ஆர்கியொட்ரிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர்கியொடெரிக்ஸ்

அறிமுகம்[தொகு]

Archaeopteryx lithographica (Berlin specimen).jpg

இவற்றிற்கு ஊர்வனவற்றின் அம்சங்களான பற்கள்,நீண்டவால்,மூக்கிலும் கால்களிலும் செதில்கள்,இறக்கையில் இரண்டு நகங்கள் இருந்தன.பொதுவாக,இவற்றின் எலும்புக்கூடு தீரோபாட் என்னும் டைனோசரின் எலும்புக்கூட்டை வெகுவாக ஒத்திருந்தது.ஆனால்,வாலில் இருபுறம் இருந்து சிறகுகள் கொண்ட இறக்கையும்,அவற்றை அசைக்குமாறு அமைந்த V வடிவ நெஞ்செலும்பும் விலா எலும்பும் ஆர்கியோடேரிக்ஸ் ஒரு ஆதிப்பறவை என்பதைத் தெளிவாக்கின.நெஞ்செலும்பு அகன்று இருந்ததால் பறக்க இயலாமல் வான்கோழி , தீக்கோழி போன்று ஓடித்திரிந்த தீரோபாடிலிருந்து உருவான இந்த ஆதிப்பறவை டைனோசர்களையும்,இன்றைய பறவைகளையும் இணைத்த தொடர்பு என்பது பொதுவான கருத்து.

தடய சான்றுகள்[தொகு]

ஜெர்மனியில் சோலன்ஹோபனில் ஜுராஸீக் சுண்ணாம்புப் படிவங்களில் படிந்து இருந்த ஆர்கியோடேரிக்ஸ் தொல்லுயிர் எச்சம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிய உதவும் ஒரு முக்கிய தடயமாகும்.இந்தப் படிவங்களில் 14கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 5 ஆர்கியோடேரிக்ஸ்களின் படிவங்கள் கிடைத்துள்ளன.தென் அமெரிக்காவில் இன்று வாழும் ஹோட்சின்(HOATZIN)என்னும் பறவைகளின் குஞ்சுகளுக்கு இறக்கைகளில் ஆர்கியோடேரிக்சிற்கு இருந்தது போல நகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

[1]

  1. சுகி.ஜெயகரன் (2015). மூதாதையரைத் தேடி. காலச்சுவடு பதிப்பகம்.. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89359-29-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கியொட்ரிக்ஸ்&oldid=2367106" இருந்து மீள்விக்கப்பட்டது