இறகு
Appearance
இறகுகள் (ⓘ) பறவைகளில் தோலின் வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை வகுப்பை பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. டைனோசர்களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.
பல பறவையின் இறகுகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து உருமறைப்பு தன்மையைக் கொண்டிருந்து அவற்றிற்கு தற்காப்பு அளிப்பதாக உள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஜமால் ஆரா (1993). "பறவைகளைப் பார்". நூல். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா. pp. 5–6. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.