பறவைக்கு வளையமிடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓர் ஆய்வாளர் ஐரோப்பிய செரின் என்னும் பறவையின் காலில் ஒரு வளையத்தை இடுகிறார்.

பறவைக்கு வளையமிடல் என்பது பறவைகளின் காலிலோ இறக்கையிலோ எடை குறைந்த சிறிய எண்களைப் பொறித்த வளையங்களை இடுதலைக் குறிக்கும். இவை பறவைகளை தனித்து அடையாளம் காண உதவுகின்றன. இந்த வளையங்கள் உலோகத்தினாலோ நெகிழியினாலோ செய்யப்பட்டிருக்கும். இவை பறவை ஆய்வாளர்களால் பறவைகளின் வாழிடம், வலசை போகும் பகுதிகள், உணவுப் பழக்கம், வாழ்நாள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன.

இறக்கைப் பட்டை[தொகு]

இறக்கைப் பட்டையுடன் ஒரு பறவை

கழுகுகள் போன்ற பெரிய பறவைகளில் இறக்கைப் பட்டை பொருத்தப்படுகின்றது. இதனால் பறவை நோக்கர்களோ ஆய்வாளர்களோ தொலைவில் இருந்தே இரு கண்ணோக்கி மூலம் அடையாளம் காண இயலும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவைக்கு_வளையமிடல்&oldid=2750101" இருந்து மீள்விக்கப்பட்டது