ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆண்டு என்பது ஒரு கால அளவாகும். இது ஒரு கோளானது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். நமது பூமியில் சாதாரண ஆண்டு 365 நாட்களையும் நெட்டாண்டு 366 நாட்களையும் கொண்டது.

குறியீடு[தொகு]

ஆண்டு என்ற அலகினைக் குறிக்க, உலக முழுவதும் ஒப்புமைப் பெற்ற ஒரு குறியீடு இன்னும் உருவாக்கப்படவில்லை. அனைத்துலக முறை அலகுகள் அமைப்பும் எவ்வித குறியீட்டையும் முன்மொழியவில்லை. இருப்பினும் இலத்தீனிய சொல்லான annus என்பதிலிருந்து a என்ற எழுத்தை பயன்படுத்துமாறு ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது. (NIST SP811[1] , ISO 80000-3:2006)[2] இந்த a என்பது நிலஅளவைக்குறிக்கும் எக்டேர் என்ற அலகையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் y அல்லது yr என்பது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. y அல்லது yr என்ற குறியீடுகள் விண்வெளி அறிவியலிலும், தொல்லுயிரியலிலும், நிலவியலிலும் வேறுபட்டு பயன்படுத்தப்படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. (எ.கா)10இலட்சம் ஆண்டுகள் என்பதனைக் குறிக்க myr என்றும், Ma என்றும் குறிப்பிடுகின்றனர்.

பெருக்கல் அலகுகள்[தொகு]

SI அலகுகளோடு இவை பெருக்கலின் மூலம் அறியப்படுகிறது.

Ma[தொகு]

  • Ma (for megaannum), என்ற கால அலகு பத்து இலட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது. (106=10,00,000=10 இலட்சம்) . நீண்ட காலத்தைக் குறிக்க பயனாகிறது.
    (எ.கா)கறையான், புதைப்படிவ காலம்: 228 - 0 Ma என்றால் 22,80,00,000 ஆண்டுகள் என்பதனைக் குறிக்கும்
    Ma என்பதனை, mya என்றும் குறிப்பிடுவர்.

எடுகோள்கள்[தொகு]

  1. Ambler Thompson, Barry N. Taylor (2008) (PDF). Special Publication 811: Guide for the Use of the International System of Units (SI). National Institute of Standards and Technology (NIST)(அமெரிக்க நாட்டுக்குரிய ஆய்வு). http://physics.nist.gov/Document/sp811.pdf. 
  2. "ISO 80000-3:2006, Quantities and units – Part 3: Space and time". செனிவா, சுவிட்சர்லாந்து: சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (2006).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டு&oldid=2222164" இருந்து மீள்விக்கப்பட்டது