மயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மயில்
தோகை விரித்தாடும் இந்திய ஆண் மயில்
தோகை விரித்தாடும் இந்திய ஆண் மயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Galliformes
குடும்பம்: Pavoninidae
பேரினம்: Pavo
லின்னேயஸ், 1758

Species

Pavo antiquus
Pavo annamensis
Pavo spicifer
Pavo javanensis
Pavo imperator
Pavo cristatus

மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.

இந்திய மயில்[தொகு]

(பேவோ கிறிஸ்ட்டாட்டஸ் - Pavo cristatus), இந்தியாவையும், இலங்கையையும் சேர்ந்தது. பச்சை மயில் (பேவோ மியூட்டிக்கஸ் - Pavo muticus), மியன்மார் கிழக்கு தொடக்கம் ஜாவா வரையுள்ள பகுதியில் வாழ்கின்றன. பல்வேறு கிராமங்களில் வீடுகளில் மயில் வளர்க்கப்படுகிறது. IUCN, பச்சை மயில்களை, அழியும் அபாயமுள்ளவையாகப் பட்டியலிட்டுள்ளது. வேட்டையாடுவதாலும், உகந்த வாழிடங்கள் குறைந்து வருவதாலும் இவ்வபாயம் உள்ளது. இரண்டு இனங்களும் இனக்கலப்புக்கு உள்ளாகக் கூடியவை.

இலக்கியத்தில் மயில்[தொகு]

பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்சை
-குறுந்தொகை 391

பிற தகவல்கள்[தொகு]

வெள்ளை மயில் (White Peacock)
  • மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.
  • ஆங்கிலத்தில் மயிலின் பலவின்பாற் பெயர் Peafowl ஆகும்.[1] ஆண்பாற் பெயர் Peacock ஆகும்.[2] பெண்பாற் பெயர் Peahen ஆகும்.[3]
  • ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.

இந்தியாவில் 1972 - ஆம் ஆண்டு முதல் சட்டம் இயற்றி மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

குஞ்சுகளுடன் இந்தியப் பெண் மயில்

சான்றடைவு[தொகு]

  1. http://www.eudict.com/?lang=engtam&word=peafowl
  2. http://www.eudict.com/?lang=engtam&word=peacock
  3. http://www.eudict.com/?lang=engtam&word=pea+hen

வெளியிணைப்பு[தொகு]

  1. மயில் தேசியப்பறவையானது எப்படி?
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயில்&oldid=1893421" இருந்து மீள்விக்கப்பட்டது