வயலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வயலின்

வயலின் (பிடில்) (இந்த ஒலிக்கோப்பு பற்றி வயலின் இசைக்கோப்பு) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என இரு பிராந்திய இசை வகைகளிலும் வாசிக்கப்படக்கூடிய ஒரே ஒரு வாத்தியக்கருவி ஆகும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகின்றது. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது. இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது. எனினும், ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன. இவை சங்கீதத்தில் மிக முக்கியமானவை ஆகும். அத்துடன், பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம்.

வரலாறு[தொகு]

இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார்.

கருநாடக இசையில் வயலின்[தொகு]

தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.

வயலினின் அமைப்பு[தொகு]

வயலின் பல அளவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் வில் குதிரை வாலினால் செய்யப்படுகின்றது. சிறந்த நாதத்தை வெளிப்படுத்துவதற்காக வயலினின் வில் ரொசின் எனப்படும் ஒரு வகைக்கல்லில் உரோஞ்சப்படுகின்றது.

கட்டமைப்பும், இயங்கும் விதமும்[தொகு]

வாசிக்கும் நிலை[தொகு]

கருநாடக இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிப்பவர், மேடையின் தரையில் அமர்ந்து அல்லது கதிரையில் ஒருகால் மேல் மறு கால் போட்டு வாசிக்கின்றனர். வாசிக்கும் போது வலது காலை முன்னிறுத்தி அதனில் வயலினைத் தாங்குவர். இடதுகால் உள்ளே மடக்கப்பட்டிருக்கும். மேலைத்தேய சங்கீதத்தில் நின்று கொண்டும், இருந்துகொண்டும் வயலின் வாசிக்கப்படும். வயலினின் மேல் இடது பக்கத்தை நாடியினால் அழுத்திப் பிடித்தபடி வயலின் மேலைத்தேய சங்கீதத்தில் வாசிக்கப்படுகின்றது.

இசைவடிவத்தின் வகைகள்[தொகு]

பிடில்[தொகு]

மின்சாரத்தில் இயங்கும் வயலின்கள்[தொகு]

கருநாடக இசை வயலின் மேதைகள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

ஆங்கிலத்தில்
  • Galamian, Ivan (1999). Principles of Violin Playing and Teaching. Ann Arbor, Minnesota: Shar Products Co. ISBN 0-9621416-3-1. 
  • Strange, Patricia; Strange, Allen (2001). The Contemporary Violin: Extended Performance Techniques. Berkeley, California: University of California Press. ISBN 0-520-22409-4. 
  • Thede, Marion (1970). The Fiddle Book. Oak Publications. ISBN 0-8256-0145-2. 
  • Bardfeld, Sam (2002). Latin Violin. Milwaukee, Wisconsin: Hal Leonard Publishing Corporation. ISBN 0-9628467-7-5. 
  • Stowell, Robin (1992). The Cambridge Companion to the Violin. Cambridge: Cambridge University Press. ISBN 0-521-39033-8. 
  • Beament, James (1992/1997). The Violin Explained - Components Mechanism and Sound. Wotton-under-Edge, Gloucestershire: Clarendon Press. ISBN 0-19-816623-0. 
  • Hill, William Henry; Hill, Arthur F., Hill. Alfred Ebsworth (1902/1963). Antonio Stradivari, his life and work, 1644-1737. Chemsford, Massachusetts: Dover Publications. ISBN 0486204251. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலின்&oldid=2276618" இருந்து மீள்விக்கப்பட்டது