கிருத யுகம்
Jump to navigation
Jump to search
கிருத யுகம் அல்லது சத்திய யுகம் என்பது இந்து சமயத்தில் சொல்லப்படும் நான்கு யுகங்கள் அல்லது பெரும் காலப் பிரிவுகளில் ஒன்று. இந்து சமயத்தின்படி இது உண்மையின் காலம் எனப்படுகிறது. அக் காலத்தில் மனித இனம் கடவுளரால் ஆளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வேலையும், வெளிப்பாடும் தூய இலட்சியத் தன்மைக்கு நெருக்கமாக இருந்தது. இது சில சமயங்களில் பொற்காலம் எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. கிருத யுகத்தில் மக்கள் நீண்ட வாழ்நாட்களையும் கொண்டிருந்தனராம்.
சுழற்சி முறையில் வருவதாகக் கருதப்படும் நான்கு யுகங்களில் கிருத யுகமே முதல் யுகம். அறிவு, தியானம், தவம் என்பன இந்த யுகத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. இந்த யுகத்தில் மனிதரின் வாழ்நாள் 100,000 ஆண்டுகளாக இருந்ததாகப் பழங்கால இந்துக்கள் நம்பினர்.