கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்

கொலம்பியாவிலுள்ள வல்லெடுப்பார் என்னும் இடத்தில் கார்சியா மார்க்கேஸ் (c. 1984).
பிறப்பு கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்
மார்ச்சு 6, 1927 (1927-03-06) (அகவை 90)
அராகட்டாக்கா, மக்தலேனா, கொலம்பியா
தொழில் புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர்.
நாடு கொலம்பியர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1982)
கையொப்பம் Gabriel Marquez Signature.png

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் (Gabriel José de la Concordia García Márquez - பிறப்பு: மார்ச் 6, 1927 இறப்பு:ஏப்ரல் 17,2014 ) கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். சட்டம் பயில்வதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்த இவர் பின்னர் அதிலிருந்து விலகிப் பத்திரிகையாளர் ஆனார். தொடக்கத்திலிருந்தே கொலம்பிய அல்லது வெளிநாட்டு அரசியலை விமர்சிப்பதற்கு இவர் பின்னின்றது இல்லை. 1958 ஆம் ஆண்டில் மேர்செடெஸ் பார்ச்சா (Mercedes Barcha) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரொட்ரிகோ, கொன்சாலோ என இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.[1] இவர் பத்திரிகையாளராகத் தொடங்கிப் பல பெயர் பெற்ற புனைகதையல்லாத ஆக்கங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஆனாலும் இவர் எழுதிய புதினங்களுக்காகவே பெரிதும் அறியப்படுபவர். தனிமையின் நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) - 1967, காலராக் காலக் காதல் (Love in the Time of Cholera) - 1985, போன்ற புதினங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. இவருடைய ஆக்கங்கள் திறனாய்வாளரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பரவலான வணிக வெற்றிகளையும் பெற்றன.

விருதுகள்[தொகு]

1982ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 'ஒரு நூற்றாண்டுத் தனிமை' (One Hundred Years of Solitude) நாவலுக்காக வழங்கப்பட்டது. அந்நிகழ்சியின் ஏற்புரையில் லத்தீன் அமெரிக்காவின் தனிமையை சுட்டிக்காட்டி

‘‘லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில் கூடக் காணவியலாத கொடூரங்களையும் விநோதங்களையும் தன்னகத்தே கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க பாரம்பரியான உத்திகள் எதுவும் எங்களிடம் இல்லை என்பதே அந்தத் தனிமையின் சாரம் எனலாம்”

என்று குறிப்பிட்டார்.[2]

தமிழில்[தொகு]

தமிழின் தீவிர இலக்கியப் பரப்பில் மார்க்கேஸ் நன்கு அறிமுகமானவர். இவரது பல சிறுகதைகளும் சில குறுநாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கோணங்கி ஆசிரியராக இருக்கும் கல்குதிரை இதழ் மார்க்கேசுக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் கடந்த ஜூன் மாதம் காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் உண்டு. தனிப்பட்ட சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை மற்றும் அவரே அறியும் ரகசியமான வாழ்க்கை"

-மார்க்வெஸ்

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]