கோலோகம்
Appearance
கோலோகம் என்பது கிருஷ்ணனும் ராதையும் கோபியரும் வாழும் லோகமாக (உலகம்) இந்து தொன்மவியல் புராணங்கள் குறிப்படுகின்றன. திருமாலின் உலகமான வைகுண்டத்தின் ஊர்த்தவ பாகத்தில் இந்த கோலோகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கோ என்றால் பசுவாகும், கோலோகம் என்பது பசுவின் உலகம் என்று பொருள்படுகிறது. இந்த லோகமானது ஆனுலகு (ஆ-பசு) என்றும் அறியப்படுகிறது.
தேவர்களும் அசுரர்களும் அமிழ்தம் வேண்டி கடைந்த பாற்கடலிருந்து தோன்றிய நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்ற ஐந்து தெய்வீக பசுக்கள் இங்கு வசிக்கின்றன.[1] இந்த உலகின் அரசனாக கிருஷ்ணனும், அரசியாக ராதையும் உள்ளார்கள்.
கார்த்திகை மாதத்தில் ராசமண்டபம் கட்டி பூசையையும் பஜனையும் செய்வோர் கோலோகத்தினை அடையலாமென மகாபுராணங்களில் ஒன்றான பிரம வைவர்த்த புராணம் கூறுகிறது.