உள்ளடக்கத்துக்குச் செல்

நெட்டாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெட்டாண்டு (Leap Year) என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கொண்டது ஆண்டாகும். எடுத்துக்காட்டாக பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டை குறிப்பிடலாம். பருவங்களும் வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை. எனவே, ஒரே அளவு நாட்களைக் கொண்ட நாட்காட்டி, காலப்போக்கில் அது நடக்கவேண்டிய பருவத்தில் இருந்து நகரும். இந்த நகர்வை ஓர் ஆண்டின் ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கூடுதலாக இணைப்பதன் மூலமாக சரிசெய்யலாம். நெட்டாண்டு அற்ற ஓராண்டு சாதாரண ஆண்டு என அழைக்கப்படுகிறது.

கிரெகோரியின் நாட்காட்டி

[மூலத்தைத் தொகு]

இன்று பரவலாக பயன்பாட்டில் உள்ள கிரெகொரியின் நாட்காட்டியானது பிப்ரவரி மாதத்துக்கு கூடுதலான 29வது நாளை, நான்கால் வகுக்கப்படும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது. எவ்வாறெனினும் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுக்கப்படும் ஆண்டுகளுக்கு மட்டுமே இது சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1600, 2000 என்பன நெட்டாண்டுகளான அதேசமயம் 1700, 1800, 1900 என்பன நெட்டாண்டுகளில்லை.

இதற்கான காரணம் வருமாறு: கிரெகோரியின் நாட்காட்டியானது இளவேனிற் சம இராப்பகல் நாள் மார்ச் 21 க்கு அருகாமையில் வருமாறு வடிவமைக்கப்பட்டதாகும். இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு நாளானது (மார்ச் 21 அல்லது அதற்கருகில் வரும் சந்திரனின் 14வது நாளுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும்) இளவேனிற் சம இராப்பகல் நாள் சார்பாக்க சரியாக இருக்கும்.

சம இராப்பகல் நாள் ஆண்டானது தற்சமயம் சுமார் 365.242375 நாள் நீளமானது. கிரெகோரியின் நெட்டாண்டு விதியானது சராசரி ஆண்டுக்கு 365.2425 நாட்களை கொடுக்கிறது. 0.0001 சற்று மிகையான கூடுதல் சேர்ப்பு காரணமாக 8000 ஆண்டுகளில் நாட்காட்டியானது ஒரு நாள் பிந்தி காணப்படும். ஆனால் 8000 வருடங்களில் சம இராப்பகல் நாள் வருடமானது முன்மொழியப்படமுடியாத அளவினால் சிறியதாக காணப்படும். எனவே கிரெகோரியின் நாட்காட்டி போதுமான அளவு துல்லியம் கொண்டுள்ளது.

ஆண்டுகளின் ஒப்பீட்டு

[மூலத்தைத் தொகு]

வானியலிலும் அன்றாட வாழ்விலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆண்டுகளின் ஒப்பீடு கீழே தரப்பட்டுள்ளது. பொதுவான பயன்பாட்டில் உள்ளவை அட்டவணையின் மேல்பகுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு வகையான ஆண்டுகளின் ஒப்பீடு
ஆண்டு வகைஆங்கிலத்தில்கால அளவு (நாட்கள்)விளக்கம்
சாதாரண ஆண்டுCommon Year365பிப்ரவரி 28 நாட்களைக் கொண்ட ஒரு சாதாரண நாட்காட்டி ஆண்டு.
நெட்டாண்டு (லீப் ஆண்டு)Leap Year366பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க ஒரு கூடுதல் நாள் (பிப் 29) சேர்க்கப்படும் ஆண்டு.
கிரெகொரியின் ஆண்டுGregorian Year365.2425நவீன நாட்காட்டியின் சராசரி ஆண்டு நீளம்.
சூரிய ஆண்டுSolar Year~365.242பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் பொதுவான காலம். (வெப்பமண்டல ஆண்டைக் குறிக்கும்.)
வெப்பமண்டல ஆண்டுTropical Year365.24219இரு அடுத்தடுத்த வசந்தகால சம இரவுப் பகல் நிலைகளுக்கு இடைப்பட்ட காலம் (பருவக்காலங்களின் அடிப்படை).
விண்மீன் ஆண்டுSidereal Year365.25636நிலையான விண்மீன்களைப் பொறுத்து பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்.
ஜூலியன் ஆண்டுJulian Year365.25வானியலில் ஒளியாண்டு போன்றவற்றை கணக்கிடப் பயன்படும் நிலையான அலகு.
சந்திர ஆண்டுLunar Year~354.3712 முழு நிலவுச் சுழற்சிகளைக் (Synodic months) கொண்ட காலம். (சூரிய ஆண்டை விட சுமார் 11 நாட்கள் குறைவு).
அண்மைநிலை ஆண்டுAnomalistic Year365.25964பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் நிலையிலிருந்து அடுத்த அதே நிலை வரையிலான காலம்(Perihelion).
கிரகண ஆண்டுEclipse / Draconic Year346.62007சூரியன் மீண்டும் அதே நிலவுக்கணுவை (Lunar node) வந்தடைய ஆகும் காலம். (கிரகண காலங்களை கணிக்க பயன்படும்).
சோதிக் ஆண்டுSothic Year~365.25சிரியசு (Sirius) விண்மீன் மீண்டும் தோன்றும் இடைவெளி (பண்டைய எகிப்து முறை).
பெஸலியன் ஆண்டுBesselian Year~365.2422ஒரு குறிப்பிட்ட சூரிய தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்ட பழைய வானியல் அளவு.
காசியன் ஆண்டுGaussian Year365.25690காசியன் ஈர்ப்பு மாறிலியை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த ஆண்டு.
விண்மீன் மண்டல ஆண்டுGalactic Year~22.5 - 25 கோடி ஆண்டுகள்சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். (பிரபஞ்ச ஆண்டு / பால்வெளி ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டாண்டு&oldid=4476505" இலிருந்து மீள்விக்கப்பட்டது