சந்திர தேவன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சந்திர தேவன் | |
---|---|
![]() | |
தேவநாகரி | चन्द्र |
சமசுகிருதம் | Chandra |
வகை | தேவன், நவக்கிரகம் |
இடம் | சந்திரலோகம் |
கிரகம் | திங்கள் |
மந்திரம் | ஓம் சந்திராய நமக |
துணை | 27 நட்சத்திரங்கள் |
பெற்றோர்கள் | அத்திரி,அனுசுயா |
குழந்தைகள் | புதன்,பரிவேடன் |
சந்திரன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் ஒருவராவார். இவருக்கு சோமன் என்ற பெயரும் உண்டு.
வானில் நட்சத்திரங்களாக வலம் வருகின்ற தட்சனின் 27 மகள்களும் சந்திரன் மேல் காதல் கொண்டார்கள். சந்திரனை அடிமை யாய் அடையும் பொருட்டு பிரம்மா தவம் செய்வித்தார். இருப்பினும் இவர்களில் மிகவும் அழகான ரோகினியுடன் மட்டும் சந்திரன் காலம் கழித்தார். அதனால் தங்கள் தந்தையிடம் நட்சத்திர பெண்கள் புகார் தெரிவித்தனர்.
தனது மகள்களை சமமாக நடத்தாதமையினால் சந்திரன் அழகு நாளொன்றுக்கு ஒன்று என அழிந்து மறைந்து போகும்படி தட்சன் சாபமிட்டார்.
பதினான்கு அழகுகளையும் இழந்த சந்திரன் மீதமிருக்கும் அழகினை காப்பாற்ற சிவபெருமானிடம் தஞ்சமடைந்தார்.