துவாபர யுகம்
துவாபர யுகம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி சதுர்யுகங்களுள் ஒன்றாகும். இந்த யுகமானது 8,64,000 (எட்டு லட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண்டுகள் கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. திருமால் அவதாரங்களில் கிருஷ்ணராக இந்த யுகத்தில் தான் அவதரித்தார். மகாபாரதப் போரும் இந்த யுகத்தில்தான் நடைபெற்றது. லெமூரியா கண்டமும் இந்த யுகத்தில் தான் இருந்தது. இதற்கு அடுத்த யுகமான கலியுகம் இந்த ஆண்டுகளின் எண்ணிக்கையில் பாதி அளவினை மட்டுமே கொண்டுள்ளது.[1]