கவிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கவிதை (Poetry) என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

கவிதை தோற்றம்[தொகு]

'காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்' என்பார் எமர்சன். 'கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்' என்கிறது வாழ்வியல் களஞ்சியம். கவிதை முதலில் இசைப்பாடலாகத் தோன்றிருக்கவேண்டும் என்ற கருத்திற்கு வலிமைச சேர்க்கும் விதமாக சங்க இலக்கியத்தில் பாணன்,பாடினி,விறலி போன்றோர்களின் குறிப்புகள் கிடைக்கின்றன. தமிழ்க் கவிதைத் தோற்றத்தில் பரிபாடல், பத்துப்பாட்டு ஆகியன எட்டுத்தொகையின் அகவற்பாவிற்கு முந்தைய வடிவம் என்ற கருத்தும் உண்டு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற திணைகளுக்குப் பண் வடிவங்கள் இருந்துள்ளன. கவிதை முதலில் வாய்மொழிப் பாடலாக இருந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. எனவே கவிதையின் தோற்றமும் முதலில் பொருளற்ற இசை குறிப்புகளில் இருந்து இசைப் பாடல்கள் தோன்றிருக்க வேண்டும். கல்வி புலவர்களின் உடமைப்பொருளான போது இ​சையின் ஒரு பிரிவாய் ஒலி நயத்துடன் கூடிய அகவற்பா,வெண்பா,வஞ்சிப்பா,கலிப்பா போன்ற யாப்பு வடிவமும் தோன்றின. கல்வி மக்களின் உடமைப் பொருளாகும் போது உரைநடை இலக்கியம் மற்றும் உரைநடைசார்ந்த புதுக்கவிதை பிறந்தது எனலாம்.

நுாற்பா செய்யுள், விருத்தம், பண், கவி​தை, புதுக்கவி​தை, ஐக்கூ ஆகியன ஒரு இனம் சார்ந்தது என்றாலும் அதன் முகங்கள்​ வேறானது. காலத்​திற்கு காலம்​ மொழி தன்​மை புதுப்பித்துக்​கொள்வது ​​போல் கவி​தையியலும் தன்​னை வளர்த்துக் ​கொள்கிறது.

எது கவி​தை[தொகு]

" இது சிறந்த கவி​தை என்று எளி​மையாகச் ​சொல்லி விடுவது போல எது சிறந்த கவி​தை எனச் ​சொல்ல முடியாது " என்கிறார் பேராசிரியர் வையாபுரிபிள்​ளை. "மிக உயர்ந்த சொற்கள் மிகச் சீரிய மு​றையில் உள்ளடக்கியது கவி​தை" என்கிறார்​ கோல்ரிட்ச். " ஆற்றல் நிரம்பிய ​சொற்கள் இயல்பாகப் ​பொங்கி வழிவது கவிதை " என்கிறார்​ வோர்ட்சு​வொர்த்து. "கால்வாய் இல்லாத இடத்தில் ​​பெய்யும் ஒளிம​ழை​யே கவி​தை" என்கிறார் கீட்ஸ் . " நேர் ​கோடுகளும் வ​ளை​கோடுகளும் வண்ணத்துடன் இ​ணைந்​தோ இ​ணையாம​லோ அழகியலாகும்​போது ஓவியமாவ​தைப்​ போல் உள்ளடக்கம் அழகியலோடு இ​ணைந்து உணர்​வைத் ​தொடும் போது கவி​தையாகிறது" என்கிறார் ​சென்​னைப் பல்க​லைக்கழக ஆய்வாளர் ப.தமிழ்ச்​செல்வன்.(தமிழ்க்கவி​தை வரலாறு ) முடிவாகச் ​சொன்னால் ​சொற்களால் கட்டப்பட்ட க​லைவடிவம் கவி​தை.

வெளி இணைப்புகள்[தொகு]

இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதை&oldid=2243017" இருந்து மீள்விக்கப்பட்டது