சந்திரமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலக் கணிப்பில் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறை சந்திரமானம் எனப்படும்.

சந்திர மாதம்[தொகு]

சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் ஆகும். இவ்வாறு சுற்றி வரும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு வட்டமாகத் தெரியும் நிலைக்கு வரும். பின்னர் அதன் உருவம் தேய்ந்து மீண்டும் முற்றும் தெரியாத நிலைக்கு வரும். இவ்வாறு முற்றும் தெரியாத நிலையுள்ள நாள் அமாவாசை எனப்படும். முழுமையாகத் தெரியும் நாள் பூரணை என்று அழைக்கப்படும். சந்திரன் பூமியை இவ்வாறு தொடர்ந்து சுற்றி வருவதனால் அமாவாசையும் பூரணையும் மாறி மாறி வருகின்றன. இரண்டு அடுத்தடுத்து வரும் அமாவாசைகளுக்கு இடப்பட்ட காலமும், அவ்வாறான இரண்டு பூரணைகளுக்கு இடைப்பட்ட காலமும் சமனான அளவு கொண்டவை. இந்தக் கால அளவு சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றிவர எடுக்கும் காலமான 29 நாட்கள் 12 மணி 44 நிமிடங்கள் 03 விநாடிகள் ஆகும். சந்திர மாதத்தைக் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு முறையில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொள்ள, மற்ற முறை பூரணையை மாதத்தொடக்கமாகக் கொள்கிறது. முதல் முறை அமாந்த முறை என்றும், இரண்டாவது பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது.

சந்திர மாதத்தின் உட்பிரிவு[தொகு]

சந்திரனின் தேய்வதும், வளர்வதுமான தோற்றப்பாடு சந்திர மாதத்தை இயல்பாகவே இரு பிரிவுகளாக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்துக்காலக் கணிப்பு முறையில், சந்திர மாதம் இருபிரிவுகளாகக் (பட்சம்) குறிப்பிடப்படுகின்றன. அமாவாசை தொடக்கம் அடுத்த பூரணை வரையிலான வளர்பிறைக் காலம் சுக்கில பட்சம் என்றும், பூரணையிலிருந்து அடுத்த அமாவாசை வரையான தேய்பிறைக்காலம் கிருஷ்ண பட்சம் என்றும் கூறப்படுகின்றது. இந்த ஒவ்வொரு பட்சமும் அமாவாசை, பூரணை நீங்கலாக 14 திதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவையே சந்திர நாட்கள். இவற்றின் பெயர்கள் வருமாறு:

  1. அமாவாசை
  2. பிரதமை
  3. துதியை
  4. திருதியை
  5. சதுர்த்தி
  6. பஞ்சமி
  7. சஷ்டி
  8. சப்தமி
  9. அட்டமி
  10. நவமி
  11. தசமி
  12. ஏகாதசி
  13. துவாதசி
  14. திரியோதசி
  15. சதுர்த்தசி
  16. பூரணை

ஆண்டுக் கணக்கும், சந்திரமானமும்[தொகு]

இந்திய முறைகளில் சந்திர மாதப் பெயர்கள்[தொகு]

அதிக மாதமும், அழிந்த மாதமும்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரமானம்&oldid=2613022" இலிருந்து மீள்விக்கப்பட்டது