பூநாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூநாரை
Flamingos Laguna Colorada.jpg
பூநாரை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
உள்வகுப்பு: Neognathae
தரப்படுத்தப்படாத: Mirandornithes
வரிசை: Phoenicopteriformes
Fürbringer, 1888
குடும்பம்: போனிகொப்டிரிடே
Bonaparte, 1831
பேரினம்: Phoenicopterus and
Phoenicoparrus

L. 1758
Flamingo range.png
பூநாரை பரம்பல்

பூநாரை (Flamingos / Flamingoes[1]) அல்லது செங்கால் நாரை என்பது நாரை வகைப் பறவையாகும். கரையோரப் பறவையாகிய இது போனிகொப்டிரிடே அல்லது செங்கால்நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு போனிகொப்டிரசு இனமாகும். நான்கு பூநாரை இனங்கள் அமெரிக்காவிலும் இரண்டு பழைய உலகிலும் உள்ளன. இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். நீண்ட முடியற்ற சிவந்த கால்கள் இதற்கு இருக்கும் அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும். சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும். இதன் ஆங்கிலப் பெயரான "பிளமிங்கோ" இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.[2]

படக்காட்சியகம்[தொகு]

அல்டிபிளானோ, பொலீவியாவில் பூநாரைகள்

உசாத்துணை[தொகு]

  1. Both forms of the plural are attested, according to the Oxford English Dictionary
  2. புகலிடமாகும் சென்னை!தி இந்து தமிழ் 30 சனவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூநாரை&oldid=2381957" இருந்து மீள்விக்கப்பட்டது