மரகதப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Emerald Dove
Chalcophaps indica -National Aquarium -Baltimore-8a.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு பறவைகள்
வரிசை: பெரும்சிறும்புறாக்கள்
(எண்ணிக்கை=300-320)

குடும்பம்: புறாக்குடும்பம்
பேரினம்: சிறும்புறாக்கள் (எண்ணிக்கை=2மட்டுமே)
இனம்: C. indica
இருசொற்பெயர்
Chalcophaps indica
(லின்னேயசு, 1758)

மரகதப் புறா (Chalcophaps indica ), வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறவு, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அவையாவன, லாங்கிராஸ்டிரிஸ் (longirostris ) மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லியிலிருந்து கேப் யார்க் தீபகற்பம் வரையிலும், கிரைசோகுலோரா (chrysochlora ) கேப் யார்க் தீபகற்பத்திலிருந்து தெற்கு நியூ சவுத் வேல்ஸ் வரையிலும் மற்றும் நார்ஃபோக் தீவிலிருந்து லார்டு ஹோவ் தீவு வரையிலும், நடலிசு (natalis) கிறிஸ்துமஸ் தீவிலும் காணப்படுகின்றன.


இவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள மரங்களில் சில சுள்ளிகளை வைத்துக் கூடுக் கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற முட்டைகளை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.


பறத்தல் பொதுவான புறவுகளை ஒத்த விதத்தில் வேகமாகவும் நேராகவும், முறையான இறக்கைத் துடிப்புகளுடன், அவ்வப்போது விரைந்த கூறிய துடிப்புகளுடன் காணப்படும். பொதுவாக இப்பறவை விரும்பிய காட்டுப்பகுதிகளுக்கிடையே, தாழ்வாகப் பறக்கிறது. எனினும், தொந்தரவு செய்யப்பட நேரங்களில், பறப்பதை விட நடப்பதையே விரும்புகிறது. பறக்கும்போது, அடிச்சிறகுகள் பழுப்பு மஞ்சள் நிறமாகவும், பறக்கும் இறக்கைகள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது.


மரகதப் புறா தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 - 11.2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும்போது, இறகுகளும் வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது. இதன் தலையும், கீழ்ப்பகுதிகளும் கிரைசோகுலோரா (chrysochlora) இனத்தில் சிவப்பு நிறத்திலிருந்து (லாங்கிராஸ்டிரிஸ் (longirostris) இனத்தில் மர நிறத்திலிருந்து) மெதுவாகக் கீழ் வயிற்றுப்பகுதியில் பழுப்பு நிறமாக மாறுபட்டுக் காணப்படுகின்றது.கண்கள் கருத்தும், அழகும் கால்களும் சிவந்தும் காணப்படுகின்றது.

Emerald dove444.jpg

ஆண் பறவையின் தோள்ப் பகுதியில் வெளிறிய புள்ளியும், தலை பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. இவை பெண் பறவைக்கு இருப்பதில்லை. பெண் பறவைகள் மரப் பழுப்பு நிறம் மிகுந்தும், தோள்களில் பழுப்புக் குறியுடனும் காணப்படுகின்றன.இளம் பறவைகள் பெண் பறவைகளை ஒத்த தோற்றத்தில் காணப்படுகின்றன.


மரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன.இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. இவை நிலத்தில் விழுந்த பழங்களைத் தேடி உண்ணுகின்றன. இவை விதைகள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை உண்ணுகின்றன. இவை பொதுவாக அணுகக்கூடியவையாகவும் பழக்கப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.


இவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும் ஆறு அல்லது ஏழு கூவல்கள் கொண்ட, மெதுவான முனகும் கூவலாகக் காணப்படுகின்றது. இவை மூக்கிலிருந்து "ஹூ-ஹூ-ஹூன்" என்றும் ஒசையிடுகின்றன.ஆண் பறவைகள் இனச்சேர்க்கையின்போது மெல்ல ஆட்டமிடுகின்றன.


இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக உள்ளது. இப்பறவை கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது சதவீதம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. [1] [2]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகதப்புறா&oldid=1866718" இருந்து மீள்விக்கப்பட்டது