சித்த மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சித்த மருத்துவம்[தொகு]

சித்து என்பதற்கு “என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு” என்று பொருள். இத்தகைய பேரறிவைத் தம்முடைய படிப்பறிவாலும் பட்டஜிவாலும் கைவரப் பெற்றவர்களே “சித்தர்கள்” இவர்கள் மூலிகைத் தாவரங்களை ப்பயன்படுத்தி உருவாக்கிய மருத்துவ முறையே “சித்த மருத்துவம்” ஆகும். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” – என்பது முன்னோர் வாக்கு நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச்செயல் - திருக்குறள் (948) “ உடம்பால் அழியின் உயிரால் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் - திருமூலர் “மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாம் மறுப்பது உளநோய் மருந்தெனலாம் மறுப்பது இனிநோய் வாராதிருக்க மறுப்பது சாவை மறுந்தெனலாமே” எனவே உடல் நோயைப் போக்குவதும், உளநோயைப் போக்குவதும், நோய் வராமல் தடுப்பதும், சாவைத்தடுப்பதும் ஆகிய குணங்களைக் கொண்டது தான் “சித்த மருத்துவம்” உணவே மருந்து மருந்தே உணவு என்பதன் மூலம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே சித்த மருத்துவமும் தோன்றியது.

  • சித்தர்கள் தோன்றிய காலம் 10,000 - 4000 ஆகும்.
  • ஆயுள் வேதம் - கி.மு 300
  • உரோம மருத்துவம் - கி.பி 600
  • யுனானி மருத்துவம் - கி.பி 600
  • கிரேக்க மருத்துவம் - கி.பி 900
  • அலோபதி மருத்துவம் - கி.பி. 170
  • ஒமியோபதி மருத்துவம் - கி.பி 1800

சித்த மருத்துவம் சித்தர்களால் தமிழில் எழுதப்பட்டுமூலிகைத் தாவரங்களைப் பயன்படுத்தி உலகமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பின்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே “ என்பதினால், பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட உலகத்தைப் போன்றே உடலினுடைய அனுமப்பிற்கும் பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியனவைகளே அடிப்படையாகும்.

மேற்கோள்[தொகு]

  1. ஆதார நுல் : சித்த மருத்துவத்தின் சிறப்புகள் ( தொகுப்பு II)

தொகுப்பாசிரியர் : திருமதி. ம. ந. புஷ்பா, காப்பாட்சியர், தாவரவியற்பிரிவு அரசு அருங்காட்சியகம், சென்னை / சான்று நுல் : அகஸ்தியர் பன்னீராயிரம்ஆசிரியர் - அகத்தியர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்த_மருத்துவம்&oldid=2337456" இருந்து மீள்விக்கப்பட்டது