தென்னிந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்னிந்தியா
நிறப்படுத்திக் காட்டப்பட்டுள்ள தென்னிந்திய நிலப்பரப்பு
செந்நிறத்தில் காட்டப்பட்டுள்ள தென்னிந்தியா
மக்கள் தொகை 253,051,953
நிலப்பரப்பு 635,780 km2 (245,480 சது மை)
மக்கள் தொகை அடர்த்தி 362/km2 (940/சது மை)
மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் மாநிலங்கள்:
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகம்
தெலுங்கானா
ஆட்சிபகுதிகள்:
இலட்சத் தீவுகள்
பாண்டிச்சேரி
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தலைநகரங்கள் (2011) தலைந்கரங்கள்:
சென்னை
திருவனந்தபுரம்
ஐதராபாத்
பெங்களூர்
போர்ட் பிளேர்
கவரத்தி
பாண்டிச்சேரி
முதல் பத்து மக்கள் தொகை மிகுந்த நகரங்கள் (2011) சென்னை
பெங்களூரு
ஹைதராபாத்
விசாகப்பட்டினம்
கோயம்புத்தூர்
மதுரை
தலைமை மொழிகள் தெலுங்கு
தமிழ்
கன்னடம்
மலையாளம்
ஆங்கிலம்
பிறப்பு வீதம் 20.4
இறப்பு வீதம் 7.
குழந்தை இறப்பு வீதம் 48.4

தென் இந்தியா என்பது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19,31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான தக்காண பீடபூமியை உள்ளடக்கி, கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் அரபிக் கடல் மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை நடுவில் பீடபூமியை நடுப் பகுதியாக கொண்டுள்ளது. [1][2] கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் வைகை ஆறுகள் தலைமை நீர் அடையாளங்களாகும்.[3] சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோயம்புத்தூர், கொச்சி,, மதுரை மற்றும் விசாகப்பட்டினம் மிகப் பெரிய நகர்ப்புற பகுதிகளாகும்.

தென் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நான்கு முக்கிய திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியனவற்றயே பேசுகின்றனர்.[4] தென் இந்தியா பகுதிகளை பல வம்ச மன்னர்கள் ஆண்டனர் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் தெற்கு ஆசியா முழுவதும் பரவியது. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை தென் இந்தியாவில் நிறுவப்பட்ட தலைமை வம்சாவளிகள் ஆகும்.[5][6]

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு பல ஏற்ற இறக்கங்கள் பட்ட பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாக பொருளாதார முன்னேற்றம் அடைந்தன. கடந்த முப்பதாண்டுகளாக, நாட்டு சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தென் இந்திய மாநிலங்களில் சில முன்னேற்றம் கண்ட அதே வேளை, வறுமை நாட்டின் ஏனைய பகுதிகளை போல சிக்கலாக இருக்கிறது. [7] தென் மாநிலங்களில் பொருளாதாரம் வட மாநிலங்களை விட அதிக வேகத்தில் வளர்ச்சி பெற்றுவிட்டது. கல்வியறிவு விகிதம் தென் மாநிலங்களில் சுமார் 80% ஆக உள்ளது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் விட அதிகமாகதாகும்.[8][9]

பதிவுகள்[தொகு]

  1. Edward Balfour (1885). The Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial Industrial, and Scientific: Products of the Mineral, Vegetable, and Animal Kingdoms, Useful Arts and Manufactures. Bernard Quaritch. பக். 1017–1018. https://books.google.com/books?id=iU0OAAAAQAAJ&pg=PA1017. 
  2. Dr. Jadoan, Atar Singh (September 2001). Military Geography of South-East Asia. India: Anmol Publications Pvt. Ltd.. பக். 270 pages. ISBN 81-261-1008-2. https://books.google.com/books?id=4M_bG9rpXRwC. பார்த்த நாள்: 2008-06-08. 
  3. Thammineni Pullaiah, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy. Flora of Eastern Ghats: Hill Ranges of South East India. https://books.google.com/?id=pSXidQZupHYC&pg=PR3. பார்த்த நாள்: 1 January 2015. 
  4. "Browse by Language Family". Ethnologue (19 February 1999).
  5. "They administered our region". The Hindu (4 June 2007).
  6. Nilakanta Sastri 1955, p. 216
  7. "Human development, poverty, health & nutrition situation in India". NCBI (20 April 2015).
  8. "Census 2011, Chapter 6 (State of Literacy), p.14". Government of India.
  9. "NFHS India". NFHS.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னிந்தியா&oldid=2629151" இருந்து மீள்விக்கப்பட்டது