பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஓசையுடன் தூக்கிப் பாடப்படுவது பாட்டு (song) இது ஒலிநயத்துடன், சொற் கோர்வைகளாக, இசை, உணர்ச்சி, கற்பனை முதலானவை வெளிப்படும் வகையில் கருத்தின் வெளிப்பாடாக வரும். பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள நீண்ட செய்யுள்களைக் பாட்டு எனவும்எட்டுத்தொகை நூலில் உள்ள செய்யுள்களைப் பாடல் எனவும் வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

ஒலிநயம் உள்ள சொற்களைக் கோர்த்து உணர்ச்சியையும் கற்பனையையும் கருத்தையும் சில பரவலான யாப்பு வடிவங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தலை பாட்டு எனலாம். இது வாய்மொழி இலக்கியமாகவோ அல்லது எழுத்து இலக்கியமாகவோ அல்லது இரண்டாகவும் அமையலாம். பொதுவாக பாட்டு இசையுடன் பாடப்படும்.

தமிழிசையில் பாட்டு வகைகள்[தொகு]

வண்டிக்காரப்பாட்டு, அறுவைப்பாட்டு, நடுகைப்பாட்டு, கிளிப்பாட்டு, குயில்பாட்டு, குறவைப்பாட்டு, சங்குப்பாட்டு, நையாண்டிப்பாட்டு, படைப்புவரிப்பாட்டு, பாம்பாட்டிப்பாட்டு, முர்த்தனப் பாட்டு, பல்லாண்டுப்பாட்டு, மயங்கு நிலைப்பாட்டு, முகவரிப்பாட்டு என பல வைககள் உண்டு.

பொதுவான வகைகள்[தொகு]

  • பக்திப் பாட்டு
  • போர்ப் பாட்டு
  • துயரப் பாட்டு
  • காதல் பாட்டு
  • காமப் பாட்டு
  • குழந்தைப் பாட்டு
  • பயணப் பாட்டு
  • வேலைப் பாட்டு
  • காட்சிப் பாட்டு
  • தன்னுணர்ச்சிப் பாட்டு
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டு&oldid=2415753" இருந்து மீள்விக்கப்பட்டது