உள்ளடக்கத்துக்குச் செல்

பறவை நோக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பறவை நோக்குதல் என்பது மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் காணப்படும் பறவைகளை கவனித்து பார்த்து, ஒலிகளைக் கேட்டு கற்றுக்கொள்ளுதல் மற்றும் அவற்றின் வாழிடங்களையும் உணவுமுறைகளையும் அறியும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். இருகண் நோக்கி, குறிப்பேடு, பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடுகளுடன் பறவைகளின் வாழிடம் அல்லது பறவைகள் சரணாலயம் சென்று பறவைகளை உற்று நோக்கி அறிவது‌ பறவை நோக்குதல்.

பறவை நோக்குதல்

பறவை நோக்குதல் நெறிமுறைகள்

[தொகு]

பறவை நோக்குதலுக்கு செல்ல வேண்டியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள்:

  1. பறவைகளின் வாழிடத்திற்குச் செல்கிறோம், எனவே அவற்றின் சுதந்திரத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
  2. சத்தமிடுதல், உரக்கப் பேசுதல், செல்லிடப் பேசியின் அழைப்பு ஒலி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  3. பறவைகள் அடைகாக்கும் காலங்களில் அவற்றின் கூட்டின் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பறவைகள் எரிச்சல் அடைந்தோ கலக்கமடைந்தோ முட்டையை விட்டு பறக்க வாய்ப்பு உண்டு.
  4. நெகிழி பாலிதீன் போன்ற பொருட்களை பறவைகளின் வாழிடங்களில் உபயோகிக்கக்கூடாது.
  5. காணும் பறவையைப் பற்றிய தெளிவில்லாமல் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது.[1]
BrantaLeucopsisMigration

பறவைகளை இனங்காணுதல்

[தொகு]

பறவை நோக்குதலில் ஆர்வம் உடையவர்கள், பறவைகளின் வாழிடத்தைக் கண்டறிந்த பிறகு நோக்குதலுக்காக அதிகாலை நேரங்களில் செல்வதால் இரைதேட சுறுசுறுப்பாய் பறவைகள் இயங்கும். இந்நேரம் சிறந்ததாய் அமையும்.

இனங்காணும் முறைகள்

[தொகு]

உடல் மற்றும் சிறகுகள் (Body and Wings) & வண்ண அமைப்பு (Colour Pattern)

[தொகு]

ஒரு பறவையைப் பார்க்கும்பொழுது முதலில் அதன் வண்ணம் எவ்விடத்தில் எவ்வாறு அமைதுள்ளது, சிறகின் நிறம் அலகில் தலையின் நிறம், மார்பு, வயிறு போன்றவற்றின் நிறம் என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

அளவு மற்றும் வடிவம் (Size and Shape)

[தொகு]

தெரிந்த பறவையை வைத்து இதனை முடிவு செய்யலாம். காக்கையை விட பெரியது, சிட்டுக்குருவியை விட பெரியது என்பது போன்று அடையாளம் காணுதல்.[2]

அலகின் அமைப்பு (Beak / Bill Structure)

[தொகு]
பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்

ஒவ்வொரு பறவைக்கும் அதன் வாழ்க்கை முறைக்கும் உணவு முறைக்கும் ஏற்ற வகையில் அதன் அலகு அமைந்திருக்கும்.

  • பொது அலகு (General)
  • பூச்சி பிடி அலகு (Insect Catching)
  • திணையுண்ணி (Grain Eating)
  • குறும்பைத் தின்னி (Coniferous Seed Eating)
  • தேன் உறிஞ்சி அலகு (Nectar Feeding)
  • பழந் தின்னி அலகு (Fruit Eating)
  • மரங்கொத்தி அலகு (Chiselling)
  • பை அலகு (Dip Netting)
  • மேல் வாரும் அலகு (Surface Skimming)
  • மண் துழாவி அலகு (Scything)
  • ஆழத்தேடு அலகு ( Probing)
  • வடிப்பலகு (Filter Feeding)
  • மீன்கொத்தி அலகு (Aerial Fishing)
  • நீர்த் துழாவி அலகு (Pursuit Fishing)
  • பிணந்தின்னி அலகு (Scavenging)
  • கொன்றுன்னி அலகு (Raptorail)

பறவைநோக்குதல் குறிப்பு

[தொகு]
  1. வாழிடம் (Habitat)
  2. பழக்கங்கள் (Behavioural Aspects)
  3. அழைப்பு மற்றும் கீச்சல் (Call)
  4. பறக்கும் முறை (Flying Pattern )
  5. கூட்டின் அமைப்பு (Nest)

ஒரு புதிய பறவையைக் காணும்போது மேலே கூறிய ஐந்து கருதுகோள்களையும் நினைவில் கொண்டு தேதி, நேரம், பார்த்த இடம் ஆகியவற்றுடன் ஒரு சிறிய குறிப்பை எடுத்துக்கொள்வது புகைப்படம், இணையம் மற்றும் பறவைகள் பற்றிய புத்தகத்துடன் மேலும் பல தகவல்களை அப்பறவைகளைப் பற்றி குறிப்பெடுப்பது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சரவண கணேஷ் & கொழந்த. கா2 : கா ஸ்கொயர்.
  2. ஆதி வள்ளியப்பன். நாராய் நாராய். அறிவியல் வெளியீடு.
  3. தியோடர் பாஸ்கரன். இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. உயிர்மை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவை_நோக்கல்&oldid=3505597" இலிருந்து மீள்விக்கப்பட்டது