ஆயுர்வேதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆயுர்வேதம் (Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद, ஆயுர்வேதம்) என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத என்பது கல்வி தொடர்பானது அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது. எனவே ஆயும்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுசுருத்த சங்கிதை, சரக சங்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுள்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.

மேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது.

மேலோட்டம்[தொகு]

நிலம். நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பொருட்களாலேயே மனித உடல் உள்ளிட்ட அண்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்னும் கருத்தையே ஆயுர்வேதம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை பற்றிய விஞ்ஞானம். மனிதன் நோயின்றி முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வழி வகுப்பது ஆயுர்வேதம். முனிவர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மருத்துவ நூல்கள்தான், இன்றைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையாக மனிதர்களுக்குப் பலனளித்துக் கொண்டிருக்கின்றன. திட்டமிடல்: காலை எழுந்தவுடன் கடவுள் சுலோகங்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என ஒன்றே முக்கால் மணி நேரம் கடந்தவுடன், அன்றைய வேலைகள் குறித்து மனதுக்குள் திட்டமிடல் வேண்டும். இவ்வாறு அன்றைய வேலைகளை மனம் திட்டமிடுவதே தியானம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு காலை 4.30 மணிக்கு எழுந்து தினமும் முறையாக அனைத்தையும் செய்வதை எமம், நியமம் (சுய கட்டுப்பாடு, ஒழுக்கம்) என்கிறது ஆயுர்வேதம். நோய் வராமல் தடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை மூலங்கள்.

ஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. குமுதம் ஜோதிடம்; 6.9.2013;

மேலும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுர்வேதம்&oldid=1765068" இருந்து மீள்விக்கப்பட்டது