நாரை (வரிசை)
நாரை புதைப்படிவ காலம்:பின் கிரடேசியஸ் – ஹோலோசீன், | |
---|---|
மாகேம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | போனாபர்ட்டே, 1854
|
குடும்பங்கள் | |
சுமார் 5-10 வாழும் குடும்பங்கள் | |
நாரை வரிசை பறவைகளின் பரவல்
|
நாரை வரிசை அல்லது குருயிபார்மஸ் (Gruiformes) என்பது ஏராளமான வாழும் மற்றும் அற்றுவிட்ட பறவை குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு வரிசையாகும். இந்த வரிசையில் உள்ள உயிரினங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றன. குருயிபார்ம் என்ற சொல்லுக்கு "நாரை-போன்ற" என்று பொருள்.
பாரம்பரியமாக, வேறு எந்த வரிசைக்கும் தொடர்பில்லாத நீர்நிலைகளுக்கு அருகில் இரைதேடும் பறவைகள் மற்றும் நிலவாழ் பறவைகளின் குடும்பங்கள் ஒன்றாக குருயிபார்மஸ் வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 14 பெரிய நாரைகள், சுமார் 145 இன சிறிய காணான்கோழிகள், மேலும் 1 முதல் 3 உயிரினங்களைக் கொண்டுள்ள பல்வேறுபட்ட குடும்பங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் உள்ள மற்ற பறவைகள் இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமானது, அவற்றை எங்காவது ஓர் இடத்தில் வகைப்படுத்த வேண்டும் என்பதேயாகும். இதன் காரணமாக விரிவுபடுத்தப்பட்ட குருயிபார்மஸ் வரிசை உயிரினங்கள் தங்களுக்கென்று ஒரு தனித்துவமான கிளைப்பாட்டியலை கொண்டிருக்கவில்லை.
உசாத்துணை
[தொகு]- Alvarenga, Herculano M. F.; Höfling, Elizabeth (2003). "Systematic revision of the Phorusrhacidae (Aves: Ralliformes)". Papéis Avulsos de Zoologia 43 (4): 55–91. doi:10.1590/s0031-10492003000400001. http://www.scielo.br/scielo.php?script=sci_pdf&pid=S0031-10492003000400001&lng=en&nrm=iso&tlng=en.
- Cracraft, J (2001). "Avian evolution, Gondwana biogeography and the Cretaceous-Tertiary mass extinction event" (PDF). Proceedings of the Royal Society of London B 268 (1466): 459–69. doi:10.1098/rspb.2000.1368. http://journals.royalsociety.org/content/1pem5e906y94dc9l/fulltext.pdf. பார்த்த நாள்: 2020-04-25.
- Fain, M. G.; Houde, P. (2004). "Parallel radiations in the primary clades of birds". Evolution 58 (11): 2558–2573. doi:10.1554/04-235. https://archive.org/details/sim_evolution_2004-11_58_11/page/2558.
- Fain, M. G.; Houde, P. (2007). "Multilocus perspectives on the monophyly and phylogeny of the order Charadriiformes (Aves)". BMC Evolutionary Biology 7: 35. doi:10.1186/1471-2148-7-35. http://www.biomedcentral.com/1471-2148/7/35.
வெளி இணைப்புகள்
[தொகு]- Tree of Life: Gruiformes பரணிடப்பட்டது 2020-08-08 at the வந்தவழி இயந்திரம்