கடற்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
.

கடற்பறவைகள் என்பன கடற்சூழ்நிலைக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்ட பறவைகள் ஆகும். பொதுவாக கடற்பறவைகள் மற்ற பறவைகளை விட நீண்ட காலம் வாழ்கின்றன. பெரும்பாலான கடற்பறவைகள் கூட்டமாக வாழ்கின்றன. கூட்டத்திலுள்ள பறவைகளின் எண்ணிக்கை அதிகளவாக ஒரு மில்லியன் வரை இருக்கக் கூடும். பல கடற்பறவைகள் நீண்டதொலைவு வலசை போகின்றன. வளர்ந்துவரும் சூழலில் கடற்பறவைகள் அழிவிற்கு வேட்டையாடுதல் போல் நெகிழிக் கழிவை இவை உண்பதால் இறந்து விடுகின்றன என அறியப்பட்டுள்ளது. [1]


கூழைக்கடா, அல்பட்ரோஸ் போன்றன கடற்பறவை வகையைச் சேர்ந்தன.

மேற்கோள்கள்[தொகு]

  1. உலகின் 90% கடற்பறவைகள் வயிற்றுக்குள் பிளாஸ்டிக்: ஆய்வில் அதிர்ச்சி தி இந்து தமிழ் 02. செப்டம்பர் 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடற்பறவை&oldid=2664769" இலிருந்து மீள்விக்கப்பட்டது