இறை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.