வைக்கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டேனியக் கடலோடிகள். 12 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் வரையப்பட்டது.

வைக்கிங் என்பவர்கள், நோர்ஸ் இனத்தைச் சேர்ந்த, தேடலாய்வோரும் (explorers), போர்வீரர்களும், வணிகரும், கடல் கொள்ளையரும் ஆவர். இவர்கள் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஐரோப்பாவின் பல பகுதிகளைத் தாக்கி அங்கே தமது குடியேற்றங்களை ஏற்படுத்தினர். இவர்கள் தமது புகழ் பெற்ற நீளக்கப்பல்களைப் பயன்படுத்திக் கிழக்கே கொன்ஸ்டன்டினோப்பிள் மற்றும் ரஷ்யாவின் வொல்கா ஆறு வரையும், மேற்கில் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, நியூபவுண்ட்லாந்து ஆகிய இடங்கள் வரையும் பயணம் செய்தனர். வைக்கிங்குகளின் விரிவாக்கம் நடைபெற்ற இக் காலம் "வைக்கிங் காலம்" என அழைக்கப்படுகின்றது. இக் காலம், ஸ்கண்டினேவியா, பிரித்தானியத் தீவுகள், பொதுவாக ஐரோப்பா ஆகியவற்றின் வரலாற்றின் பெரும்பகுதியை உருவாக்குகின்றது.

வைக்கிங்குகள் ஒரு ஜெர்மானியப் பிரபுத்துவக் காட்டுமிராண்டிகள் என்னும் ஒரு வியப்பார்ந்த தோற்றம் 17 ஆம் நூற்றாண்டில், சிறப்பாக விக்டோரியா காலத்தின் வைக்கிங் மறுமலர்ச்சிக் காலத்தின்போது உருவாக்கப்பட்டது. இது பிரித்தானியாவில், செப்டெண்ட்ரியனலிசம் என்றும், ஜெர்மனியில் வக்னேரியன் அல்லது ஜெர்மானிய உள்ளுணர்வு என்றும், ஸ்கண்டினேவிய நாடுகளில், வியப்பார் தேசியம், ஸ்கண்டினேவியனியம் ஆகிய பெயர்களிலும் இம் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவற்றின் ஒரு தேய் வழக்காகவே தற்காலத்தில் வைக்கிங்குகள் கார்ட்டூன் கதைமாந்தராகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கிங்&oldid=1830343" இருந்து மீள்விக்கப்பட்டது